dinamalar telegram
Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

27 Jan 2022

உடுமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் மூலஸ்தான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.

27 Jan 2022

அவிநாசி அடுத்த நியூ திருப்பூர், மேற்கு தோட்டம் பகுதியில் சிறுத்தையின் காலடி தடங்கள் உள்ளனவ என வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

27 Jan 2022

உடுமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை நடந்தது.

27 Jan 2022

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது இயந்திரம் மூலம் நெல் அறுவடை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

27 Jan 2022

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் எவ்விதமான சமூக இடைவெளி இல்லமால் கூட்டமாக காணப்படும் தி.நகர் ரங்கநாதன் தெரு.

27 Jan 2022

தைப்பூச விழாவை முன்னிட்டு எடப்பாடி பருவதராஜகுல மகாஜனங்கள் பழநி முருகன் கோயில் வெளிப்பிரகாரத்தில் ஓம் சரவண பவ என பல வண்ண மலர்களால் அலங்கரித்தனர்.

27 Jan 2022

உற்சாக குளியல் பறவைகளுக்கு தண்ணீர் உள்ள இடம் கண்டால். இடம்: கோவை வேடப்பட்டி ரோடு.

27 Jan 2022

கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மண்வளம் காப்போம் என சத்குரு தலைமையில் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

26 Jan 2022

குடியரசு தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி சட்டசபை வளாகம் மின்னொளியில் ஜொலிக்கிறது இன்று பார்வையாளர்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குடும்பத்தினருடன் வருபவர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

26 Jan 2022

73வது குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நடந்தது. இதில் அணிவகுத்து வந்த போலீசார்.இடம். காமராஜர் சாலை, சென்னை

26 Jan 2022

73வது குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நடைபெற்றது. இதில் தேசியக் கொடியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். உடன் முதல்வர் ஸ்டாலின், சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி முனீஸ்வரன் நாத் பண்டாரி மற்றும் தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டோர்.

26 Jan 2022

73வது குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நடைபெற்றது. இதில் இந்திய விமான படையின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடந்தது.

26 Jan 2022

73வது குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நடைபெற்றது.இதில் விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கு என்ற தலைப்பில், சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடந்தது.

26 Jan 2022

புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் 75வது குடியரசு தினவிழாவில் பாரதியார் பல்கலைக்கழக மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.

26 Jan 2022

குடியரசு தினத்தை முன்னிட்டு திருப்பூர்,மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு சான்றிதழினை கமிஷனர் கிரந்தி குமார் வழங்கினார் அருகில் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள்.

26 Jan 2022

குடியரசு தின விழா முன்னிட்டு சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி காளையார் கோவிலில் அருகே பருத்தி கண்மாய் பகுதியில் உள்ள தியாகி மிக்கேல் வீட்டுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

26 Jan 2022

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது இயந்திரம் மூலம் நெல் அறுவடை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

26 Jan 2022

புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் 75வது குடியரசு தினவிழாவில் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் போலீஸ் மரியாதை ஏற்றுக்கொண்டார்.

26 Jan 2022

73வது குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரின் சிறந்த காவல் நிலையத்திற்கான மூன்றாம் இடத்திற்கான கோப்பையை மதுரை மாவட்டம், அண்ணாநகர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் சாது ரமேஷ்க்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

26 Jan 2022

புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் 75வது குடியரசு தினவிழாவில் போலீஸ் அணிவகுப்பு நடந்தது.

26 Jan 2022

புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் 75வது குடியரசு தினவிழாவில் போலீஸ் அணிவகுப்பு நடந்தது.

26 Jan 2022

முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அகத்தீஸ்வரர் கோவில் குளம் முழுவதும் பாசி படிந்து உள்ளது.இடம்: நுங்கம்பாக்கம்

26 Jan 2022

73வது குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நடைபெற்றது.இதில் கொரானா தொற்றால் பொது மக்கள் பார்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால்வெறிச்சோடிய காமராஜர் சாலை.

26 Jan 2022

73வது குடியரசு தின விழா கோவை வஉசி மைதானத்தில் நடந்தது. இதில் தேசிய கொடியை கலெக்டர் சமீரன் ஏற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

26 Jan 2022

73வது குடியரசு தின விழா கோவை வஉசி மைதானத்தில் நடந்தது. இதில் தேசிய கொடியை கலெக்டர் சமீரன் ஏற்றி வைத்தார்.

