இன்றைய போட்டோ
01 Jun 2023
புதுச்சேரியில் பல இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன மின் உபகரணங்கள் அமைக்கப்பட்டு வருகிறது அதை ஒட்டி அந்த உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
01 Jun 2023
விருதுநகர் மாவட்டம் கான்சாபுரத்தில் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் பசுமையாக காட்சியளிக்கும் நெற்கதிர்கள்.
01 Jun 2023
திருப்பூர் விஸ்வேஸ்வரர் மற்றும் வீரராகவப் பெருமாள் கோவில் தேர் திருவிழாவை ஒட்டி சாய் கிருஷ்ணா பரதநாட்டிய பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம் நடந்தது
01 Jun 2023
விவசாயி அலட்சியம்... : பாராத பயிரும், கேளாத கடனும் கெடும் என்பதை போல இந்த நிலத்தில் விவசாயின் கவனிப்பு இன்றி கம்பு மகசூல் பறவையால் பாழாகி வருகிறது. இடம் : விழுப்புரம் மாவட்டம் முகையூர்.
01 Jun 2023
வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை யொட்டி சென்னை பிராட்வே பகுதியில் வண்ணமயமான பேக் வாங்க பெற்றோருடன் வந்திருக்கும் சிறுமிகள்.
01 Jun 2023
பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ள மகாநந்தியம் பெருமானுக்கு, குடம், குடமாக மங்கல பொருள்களால் அபிஷேகம் நடந்தது. இதனை, தரிசித்த திரளான பக்தர்கள்.
01 Jun 2023
காட்டு ராஜா :காட்டுக்குள் சிங்கம் இல்லாததால், நான் தான் இனி காட்டு ராஜா என சொல்லாமல், கம்பீர நடை போடுகிறதோ! இந்த யானை. இடம் டாப்சிலிப்:
01 Jun 2023
பச்சைப்சேலென காட்சியளிக்கும் நெல் வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்.இடம்: பாப்பாக்குடி, திருநெல்வேலி மாவட்டம்.
01 Jun 2023
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
01 Jun 2023
திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே மணல் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு. நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்
01 Jun 2023
தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில், முதுகலை மாணவர்களுக்கான பயிற்சி முகாம் தஞ்சாவூர் ராஜராஜ சோழன் மணிமண்டபத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் நடந்தது. அதனை, தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் பார்வையிட்டார்.
01 Jun 2023
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் பார்ப்பவர்களின் கண்களை கவரும் விதமாக மாநகராட்சி சார்பில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான ஓவியங்கள்.
01 Jun 2023
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தில் ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
01 Jun 2023
திருப்பூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட மருத்து கட்டடத்தில் புற நோயாளிகள் பிரிவு செயல்பட துவங்கியது.
01 Jun 2023
பள்ளிகள் அடுத்த வாரம் திறப்பதை முன்னிட்டு, திருப்பூரில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட சுகாதார பணியாளர்கள்.
01 Jun 2023
கோவை அரசு கலைக்கல்லூரியில் நடந்த இளங்கலை பட்டப் படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்கள்.
01 Jun 2023
கோவை அரசு கலைக்கல்லூரியில் நடந்த இளங்கலை பட்டப் படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள வந்து காத்திருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்.
01 Jun 2023
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
01 Jun 2023
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் வைகாசி திருவிழாவினை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வைத்தியநாதர் மற்றும் சிவகாமி அம்பாள்
01 Jun 2023
புதுச்சேரி அடுத்த வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடந்தது.
01 Jun 2023
கோவை ரேஸ் கோர்ஸ் அருள்மிகு செல்வவிநாயகர் மற்றும் 108 விநாயகர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
01 Jun 2023
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே மிகவும் பழமை வாய்ந்த குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் ஆறு கால யாக பூஜையுடன் இன்று சிறப்பாக நடைபெற்றது.
01 Jun 2023
வைகாசி மாத சுக்ல பக்ஷ ஏகாதிசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
01 Jun 2023
திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு 63 நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
01 Jun 2023
கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ஹாக்கி போட்டியை ஆக்கி அகடாமி அகடாமி சேர்மேன் சிவகுமார் தொடங்கி வைத்தார்.
