dinamalar telegram
Advertisement

இன்றைய போட்டோ

22 May 2022

புதுச்சேரி அடுத்த முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தெப்ப உற்சவத்தில் அர்ஜுனன் திரவுபதை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Share

22 May 2022

சென்னை மாநகராட்சி சார்பில், அழகுபடுத்தும் விதமாக கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் செடிகள் அமைப்பதற்கான பணிகள் ஜரூராக நடைபெறுகிறது.

Share

22 May 2022

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் உள்ள லஷ்மி நரசிம்ம பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நடந்த தேரோட்டத்தில், நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் வேடமணிந்த பக்தர்கள் பஜனைப் பாடல்கள் பாடியவாறு வீதி வலம் வந்தனர்.

Share

22 May 2022

துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையை யொட்டி, சாலையின் மைய தடுப்புகளை அழகுபடுத்தும் விதமாக பூச்செடிகள் புதிதாக நடப்பட்டுள்ளது.இடம். வாலாஜா சாலை.

Share

22 May 2022

கோவை மதுக்கரை மார்க்கெட் மெயின் ரோடு, இந்திரா நகர், முனியப்பன் கோவில் வீதியில் உள்ள ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவிலில் 31வது ஆண்டு திருவிழாவையொட்டி நடந்த திருவிளக்குப் பூஜையில் கலந்துகொண்ட பெண்கள்.

Share

22 May 2022

மழையை எதிர்பார்த்து திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உழவுப் பணி நடந்தது.

Share

22 May 2022

சென்னை, கிண்டி சிறுவர் பூங்காவில் புதிய வரவாக பிறந்து ஜந்து நாட்களே ஆன புள்ளி மான் குட்டி.

Share

22 May 2022

கடலூர் அடுத்துள்ள குள்ளஞ்சாவடி பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் எள்ளு சாகுபடி பயிர் செய்துள்ளனர்.

Share

22 May 2022

சிவகங்கை அருகேஉள்ள ஒக்கூரில் விளையும் புளியம்பழம் கிலோ ரூ. 70க்கு விற்பனை ஆகிறது.

Share

22 May 2022

கோடை விடுமுறை காரணமாக சென்னை சேத்துப்பட்டு பசுமை பூங்காவில், படகு சவாரி செய்து மகிழும் பொதுமக்கள்.

Share

22 May 2022

வைகாசி திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் வரம்சித்தி விநாயகர், காளியம்மன் கோயிலில் தெப்ப உற்சவ அலங்காரத்தில் அம்மன்.

Share

22 May 2022

சென்னை மாநகராட்சி சார்பில், மெரினா கடற்கரையில் உள்ள செயற்கை நீரூற்று வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளது.

Share

21 May 2022

கொட்டும் மழையில் கோவை குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள்.

Share

21 May 2022

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ. 85 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share

21 May 2022

கோவை கொடிசியா அருகே வருகிற ஜூன் 2 ஆம் தேதி இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளதால் நிகழ்ச்சி டிக்கெட்டை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி அரங்காவலர் மலர்விழி வெளியிட்டார். அருகில் ஸ்ரீ ஆர்ட்ஸ் சிவகுமார், அருண் இவெண்ட்ஸ் அருண், கிரீன் அண்ட் கிரீன் செந்தில் உள்ளிட்டோர். இடம் கோவை ரெசிடென்சி ஓட்டலில்

Share

21 May 2022

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சாலையில் ஆபத்தான முறையில் ரோட்டை கடக்கும் பெண்

Share

21 May 2022

சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள்.

Share

21 May 2022

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கல் துறை பணிகள் குறித்து அலுவலர்களுக்குடனான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அலுவலகர்கள்.

Share

21 May 2022

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்ற வீரர்கள். இடம்: பெரியமேடு.

Share

21 May 2022

கோடை வெயிலுக்கு இதமான குளியல். இடம் : செம்பரம்பாக்கம் ஏரி.