26 Jan 2022

குடியரசு தின விழாவையொட்டி கோவை தினமலர் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

26 Jan 2022

குடியரசு தினவிழாவையொட்டி உடுமலை நேதாஜி மைதானத்தில் முன்னாள் ராணுவத்தினர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

26 Jan 2022

தேய்பிறை அஷ்டமியை யொட்டி கடலூர் முதுநகரில் உள்ள காலபைரவர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது.

26 Jan 2022

உடுமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக சீர்வரிசை பொருட்களை கொண்டுவந்த தென்னைமரத்து வீதி காமாட்ச்சியம்மன் கோவில் பக்தர்கள்.

26 Jan 2022

குடியரசு தினத்தையொட்டி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை நடத்திய ரயில்வே போலீசார்.

26 Jan 2022

உற்சாக குளியல் : சுட்டெரிக்கும் வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்க உற்சாக குளியலிட்ட சிறுவர்கள். இடம் : தீர்த்ததொட்டி, பெரியகுளம்.

26 Jan 2022

தேய்பிறை அஷ்டமியை யொட்டி கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வர வேண்டி. கடலூர் முதுநகரில் உள்ள காலபைரவர் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.

25 Jan 2022

குடியரசு தினத்தையொட்டி மூவர்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ள மேம்பாலம்.இடம்: சென்னை சென்ட்ரல்

25 Jan 2022

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை ரிப்பன் மாளிகை, மூவர்ணக் கொடியின் நிறத்தின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

25 Jan 2022

குடியரசு தினத்தையொட்டி மூவர்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ள மேம்பாலம்.இடம்: நேப்பியர் மேம்பாலம்

25 Jan 2022

கொடைக்கானலில் பூத்துள்ள ஆர்ணமெண்டல் செர்ரி பூ.

25 Jan 2022

அழகிய மாலை வேளையில் சென்னை, சீனிவாசபுரம் முகத்துவார பகுதியில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்.

25 Jan 2022

குடியரசு தின விழாவையொட்டி தேசியக்கொடி வண்ணத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ரம்மியமாக காட்சி அளித்த கோவை மாநகராட்சி மன்ற கட்டிடம்.

25 Jan 2022

குடியரசு தினத்தையொட்டி சென்னை விமான நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது

25 Jan 2022

குடியரசு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.

25 Jan 2022

இறைதேடி வரும் பறவைகள். இடம்: சிவகங்கை அருகே வாணியங்குடி.

25 Jan 2022

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி தேனி கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கோலங்கள் வரையப்பட்டிருந்தது.

25 Jan 2022

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பகலில் பெய்த திடீர் மழையினால் புது ரோட்டில் மழை நீர் வெள்ளம் போல சென்றது.

25 Jan 2022

தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகன கழகம் சார்பில் ட்ரோன்கள் கண்காட்சி மற்றும் ட்ரோன்களின் செயல்பாட்டு விளக்கம் நடந்தது இதனை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள். இடம் : அண்ணா பல்கலை, கிண்டி .

25 Jan 2022

உடுமலை அமராவதி பேப்பர் மில் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய போலீசார்.

25 Jan 2022

புதுச்சேரி கம்பன் கலை அரங்கத்தில் நடந்த தேசிய வாக்காளர் தினத்தையொட்டி புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை தலைமை செயலாளர் அஸ்வின்குமார் வழங்கினார். அருகில் தலைமை தேர்தல் அதிகாரி சூர்பீர் சிங், கலெக்டர் வல்லவன்.

25 Jan 2022

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கலர் போட்டோவுடன் கூடிய புதிய வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொண்ட புதிய வாக்காளர்கள்.

25 Jan 2022

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது உயிர் நீர்த்த மொழிப்போர் தியாகிகளின் நினைவு கூறும் வகையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் தியாகிகளின் உருவ படங்களுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

25 Jan 2022

அவிநாசி அடுத்த பாப்பாங்குளத்தில் மீண்டும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர். மயக்க ஊசி செலுத்த தயராக உள்ள கால்நடை மருத்துவர்.

25 Jan 2022

அவிநாசி அடுத்த பாப்பாங்குளத்தில் மீண்டும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் துப்பாக்கியுடன் ஈடுபட்ட வனத்துறையினர்.

25 Jan 2022

குடியரசு தின விழாவையொட்டி மின்சார ரயில் நிலையங்களில் பயணிகளிடம் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை நடத்திய ரயில்வே போலீசார்.இடம்: வேளச்சேரி.

25 Jan 2022

150 கோடி ரூபாயில் செலவில் நவின் படுத்தப்படும் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம்.