01 Jun 2023
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்டில் பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
31 May 2023
புதுச்சேரி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் ஐ ஜிசந்திரனுக்கு நடந்த பிரிவு உபச்சார விழாவில் போலீஸார்கள் மரியாதை செலுத்தி அவரை வழி அனுப்பி வைத்தனர்.
31 May 2023
புதுச்சேரி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் ஐ ஜிசந்திரனுக்கு நடந்த பிரிவு உபச்சார விழாவில் போலீஸார்கள் மரியாதை செலுத்தி அவரை வழி அனுப்பி வைத்தனர்.
31 May 2023
திருப்பூர், விஸ்வேஸ்வரர் வீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு பஞ்ச மூர்த்தி புறப்பாடு ஊர்வலத்தில் எழுந்தருளிய அறுபத்து மூன்று நாயன்மார்கள்.
31 May 2023
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அப்பல்லோ மருத்துவ மனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளித்தது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், தமிழக சுகாதார திட்ட இயக்குனர் கோவிந்தராவ், அப்பல்லோ மருத்துவ குழும துணை தலைவர் பிரீதா ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் மோகன் சந்திரன் உள்ளிட்டோர். இடம் : சென்னை
31 May 2023
திருப்பூர், விஸ்வேஸ்வரர் வீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு நவீன் பிரபஞ்ச நடன குழுவினரின் கும்மியாட்டம் நடந்தது.
31 May 2023
சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூர் சி வி நாயுடு சாலை தடுப்பில் இரவு நேரங்களில் ஒளிரும் பட்டை வைக்கப்பட்டுள்ளது
31 May 2023
பக்கிங்காம் கால்வாயில் கழிவுநீர் கலக்கும் இடத்தில் ஏற்படும் நுறையால் அப்பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இடம் : பாண்டியன் சாலை, நீலாங்கரை.
31 May 2023
கோவை நேரு ஸ்டேடியம் அருகே உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நடந்த அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் கேரள மாநில மின்சார வாரியம் அணி மற்றும் தென்மேற்கு ரயில்வே அணிகள் மோதின.
31 May 2023
ஊட்டி தாவரவியல் பூங்காவில், கோடைவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில், மேள வாத்தியத்தை ரசித்த சுற்றுலா பயணிகள்.
31 May 2023
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுரையில் சென்னை கேன்சர் இன்ஸ்டிடியூட் சார்பில் மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.
31 May 2023
பழமை மாறாது பாரம்பரிய முறையில் ஏர் பூட்டி மாடுகளுக்கு உழவு பயிற்சி அளித்த விவசாயி. இடம் சுருளிப்பட்டி, தேனி மாவட்டம்.
31 May 2023
இப்போதெல்லாம் குப்பை கொட்டுவதை கண்காணிக்க கூட சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு விட்டது. இடம்:ராம்நகர், கோவை.
31 May 2023
விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைத்திருக்கும் நாள் முகாமில் பொதுமக்கள் இடையே மனுக்களை பெற்று போலீசார் விசாரணை செய்தனர்.
31 May 2023
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி சுகாதாரத்துறை,தேசிய சுகாதார இயக்கம், தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.
31 May 2023
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் நடந்த சிறப்பு கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக வரிசையில் நிற்கும் மாணவா்கள்.
31 May 2023
விருதுநகர் வெயிலுக்குகந்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்.
31 May 2023
உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம் சார்பில் உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளிடம் விழிப்புணர்வு நோட்டிஸ் வழங்கினர்.
31 May 2023
உடுமலை ஜி.டி.வி.,லேவுட் ஸ்ரீ செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை நடந்தது.
31 May 2023
திண்டுக்கல் அருகே அணைப்பட்டி பகுதியில் கண்ணுக்கு குளிர்ச்சியூட்டம் வகையில் பசுமையாக காட்சியளிக்கும் நெல்வயல்.
31 May 2023
புதுச்சேரி காந்திவீதி ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் 37 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சுவாமி கருட சேவையில் அருள் பாலித்தார்.
31 May 2023
மதுரையில் நடந்த தொழில் வர்த்தக சங்க செயற்குழு கூட்டத்தில் சிவபிரசாத் எஸ்.பி., பேசினார். இடமிருந்து நிர்வாகிகள் ஸ்ரீதர், செல்வம், ஜெகதீசன், இளங்கோவன், ஜீயர் பாபு, சுந்தரலிங்கம்.