Share

21 May 2022

ஊட்டி அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் நடந்த , உதகை 200 மற்றும் நலத்திட்ட வழங்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் , ஊட்டி 200 விழா சிறப்பு மலரை வெளியிட்டார், உடன் எம்.பி.,ராஜா, செய்தி தொடர்புத்துறை அமைச்சர் சாமிநாதன் , வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் மற்றும் ஊட்டி எம்.எல்.ஏ. கனேசன் கலந்து கொண்டனர்.

Share

21 May 2022

கடலூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட இளைஞர் காங்.கட்சி சார்பில் வழக்கறிஞர் சந்திரசேகரன் தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது.

Share

21 May 2022

கொட்டும் மழையில் கோவை குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள்.

Share

21 May 2022

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், நடந்த குரூப் 2 தேர்வு, தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் நடந்தது. இதில், தேர்வு எழுதிய பட்டதாரிகளின் குழந்தைகளை, அவர்களது உறவினர்கள் கல்லூரி வளாகத்தில் வைத்து காத்திருந்தனர்.

Share

21 May 2022

பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழகத்தில் குரூப் 2 தேர்வு எழுத வந்தவர்கள் மையத்திற்க்கு வெளியே காத்திருக்கின்றனர். இடம்; பல்லாவரம்.

Share

21 May 2022

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் உள்ள லஷ்மி நரசிம்ம பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நடந்த தேரோட்டத்தில், வடம் பிடித்து தேர் இழுத்த பெண் பக்தர்கள்.

Share

21 May 2022

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்து, ஜவர்பாணியை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்

Share

21 May 2022

ஊட்டி தாவரவியல் பூங்கா, மலர் கண்காட்சியில் , மலர்களை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்.

Share

21 May 2022

விழுப்புரத்தில் விற்பனைக்கு வந்து உள்ள பலாப்பழம்.

Share

21 May 2022

கொடைக்கானல் ரோஜா பூங்காவில் பூத்துள்ள டான்சிங் டால் பூ.

Share

21 May 2022

புதுச்சேரி அடுத்த முருங்கப்பாக்கம் திரெளபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்தனர்.

Share

21 May 2022

மழை விட்டு வெயில் அடித்ததால் உடுமலை கல்லாபுரத்தில் விவசாயிகள்மிஷின் மூலம் நெற்கதிர்களை அறுவடை செய்கின்றனர்.

Share

21 May 2022

ஊட்டி தாவரவியல் பூங்கா, மலர் கண்காட்சியில் நடந்த பாட்டு கச்சேரியில், மகிழ்ச்சியில் நடனமாடும் பூங்கா ஊழியர்கள்.

Share

20 May 2022

சென்னையில் காலை முதலே வெப்பம் அதிகரித்து காணப்பட்டாலும் மாலை வேளையில் குளிர்காற்று வீசப்பட்டு கரு மேகம் சூழ்ந்து மழை வருவது போல் காணப்பட்டது. இடம்: மெரினா.

Share

20 May 2022

புதுச்சேரி காங் கட்சி சார்பில் பேரறிவாளன் விடுதலை செய்ததை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்தும் மெழுகுவத்தி ஏந்தியும், இந்திராகாந்தி சிலையில் இருந்து ராஜிவ் சிலை வரை ஊர்வலம் சென்றனர்.

Share

20 May 2022

திண்டுக்கல்லில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள்.

Share

20 May 2022

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அய்யாபட்டி ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரரை உதைத்த காளை.

Share

20 May 2022

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு செய்து வரைபடங்களை பார்வையிட்டார்

Share

20 May 2022

சென்னை ஐ.சி.எப்.,பில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் அதிவிரைவு ரயிலுக்கான பெட்டியை பார்வையிட்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ். அருகில் ஐ.சி.எப்., பொது மேலாளர் அகர்வால் உள்ளிட்டோர்.

Share

20 May 2022

ஊட்டி தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சியில், பழங்குடியினர் போல் மலர் அலங்கார பொம்மைகள்.

Share

20 May 2022

சென்னை ஐ.சி.எப்.,பில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் அதிவிரைவு ரயிலுக்கான பெட்டிகள்.

Share

20 May 2022

திருச்சி ரயில்வே ஜங்ஷனில், ரயில் பயணிகள் சேவை குழு, உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.

