dinamalar telegram
Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

23 Jan 2022

கொடைக்கானலில் பூத்துள்ள டான்சிங் டால் பூ.

23 Jan 2022

ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பை முன்னிட்டு விழுப்புரம் மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்.

22 Jan 2022

சென்னை வடபழனி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலின் முகப்பு அண்ணாச்சி செவ்வாழை இளநீர் போன்ற இயற்கை வளங்களின் மூலமாக வளைவு அமைக்கப்பட்டுள்ளது

22 Jan 2022

சென்னை வடபழனி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலின் முகப்பு அண்ணாச்சி செவ்வாழை இளநீர் போன்ற இயற்கை வளங்களின் மூலமாக வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

22 Jan 2022

சென்னை வடபழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி கோபுரங்கள் மின்னொளியில் ஜொலிக்கிறது.

22 Jan 2022

மாலையில் ஆதவன் மறையும் அழகு.இடம்: சிவகங்கை அருகே சாமியார்பட்டி

22 Jan 2022

சென்னை வடபழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, பக்தர் ஒருவர் காணிக்கையாக தந்த தங்கவேல் ஒன்றை ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் முன்னிலையில் ஒப்படைத்தனர்.உடன் துறை செயலர் சந்திரமோகன் மற்றும் ஆணையர் குமரகுருபரன்.

22 Jan 2022

சென்னை வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி மங்கள வாத்தியங்கள் வாசிக்கும் இசைக்கலைஞர்கள்.

22 Jan 2022

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.

22 Jan 2022

வாழ்க்கையும் பார்க்கணும் வியாபாரத்தையும் பாக்கணும் பூண்டு வாசனையின் தாலாட்டில் உள்ளே குழந்தை உறங்க இது தாய்க்கே உரித்தான தாலாட்டு இடம் கோவை சிங்காநல்லூர் ரோடு

22 Jan 2022

மதுரை வைகையாற்றில் கட்டப்பட்ட குருவிக்காரன் சாலை பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

22 Jan 2022

பொது மக்கள் கவனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தேவையில்லாமல் வெளியே செல்லாதீர் மீறி சென்று தொற்று நோயையும் மற்றும் போலீசாரிடம் மாட்டிக் கொண்டு அபராதத் தொகையும் செலுத்த நேரிடும், எனவே பாதுகாப்போடு குடும்பத்தினருடன் வீட்டில் இருங்கள்..! இடம் கோவை ஹோப் காலேஜ்

22 Jan 2022

சென்னை, தி.நகர் ரங்கநாதன் தெருவில் நடந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள குவிந்த பொதுமக்கள்.

22 Jan 2022

தேனியில் சமூகநலன், மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட பயனாளிகள்.

22 Jan 2022

குடியரசு தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை செய்தனர்.

22 Jan 2022

பழநி அருகே தாளையூத்தில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் பைக்குகள்.

22 Jan 2022

வெள்ள நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டித்து, தஞ்சை தாலுகா அலுவலகம் முன்பு, அ.தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

22 Jan 2022

ஊட்டி அரசு மேல்நிலைபள்ளியில், நடந்த டி.என்.பி. எஸ். சி. தேர்வை , டி.என்.பி.எஸ்.சி., இயக்குனர் கிருஷ்ணகுமார் ஆய்வு செய்தார்.

(1)

22 Jan 2022

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகளின் குறைந்து வருகிறது. இடம்: தாவரவியல் பூங்கா, ஊட்டி.

22 Jan 2022

கோவை குனியமுத்தூர் பி.கே.புதூர் பகுதியில் குடோனில் ஐந்து நாட்களாக இருந்த சிறுத்தை வனத்துறையினர் அமைத்திருந்த கூண்டில் சிக்கியதையடுத்து பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்கு எடுத்து சென்ற வனத்துறையினர்.

22 Jan 2022

கோவை சிங்காநல்லூர் ரோட்டில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி கொரோனா தொற்று நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கைகளை திறந்து வைத்து பார்வையிட்டார், அருகில் கலெக்டர் சமீரன் உள்ளிட்டோர்.

22 Jan 2022

சென்னை பாடி பகுதியில் மூங்கில்களால் சேர்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்.

22 Jan 2022

இசையஞ்சலி ! :

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சற்குரு ஶ்ரீ தியாகராஜர் 175வது ஆராதனை விழாவை முன்னிட்டு, அவரது சன்னிதி முன், ஒரே மேடையில் இசை கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்தன கீர்த்தனைகள் பாடி இசையஞ்சலி செலுத்தினர்.

22 Jan 2022

சங்கடகர சதூரத்தியையொட்டி உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.