30 May 2023
திருப்பூர், விஸ்வேஸ்வரர் வீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாக தேரோட்டத்தை முன்னிட்டு சவிதா குழுவினரின் நாமசங்கீர்த்தனம் இசை நிகழ்ச்சி நடந்தது.
30 May 2023
மத்திய மாநில அரசுகளின் அறிவியல் கல்வி திட்டத்தில் அரசு பள்ளி பார்வை திறன் குறைந்த மாணவர்களுக்கு ரோபோ தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.இடம்: டி.பி.ஐ.வளாகம், நுங்கம்பாக்கம், சென்னை.
30 May 2023
திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவில் வீதியில் திடீர் மழைக்கு ஆறு போல் ஓடிய மழை நீரில் நீந்தி வரும் வாகனங்கள்.
30 May 2023
மதுரை பெட்கிராட் சார்பில் நடந்த விழாவில் தையல் பயிற்சி பெற்ற மாணவியர்களுக்கு சான்றிதழை மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் காளிதாசன் வழங்கினார். வலமிருந்து நிர்வாக இயக்குனர் சுப்புராம், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் செந்தில்குமார், தாசில்தார் நாகராஜன்.
30 May 2023
தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா தலைமையில் நகர்மன்ற கூட்டம் நடந்தது.
30 May 2023
விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்திற்கு செல்லும் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
30 May 2023
ஐந்தாம் நாளாக கரூர் ராமகிருஷ்ணபுரம் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது தம்பி அசோக்குமாரின் டெக்ஸ் அலுவலகத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படை பாதுகாப்பில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது
30 May 2023
ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் , தீயணைப்புத்துறை சார்பாக, பள்ளி வாகன ஒட்டுனர்களுக்கு, விழிப்புணர்பு நிகழ்ச்சி நடந்தது.
30 May 2023
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த சென்னையை சேர்ந்த முத்தமிழ் செல்வி விமானம் மூலம் சென்னை வந்தார். அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
30 May 2023
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் பழனி பேசினார்.
30 May 2023
கோவை விமான நிலையம் வந்த ஆஸ்திரேலியா நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் செண்டை வாசித்து மகிழ்ந்தனர்.
30 May 2023
தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் தாம்பரம் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுத்தனர்
30 May 2023
உடுமலை குறிச்சிக்கோட்டையில் விவசாயிகளால் சொட்டுநீர் பாசனத்தில் வளர்க்கப்படும் பப்பாளி மரங்களில் காய்கள் காய்த்துள்ளன.
30 May 2023
ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் , வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக பள்ளி வாகனங்களை, கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார்.
30 May 2023
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கண்பார்வை இழந்தவர்கள் நடந்து செல்ல ஏதுவாக டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணி நடக்கிறது.
30 May 2023
காரைக்கால் திருநள்ளாறு பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரணேஸ்வரர்.சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தேர் திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.
30 May 2023
திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய விசாலாட்சி அம்மன்.
30 May 2023
சென்னை மாநகரப் பேருந்துகள் திடிரென நிறுத்தபட்டதால் பல்லவன் இல்லம் பணி மனையில் போலிசார் குவிக்க பட்டுள்ளன.
30 May 2023
திருப்பூர், விஸ்வேஸ்வரர், வீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு கம்பன் கழகத்தின் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.
30 May 2023
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தினை கலெக்டர் கிராந்தி குமார் துவக்கி வைத்தார்.
29 May 2023
கள்ளச்சாரம், போலி மதுபானம் அதிகரிப்பை கண்டித்து. திருப்பூர், குமரன் சிலை முன் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
29 May 2023
தனியார் பணியாளர்களை நியமிப்பதை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள், போராட்டம் நடத்திய நிலையில், சென்னை ஸ்பென்சர் சிக்னல் அருகே பேருந்துகளுக்காக காத்திருந்த பயணியர்
29 May 2023
சென்னை மாநகரப் பேருந்துகள் திடிரென நிறுத்த பட்டதால் காத்திருந்த பயணிகள் .இடம்: சென்ட்ரல்.