Share

20 May 2022

குரூப் 2 தேர்வு வினாத்தாள், வைக்கப்பட்டுள்ள திண்டிவனம் நேரு வீதியில் உள்ள கருவூலத்திற்கு, பாதுகாப்பிற்காக தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது

Share

20 May 2022

விழுப்புரம் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை தொடர்பான அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடந்தது. அருகில் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான். கலெக்டர் மோகன்.

Share

20 May 2022

கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Share

20 May 2022

சென்னையில் சாலையின் மைய தடுப்புகளை அழகுபடுத்தும் விதமாக புதிதாக வைக்கப்பட்டுள்ள செடிகள்.இடம்.அரும்பாக்கம்

Share

20 May 2022

சிவகங்கையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

Share

20 May 2022

புதுச்சேரி காவல்துறையின் பணிபுரிந்து வந்த ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்களுக்கு பல்நோக்கு உதவியாளர் பணி ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். அருகில் சபாநாயகர் செல்வம் ,அமைச்சர்கள் நமச்சிவாயம் , லஷ்மி நாராயணன்.

Share

20 May 2022

மழை விட்டு வெயில் அடித்ததால் உடுமலை கல்லாபுரத்தில் விவசாயிகள் மிஷின் மூலம் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை டிராக்டரில் கொட்டுகின்றனர்.

Share

20 May 2022

இலங்கை வசமுள்ள படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Share

20 May 2022

சென்னை , நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது . ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.

Share

20 May 2022

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். கண்காட்சியில் பூத்துக்குலுங்கும் மலர்கள்.

Share

20 May 2022

விழுப்புரம் டு நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி ஜரூராக நடந்து வருகிறது. இடம்.கடலூர். சிதம்பரம் சாலை ஆலப்பாக்கம்.

Share

20 May 2022

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உயரமாக இருக்கும் வேகத்தடைகள்.

Share

20 May 2022

திருப்பூர், காட்டுவளவு செரீப் காலனி சந்திப்பில் தெருவிளக்கு எரியாததால் அங்கு வைக்கப்பட்டுள்ள கண்ணாடி வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை.

Share

20 May 2022

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் உலகத் தரத்தில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. அதற்காக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.

Share

20 May 2022

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் உலகத் தரத்தில் மாற்றி அமைக்கப்பட உள்ளது அதற்கான மாடல் படம்.

Share

20 May 2022

ஊட்டி தாவரவியல் பூங்காவில், மலர் கண்காட்சியை முன்னிட்டு , மலர் அலங்காரம் நடைபெற்று வருகிறது.

Share

19 May 2022

ஊட்டிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் , சேரிங்கிராஸ் பகுதியில் வரவேற்பு அளித்த கட்சியினர்களிடம் பேசினார்.

Share

19 May 2022

நரிக்குடி அருகே அம்மன்பட்டி காளியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் காளை பிடிக்கும் மாடு பிடி வீரர்கள்.

Share

19 May 2022

சென்னை மாநகராட்சி பெண் கவுன்சிலர்களுக்கான சுகாதாரம் மற்றும் பாலினம் குறித்த கருத்தரங்கத்தில் பங்கேற்ற பெண் கவுன்சிலர்கள்.இடம்: ரிப்பன் மாளிகை வளாகம்.

Share

19 May 2022

சென்னை மாநகராட்சி பெண் கவுன்சிலர்களுக்கான சுகாதாரம் மற்றும் பாலினம் குறித்த கருத்தரங்கம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது. உடன் கமிஷனர் ககன்தீப்சிங் பேடி.இடம்: ரிப்பன் மாளிகை வளாகம்.

Share

19 May 2022

சென்னையில் உள்ள மூப்பனார் மேம்பாலத்தின் சுவர்களில் மாநகராட்சி சார்பில் வர்ணம் பூசும் பணி ஜரூராக நடந்தது வருகிறது.இடம் : நந்தனம்.