22 Jan 2022

கோவை குனியமுத்தூர் பகுதியில் குடோனில் ஐந்து நாட்களாக இருந்த சிறுத்தை வனத்துறையினர் அமைத்திருந்த கூண்டில் சிக்கியது.

22 Jan 2022

வடபழநி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜன.23) நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை முதல்வர் ஸ்டாலினிடம் கோயிலின் தக்காரும், 'தினமலர்' நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளருமான எல்.ஆதிமூலம் நேற்று வழங்கினார். உடன் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, செயலர் சந்திரமோகன் , கோயில் இணை ஆணையர் ரேணுகா தேவி. இடம்: தலைமைச் செயலகம், சென்னை.

22 Jan 2022

ஊட்டி அருகே கேத்தி பள்ளதாக்கு பகுதியில், மாலை நேரத்தில் பனி மூட்டம் அதிகளவு இருந்தது.

21 Jan 2022

தைமாத வெள்ளிக்கிழமை யொட்டி உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் விசாலாட்சி அம்மனுக்கு லட்சார்ச்சனை நடந்தது.

21 Jan 2022

சென்னையில் வெயில் அதிகரித்து வரும் நிலையில் , கோயம்பேடு மார்கெட்டில், சாக்கு பைகளை உலர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்.

21 Jan 2022

கோவை செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு விழா நடந்தது.இதில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாததால் குறைந்த அளவில் கூட்டம் வந்தது.

21 Jan 2022

சீறிப்பாய்ந்த காளை, தூக்கி வீசப்பட்ட வீரர். இடம்: கோவை, செட்டிபாளையம்.

21 Jan 2022

சீறிப்பாய்ந்த காளை, தூக்கி வீசப்பட்ட வீரர். இடம்: கோவை, செட்டிபாளையம்.

21 Jan 2022

ஜாதி சான்று வழங்க கோரி காட்டுமலையனூர் பகுதி பள்ளி மாணவ, மாணவியர்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

21 Jan 2022

திருப்பூர்,மாநகராட்சி நல்லூர் மண்டல அலுவலகத்தில் வீட்டு மனைஇடம் வரன்முறை படுத்தும் சிறப்பு முகாம் நடந்தது.

21 Jan 2022

உடுமலை சின்னவீரம்பட்டியில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய் செடிகளில் விளைந்த காய்களை பறிக்கும் தொழிலாளர்கள்.

21 Jan 2022

சென்னை தி.நகர் மேம்பாலத்தின் தடுப்புச் சுவர்களில் வண்ணமயமாக வண்ணம் பூசப்பட்டுள்ளது.இடம்.தெற்கு உஸ்மான் சாலை.

21 Jan 2022

குடியரசு தினத்தையொட்டி விழாக்கள், நடக்கும் மெரினா காமராஜர் சாலை பார்பதற்கு ப்ளீச் என்று அழகாக காட்சியளிக்கிறது.

21 Jan 2022

சென்னை, அசோக்நகர் பகுதியில் சாலையின் மைய தடுப்புச்சுவர்களில் வண்ணம் பூசும் பணிகள் நடைபெறுகிறது.

21 Jan 2022

சென்னை பாடி பகுதியில் மூங்கில்களால் சேர்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்.

21 Jan 2022

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அலிக்கப்பட்டதையடுத்து, சென்னை, அடையாறு ஆற்றில் வலை போட்டு மீன் பிடிக்கும் சிறுவர்கள்.இடம்: நந்தம்பாக்கம்.

21 Jan 2022

கடலூர் நகராட்சி பள்ளியில் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட பயிற்சி நடந்தது.

21 Jan 2022

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

21 Jan 2022

சென்னையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படும் நிலையில் வாகன ஓட்டிகளுக்கு இயற்கை குடையாக அமைந்துள்ள மரங்கள்.இடம்: ராஜமன்னார் சாலை, கே.கே.நகர் சென்னை.

21 Jan 2022

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலராக பொறுப்பேற்ற சவுந்தரராஜன் முதல் கையெழுத்திட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் மற்றும் மனமகிழ் கணிதம் சார்ந்த பயிற்சியினை பார்வையிட்டார்.

21 Jan 2022

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சி முட்லூர் பைபாஸ் சாலையில் இரவு நேரம் அல்லாமல் பகல் நேரத்திலும் விபத்து ஏற்படுவதை தடுக்க பேரிகார்டு போடப்பட்டுள்ளது.

21 Jan 2022

சென்னை பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் வரை மெட்ரோ ரயில் பணிகளுக்காக மவுண்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.இடம்: நந்தம்பாக்கம்.