25 Jan 2022

தர்மபுரியிலிருந்து விற்பனைக்கு வந்துள்ள வாத்து குஞ்சுகள்.இடம் உடுமலை-திருப்பூர் ரோடு.

25 Jan 2022

குளம், குட்டை என்றாலே அசுத்த நீர் தேங்கி நிற்கும். காந்தி நகர் ரயில்வே குட்டையில ஆகாயத்தாமரை செடியின் மேல் பீக்கங்காய் கொடி படர்ந்து காணப்படுகிறது.இடம்: சின்ன எர்ணாவூர்.

25 Jan 2022

பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்ட பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. இதில் கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் அடிவாரத்தில் அழகாக அமைக்கப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையம்.

25 Jan 2022

அவிநாசி அடுத்த பாப்பாங்குளத்தில் மீண்டும் சிறுத்தை வெளியே வந்ததால் சிறப்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

25 Jan 2022

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சாலையில் காகிதப்பூ மலர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.

25 Jan 2022

புதுச்சேரியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைமைச் செயலகம் தேசியக்கொடி நிறத்தில் மின்னொளியில் ஜொலிக்கிறது.

24 Jan 2022

அவிநாசி அடுத்த பாப்பாங்குளத்தில் மீண்டும் சிறுத்தை வெளியே வந்ததால் அவற்றை பிடிக்க சிறப்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

24 Jan 2022

மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார். உடன் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு மற்றும் மருத்துவ மாணவர் தேர்வுக் குழு செயலர் வசந்தாமணி.

24 Jan 2022

ரிசர்வ் வங்கி ரயில்வே சுரங்கப் பாதையில் ஓவியங்கள் வரையும் பணி துவங்கியது.இடம்: பாரிமுனை.

24 Jan 2022

சூரியனை நோக்கி திரும்ப மஞ்சள் முகம் மலர்ந்து காத்திருக்கிறதோ இந்த சூரியகாந்தி பூக்கள். இடம்:பழநி அருகே கோம்பைபட்டி.

24 Jan 2022

குடியரசு தின விழாவையொட்டி போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது.

24 Jan 2022

குடியரசு தினத்தை முன்னிட்டு கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள தேசிய கொடிகள் மற்றும் பேட்ஜ்கள்.இடம்: பாண்டி பஜார், சென்னை.

24 Jan 2022

டில்லி குடியரசு தின விழாவில் தமிழக அரசு அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி அளிக்காத மத்திய அரசை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன் நாட்டு மாடு நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

24 Jan 2022

மதுரை மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களை தினக்கூலி பணியாளர்களாக மாற்ற கோரி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்.

24 Jan 2022

அரியலூர் மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சேரி சுதேசி மில் முன்பு இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

24 Jan 2022

குடியரசு தின விழாவையொட்டி, கோவை வ.உ.சி., மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் துப்பாக்கி ஏந்தி தங்களது மிடுக்கை வெளிப்படுத்திய போலீசார்.

24 Jan 2022

சென்னை, வடபழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருகல்யாண வைபவம் நேற்று நடந்தது.

24 Jan 2022

கொரோனா பரவலை தடுப்பதற்காக விடுக்கப்பட்ட ஊரடங்கில் வெறிச்சோடிய சாலைகள். இடம் : கிண்டி கத்திப்பாரா.

24 Jan 2022

அதிக பணி காரணமாக பசுமை நிறத்தில் இருந்த புல்வெளி நிறம் மாறியது. இடம்: மேட்டுப்பாளையம் அருகே குமரன் குன்று கிராமப்பகுதி.

24 Jan 2022

இரவு நேரத்தில் விதிகளை மீறி நீண்ட நேரம் திறந்த கடைகளை சைக்கிளில் வந்த நகராட்சி ஆணையர் வினோத்.எச்சரித்து மூட வைத்தார். இடம் : மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட்.

24 Jan 2022

ஜெயிக்கலாம் மச்சான் வாய்ப்பிருக்கு..! கிரிக்கெட்டில் ஜெயிக்கலாம் கொரோனாவை யார் ஜெயிப்பது..! கோவையில் முழு ஊரடங்கு ஊருக்குத்தான் எங்களுக்கு இல்லை என்று கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள். இடம் விமான நிலையம் அருகே

23 Jan 2022

புதுச்சேரி ராஜீவ் காந்தி சிக்னல் அருகே வழுதாவூர் செல்லும் சாலையில் உள்ள இரும்பு சென்டர் மீடியா தடுப்பு உடைந்து காணப்பட்டது.