Share

19 May 2022

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேடையில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு அறிக்கை முன்னிட்டு ஆர்டிஓ அலுவலகத்தில் கூடுதல் கலெக்டர் தலைமையில் தீட்சிதர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Share

19 May 2022

அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் வரதராஜ பெருமாள் உடனுறை பெருந்தேவி தாயார் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்தனர்.இடம்: தண்டையார்பேட்டை, சென்னை.

Share

19 May 2022

கடந்த ஒரு வருடகாலமாக சிட்லப்பாக்கம் ஏரி சீரமைக்கும் பணி நிறுத்தியதை கண்டித்து அ.தி.மு.க ., சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது .இடம் : சிட்லப்பாக்கம்

Share

19 May 2022

தாம்பரம் அடுத்த பெரிய ஏரியில் கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்கள் ஏரிக்குள் வீடுகளை கட்டிக்கொண்டே வருகின்றனர் மேலும் ஏரிக்கரை முழுவதும் அடர்த்தியாக கருவேல மரங்கள் வளர்ந்தும் மற்றும் ஏரியினுள் ஆகாயத்தாமரை செடிகள் படர்த்துள்ளது .

Share

19 May 2022

ஓரம்போ! ஓரம்போ! தென்னங்கீற்று வண்டி வருது. ஒரம் போ! ஓரம் போ! இடம் : விழுப்புரம்.

Share

19 May 2022

சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் குறுங்காடு அமைக்கும் திட்டத்தை எஸ்.பி.செந்தில்குமார் மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார்.

Share

19 May 2022

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் வேலூர் சாலை சந்திப்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்கப்படும் இடத்தை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

Share

19 May 2022

மேட்டுப்பாளையம் வழியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஊட்டி சென்றார். மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் தொண்டர்கள் கூட்டத்தால் பஸ் ஸ்டாண்டுக்கு பேருந்துகள் வர இயலவில்லை. பயணிகளும் நீண்ட சிரமத்திற்கு உள்ளாகினர்.

Share

19 May 2022

முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலைக்கு காரணமானவர்களை விடுதலை செய்ததை கண்டித்து மதுரையில் காங்., சார்பில் வாயில் வெள்ளை துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Share

19 May 2022

கோவை ரெசிடென்சி ஓட்டலில் நடந்த தொழிற்துறையினருடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அருகில் கலெக்டர் சமீரன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழிற்துறை அமைச்சர் அன்பரசன், தொழிற்துறை செயலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர்.

Share

19 May 2022

தஞ்சாவூரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் அளவிலான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்களை, மேற்கு போலீசார் பறிமுதல் செய்து, ஐந்து பேரை கைது செய்தனர். அதனை, தஞ்சாவூர் சரக டிஐஜி கயல்விழி பார்வையிட்டார்.

Share

19 May 2022

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில், சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆர்பாட்டத்தில், வாயில் துணியை கட்டிக் கொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய பெண்கள்.

Share

19 May 2022

கோவை வ உ சி மைதானத்தில் ஓராண்டு சாதனை புகைப்பட கண்காட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில் கலெக்டர் சமீரன், செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன், எம்பி ராசா, மாநகராட்சி மேயர் கல்பனா உள்ளிட்டோர்.

Share

19 May 2022

ஊட்டி தாவரவியல் பூங்கா, மலர் கண்காட்சி மலர் அலங்கார பணிகளை கலெக்டர் அம்ரித் பார்வையிட்டார்.

Share

19 May 2022

தஞ்சாவூரில் 107 வது ஆண்டாக முத்துப் பல்லக்கில் திருவீதி விழாவி நடைபெற்றது. 8 கோவில்களில் உள்ள விநாயகர் மற்றும் முருகன் காளியம்மன் ஆகிய கோவில்களில் உற்சவ மூர்த்திகள் ராஜ வீதிகளில் முத்துப் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். (சின்ன அரிசி கார தெரு பாலதண்டாயுதபாணி சாமி).

Share

19 May 2022

வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் இருக்கும் மீன்களை வேட்டையாடும் பறவைகள்.இடம்: சிவகங்கை அருகே மேலவாணியங்குடி.