21 Jan 2022

கடலூர் முதுநகர் ரயில் நிலைய வளாகத்தில் 24 மணி நேரமும் பட்டொளி வீசி பறக்கும் மூவர்ணக்கொடி.

21 Jan 2022

சிவகங்கையில் நடந்த பா.ஜ..நிர்வாகிகள் கூட்டத்தில் தேசிய சிறுபான்மை பிரிவுச்செயளாலர் இப்ராஹிம் பேசினார்.இடமிருந்து சிறுபான்மை அணி மாநில செயலாளர் தியாகராஜன், மாவட்ட பொருளாளர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் சத்தியநாதன், மாவட்ட பொருளாளர் மார்த்தாண்டம்.

21 Jan 2022

தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி., அது பாடல். எட்டிப்பார்த்தேன் ஜன்னல் வச்சு.,, இது பார்வை. இடம் புதுச்சேரி அரியாங்குப்பம் சாலை.

21 Jan 2022

கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

21 Jan 2022

சென்னையில் நாளுக்கு நாள் பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது.இடம் சென்ட்ரல் பூங்கா ரயில் நிலையம்.

21 Jan 2022

கடலூர் எஸ்.பி., அலுவலகத்தில் சீட்டு மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராமமக்கள் மனு கொடுக்க வந்தனர்.

21 Jan 2022

கொரோனா காரணமாக, தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக கடல்பகுதி, பக்தர்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

21 Jan 2022

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகள் உரிமையாளர்கள் வாடகை கட்டாமல் சீல் வைக்கப்பட்டது. இந்த கடைகளை று ஆணையர் வினோத் தலைமையில் ஏலம் விடப்பட்டது. அருகில் சுகாதார ஆய்வாளர் ராஜன், போலீஸ் எஸ்.ஐ. தாமோதரன் உள்ளிட்டோர் உள்ளனர்.

21 Jan 2022

கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வடகுத்து கிராமமக்கள் வி.ஏ.ஓ.,மீது புகார் கொடுக்க வந்தனர்.

21 Jan 2022

சென்னை பாரிமுனை கந்த கோட்டம் முருகன் கோவிலுக்கு சொந்தமான எருக்கஞ்சேரியில் உள்ள பல லட்ச ரூபாய் மதிப்பிலான இடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

21 Jan 2022

திண்டிவனம் செஞ்சி ரோட்டில் சேதமடைந்த நிலையில் இருந்த சாலையை மூன்றாவது முறையாக தற்காலிகமாக பேட்ச் ஒர்க் செய்து சீரமைக்கும் பணி நடந்தது.

21 Jan 2022

இரவெல்லாம் சூழ்ந்திருந்த பனிமூட்டம் காலையில் சூரியனை கண்டதும் விலகிச் சென்றதோ.இடம்: பழநி-கொடைக்கானல் ரோடு.

21 Jan 2022

தினமலர் செய்தி எதிரொலியை தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட அனகாபுத்தூர் பகுதிகளில் காலிமனைகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றினர்.

21 Jan 2022

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.

21 Jan 2022

திருப்பாலைக்குடி பகுதியில், கணவாய் மீன் பிடிப்பிற்கு, படகில் கடலுக்கு பயணமாகும் சங்கு வலைகள்

21 Jan 2022

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இந்து கோயில்களை இடிக்கும் தமிழக அரசை கண்டித்து மதுரை தெற்கு வெளி வீதியில் ஆர்ப்பாட்டம் நடந்திய விஷ்வ இந்து பரிஷத், இந்து முன்ணணி மற்றும் பா.ஜ.,கட்சியினர்.

21 Jan 2022

திண்டுக்கல் அருகே கோட்டூர் ஆவாரம்பட்டி பகுதியில் நாற்றங்கால் எடுக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

21 Jan 2022

குடியரசு தின விழாவிற்காக சிவகங்கை கலெக்டர் அலுவலக மைதானத்தில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது.

21 Jan 2022

பனியிலும் , வெயிலிலும் அழகாக அமைக்கப்பட்டுள்ள செடிகள் வாடாமல் இருக்க சுழல் குழாய் மூலம் தண்ணீர் தெளிக்கப்படுகிறது .இடம் : குரோம்பேட்டை எம்.ஐ.டி., பாலம் கீழ்பகுதி

21 Jan 2022

சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள கவுதமபூரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பின், குடிநீர் பிரதான குழாய்கள் பதிக்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

21 Jan 2022

சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள கவுதமபூரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பின், குடிநீர் பிரதான குழாய்கள் பதிக்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் று துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர்.