23 Jan 2022

கோவையில் முழு ஊரடங்கு உத்தரவையொட்டிவீடுகளுக்கே வந்து விற்பனை செய்யும் சிறு தானிய வியாபாரிகள் பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.இடம் ஆவாரம்பாளையம் ரோடு

23 Jan 2022

கொரோனா பரவலை தடுப்பதற்காக விடுக்கப்பட்ட ஊரடங்கில் வெறிச்சோடிய சாலைகள். இடம் : கிண்டி கத்திப்பாரா.

23 Jan 2022

விடுமுறை என்றாலே அசைவப் பிரியர்கள் அலைமோதும் மக்கள் கூட்டம் ஊரடங்கு என்பதால் வெறிச்சோடி காணப்பட்ட சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம்.

23 Jan 2022

முழு ஊரடங்கில் அமைதியாக காட்சியளிக்கும் கொடைக்கானல் ஏரி.

23 Jan 2022

ஊரடங்கில் இரவில் வாகனமின்றி நிசப்தமாக காணப்படும் இடம் : கோவை, காந்திபுரம் 100 அடி ரோடு பாலம்.

23 Jan 2022

ஊரடங்கில் இரவில் வாகனமின்றி நிசம்தமாக காணப்படும் இடம் : கோவை, காந்திபுரம் 100 அடி ரோடு பாலம்.

23 Jan 2022

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரயில்கள்.

23 Jan 2022

கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கால் வெறிச்சோடி இருந்த பழநி வையாபுரி குளத்து ரோடு.

23 Jan 2022

சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

23 Jan 2022

சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோயில் தக்கார் எல். ஆதிமூலம்.

23 Jan 2022

சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலசத்தில் புனித நீர் ஊற்றுவதற்கு முன் பச்சை துணியை அசைத்து துவக்கி வைத்த கோயில் தக்கார் எல்.ஆதிமூலம்

23 Jan 2022

சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகத்தில் பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.

23 Jan 2022

சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகத்தில் தீர்த்தம்பெற்ற பொதுமக்கள்.

23 Jan 2022

முழு ஊரடங்கிலும் ரயில் , பஸ் பயணிகளுக்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஆட்டோக்கள் இயங்கின. இடம் : தாம்பரம் ரயில் நிலையம்

23 Jan 2022

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து கடலூர் சிக்னல் பாயிண்ட் வெறிச்சோடியது.

23 Jan 2022

கொடைக்கானலில் பூத்துள்ள டான்சிங் டால் பூ.

23 Jan 2022

ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பை முன்னிட்டு விழுப்புரம் மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்.

22 Jan 2022

சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலின் முகப்பு அண்ணாச்சி செவ்வாழை இளநீர் போன்ற இயற்கை வளங்களின் மூலமாக வளைவு அமைக்கப்பட்டுள்ளது

22 Jan 2022

சென்னை வடபழனி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலின் முகப்பு அண்ணாச்சி செவ்வாழை இளநீர் போன்ற இயற்கை வளங்களின் மூலமாக வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

22 Jan 2022

சென்னை வடபழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி கோபுரங்கள் மின்னொளியில் ஜொலிக்கிறது.

22 Jan 2022

மாலையில் ஆதவன் மறையும் அழகு.இடம்: சிவகங்கை அருகே சாமியார்பட்டி

22 Jan 2022

சென்னை வடபழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, பக்தர் ஒருவர் காணிக்கையாக தந்த தங்கவேல் ஒன்றை ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் முன்னிலையில் ஒப்படைத்தனர்.உடன் துறை செயலர் சந்திரமோகன் மற்றும் ஆணையர் குமரகுருபரன்.

22 Jan 2022

சென்னை வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி மங்கள வாத்தியங்கள் வாசிக்கும் இசைக்கலைஞர்கள்.

22 Jan 2022

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.

22 Jan 2022

வாழ்க்கையும் பார்க்கணும் வியாபாரத்தையும் பாக்கணும் பூண்டு வாசனையின் தாலாட்டில் உள்ளே குழந்தை உறங்க இது தாய்க்கே உரித்தான தாலாட்டு இடம் கோவை சிங்காநல்லூர் ரோடு

22 Jan 2022

மதுரை வைகையாற்றில் கட்டப்பட்ட குருவிக்காரன் சாலை பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

Share
 

Dinamalar iPaper

Advertisement