Share

19 May 2022

மகாபலிபுரம் அருகேநெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கப்பல்கள் மோசமான வானிலை காரணமாக சென்னைகாசிமேடு மீன்பிடி துறைமுகம் கொண்டு வந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Share

19 May 2022

புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்த கோடைக்கால விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு எம்.எல்.ஏ.கள்., அனிபால்கென்னடி, செந்தில்குமார், சான்றிதழ்களை வழங்கினர்.

Share

19 May 2022

கோவை அவினாசி ரோடு வழியாக தமிழக முதல்வர் வருவதை முன்னிட்டு இரவு நேரத்தில் பல மணி நேரம் பஸ்சிற்காக காத்திருந்த பொதுமக்கள். இடம்: கோவை பீளமேடு

Share

18 May 2022

சென்னை துறைமுகத்தில் இருந்து, தமிழக அரசு சார்பில் இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் கப்பல்.

Share

18 May 2022

சென்னை துறைமுகத்தில் இருந்து, தமிழக அரசு சார்பில் இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் கப்பலை கொடியசைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

Share

18 May 2022

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா முன்னிட்டு பெருமாள் பூ பல்லாகில் உலா வந்தார்.

Share

18 May 2022

தமிழக கவர்னர் உடன் பா.ஜ., நிர்வாகிகள் சந்திப்பு நடந்தது. ஆர்.ஏ.புரத்தில் வீடு இடித்ததை கண்டித்து தீக்குளித்து இறந்த கண்ணையாவின் மனைவி, மகன் நீதி கேட்டு மனுவை அளித்தனர்.

Share

18 May 2022

திருப்பூர், குமார் நகர் மின்வாரிய அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது.

Share

18 May 2022

தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளின் வரி வசூல் செய்ய சென்ற போது அதிகாரிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.. இடம் : மேற்கு தாம்பரம்

Share

18 May 2022

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி ஆண்டு விழாவில் விருந்தினர்களை வரவேற்றபோது குத்தாட்டம் போட்ட மாணவ, மாணவியர்கள்.

Share

18 May 2022

சென்னையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அவல நிலையை கண்டித்து அனைத்து ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இடம்: எழும்பூர்

Share

18 May 2022

கடலூரில் மாணவி தனலட்சுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து கல்லூரி முன்பு உறவினர்கள் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Share

18 May 2022

ராமேஸ்வரம் துறைமுகம் கடற்கரையில் திடீரென கடல் உள்வாங்கியதால், பாசி படர்ந்த மணல்பரப்பு வெளியில் தெரிந்தது.

Share

18 May 2022

புதுச்சேரி கலை பண்பாட்டு துறை சார்பில் அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக் கூடத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பணி நியமன ஆணை வழங்கினார். அருகில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா.

Share

18 May 2022

தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் ஏரியில் ஏராளமான வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

Share

18 May 2022

பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கிய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்று கோவை கோர்ட் வளாகத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாடிய வக்கீல்கள்.

Share

18 May 2022

பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கிய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்று கோவை கோர்ட் வளாகத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாடிய வக்கீல்கள்.

Share

18 May 2022

ஊட்டி படகு இல்லத்தில், மழையிலும் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்.

Share

18 May 2022

சேலம், ஜாகிர் அம்மாபாளையம், காவடி பழனியாண்டவர் கோயிலில் தங்கத்தேர் இழுக்கும் அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி.

Share

18 May 2022

தமிழக கோ-கோ அசோசியேஷன் மற்றும் கோயம்புத்தூர் கோ-கோ அசோஷியேஷன் சார்பில் மாநில அளவில் 6-வது சப் ஜூனியர் போட்டிகள் கோவை சூலூர் எம்.டி.என்., பியூச்சர் பள்ளியில் துவங்கியது. இதில் தூத்துக்குடி மற்றும் கோயம்புத்தூர் அணிகள் மோதின.

Share

18 May 2022

திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்திற்கு சப் கலெக்டர் வருகைக்காக ஒரு மணி நேரமாக காத்திருந்த விவசாயிகள்.

Share
 

Dinamalar iPaper

Advertisement