29 May 2023
கோவை பகுதியில் பெய்த மழையால் ரோட்டில் சூழ்ந்த மழை நீர். இடம்: தடாகம் ரோடு இடையர்பாளையம் பகுதி.
29 May 2023
பிரதமர் மோடி ஒன்பது ஆண்டு சாதனையையொட்டி புதுச்சேரி கிரீன் பார்க் ஹோட்டலில் மத்திய அமைச்சர் முருகன் மாநில தலைவர் சாமிநாதன் அமைச்சர்கள் நமச்சிவாயம்,சாய்சரணகுமார் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
29 May 2023
அக்னி வெயிலின் கடைசி நாளான இன்று சென்னையில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தையின் தலையை சேலையால் மூடிக் கொண்டு செல்லும் பாட்டி. இடம். பட்டினப்பாக்கம் ,சென்னை.
29 May 2023
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்த தமிழறிஞர்கள் நன்றி கூறும் விழாவில் கவர்னர் தமிழிசைக்கு தமிழறிஞர்கள் சார்பில் செங்கோல் வழங்கப்பட்டது.
29 May 2023
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உண்ணாமுலை அம்மன் சன்னதி முன், தோஷ நிவர்த்தி பூஜையில் 1008 கலசம் வைத்து சிறப்பு யாகம் நடந்தது.
29 May 2023
விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
29 May 2023
ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் தளத்தில் இருந்து விண்ணுக்கு சென்ற ஜி.எஸ்.எல்.வி., எப்.12 ராக்கெட்டை பார்வையிட வந்த பார்வையாளர்கள் அங்குள்ள கண்காட்சியை பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
29 May 2023
சென்னை, வண்ணாரப்பேட்டை, பி.ஏ.கே.பழனிச்சாமி நாடார் பள்ளியில், 1982ல் 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
29 May 2023
திருப்பூர் நஞ்சராயன குளத்தில் உள்ள தண்ணீரை மெயின் மதகை திறந்து வெளியேற்றி வருகின்றனர். இதனால் குளத்தில் தண்ணீர் வற்றி அங்குள்ள பறவைகள் வெளியேறும் அபாயம் உள்ளது.
29 May 2023
திருப்பூர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதியதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ சேவைகள் கட்டிட திறப்பு விழா நடந்தது.
29 May 2023
தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டி பகுதியில் அரிசி கொம்பன் காட்டு யானை முகாமிட்டுள்ள பகுதிக்குள் செல்ல பத்திரிக்கையாளர், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கபட்டு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
29 May 2023
சென்னை, ராயபுரம், அண்ணா பூங்காவில் பிரமாண்ட நுழைவாயில் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
29 May 2023
கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடந்த சூழல் சந்திப்பு நிகழ்ச்சியில் வன உயிரியல் பேராசிரியர் சிவசுப்பிரமணியன் பேசினார் அருகில் ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ், பேராசிரியர் ராமகிருஷ்ணன்.
29 May 2023
தேஜஸ் பவுண்டேஷன் சார்பில் பாரத தேசத்தின் புண்ணிய நதிகள் என்ற தலைப்பில் சரஸ்வதி நதி குறித்து கலைமகள் இதழின் ஆசிரியர் கிழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் பேசினார்.இடம்: ராயப்பேட்டை
28 May 2023
விவேக பாரதி அமைப்பின் சார்பில் ஆர். பி. வி.எஸ் மணியன் எழுதிய பாரதி யார் ? தெரியாத புது தகவல்கள் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது இதில் இடமிருந்து விவேக பாரதி ஒருங்கிணைப்பாளர் சந்திரமௌலி, நூலை வெளியிட்ட தனியார் நிறுவன இயக்குனர் ரவி சங்கர், முதல் பிரதியை பெற்றுக்கொண்ட சாரதா மானு அறக்கட்டளை நிறுவனர் ஶ்ரீமதி மதுமதி நாராயணன் மற்றும் விவேக பாரதி செயலர் மங்கையர்க்கரசி.இடம் : தி நகர்.
28 May 2023
திருப்பூர், வீரராகவ பெருமாள் கோவிலில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு தெய்வீக பாடல் இசை நிகழ்ச்சி நடந்தது.
28 May 2023
விழுப்புரம் ஸ்ரீ ஜனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு உற்சவர் ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்தார்