21 Jan 2022

வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து கோவை கோனியம்மன் கோவிலில் ரோட்டில் நின்று வழிபட்டு சென்ற பக்தர்.

21 Jan 2022

கோவை சூலூர் கண்ணம்பாளையம் பண்ணையில், கள் இறக்கும் போராட்டம் நடந்தது. இதில் (இடமிருந்து) பாஜக அணி மாநிலத் தலைவர் நாகராஜ், கள் இயக்க தலைவர் நல்லசாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர்.

21 Jan 2022

ராமநாதபுரம் அருகே கோப்பேரி மடம் பகுதியில் விளைந்துள்ள உப்புகள் தர்ப்பையால் மூடி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது

21 Jan 2022

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவலகம் கட்டிடத்தை புனரமைக்கும் பணியினை, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

21 Jan 2022

ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து டிராக்டரில் மீன்பிடி வலைகளை மீனவர்கள் ஏற்றி சென்றனர்.

21 Jan 2022

இது பனிமூட்டம் இல்ல புகைமூட்டம் :

சிவகங்கை இந்திரா நகர் அருகே ரோட்டின் ஓரத்தில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறை ஏற்படுத்துகிறது.

21 Jan 2022

விழுப்புரம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தி விட்டுச் சென்ற கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யாததை கண்டித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

21 Jan 2022

சீறிப் பாய்ந்த காளைகள் தெறித்து ஓடிய வீரர்கள்..இடம்: கோவை, செட்டிபாளையம்

21 Jan 2022

கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் எல் அண்ட் டி பைபாஸ் சாலை, செட்டிப்பாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரர்.

21 Jan 2022

கோவை செட்டிபாளையத்தில் ஜல்லிகட்டு திருவிழா நடந்தது.

21 Jan 2022

சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம் (ஜன.23) நடைபெறுவதை முன்னிட்டு அஷ்டபந்தனம் தயாரிப்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியை ராஜா மற்றும், பிச்சை குருக்கள் துவக்கி வைத்தனர்.

21 Jan 2022

மீண்டும் கொரோனா பரவல் மக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கவும் என்ற விழிப்புணர்வு பதாகையுடன் சைக்கிளில் வலம் வரும் வட மாநில தொழிலாளர். இடம்: திருப்பூர், தாராபுரம் ரோடு.

21 Jan 2022

சென்னை அடுத்த ஆவடியில், மத்திய அதிவிரைவு படையினர் தயாரித்த மறு பயன்பாட்டிற்கு உகந்த, கொரோனா முழு கவச உடையை, போலீஸ் கமிஷனர் சர்கர் ஜீவால் அறிமுகம் செய்து வைத்தார். உடன் ஆவடி 97வது பட்டாளியன் காமென்டண்ட் எரிக் கில்பட் ஜோஸ் உள்ளிட்டோர். இடம்: போலீஸ் மருத்துவமனை, எழும்பூர்.

21 Jan 2022

சென்னை ராயபுரம் பகுதியில் மாடி பூங்கா வில் மக்களைக் கவரும் வகையில் பூத்துக் குலுங்கும் காகிதப் பூக்கள். இடம்: இப்ராஹிம் சாலை.

21 Jan 2022

தேனி அருகே கூழையனூரில் வெண்டை செடியில் பூத்துக்குலுங்கும் பூக்கள்.

20 Jan 2022

கோவை வீரகேரளம் ரோட்டில் உள்ள நாகராஜா குளத்தில் அதிக அளவில் தாமரைப் பூ மலர்ந்துள்ளது.

20 Jan 2022

கடலூர் முதுநகர் கடலில் பிடித்து வந்த சென்னாகுனியை மீனவபெண்கள் உலர்த்தி பதப்படுத்துகின்றனர்.

20 Jan 2022

தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகே அனுமதியின்றி துவக்கப்பட்ட உதயநிதி ஜூஸ் கடை மாநகராட்சியினரால் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

20 Jan 2022

சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட யாகசாலையின் பல்வேறு தோற்றம்.

20 Jan 2022

திருவண்ணாமலை அடுத்த தனக்கோடி புரம் பகுதியில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் 33 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணியில் நடந்தது.

20 Jan 2022

தாம்பரம் அடுத்த செம்பாக்கம் ஏரியில் ஏராளமான கழிவுநீர் கலப்பதால் ஆகாயத்தாமரை செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளன.

20 Jan 2022

சிட்லப்பாக்கம் ஏரியை ஒட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கடைகளை அளவீடு செய்கின்றனர் பொதுப்பணி துறையினர்.

20 Jan 2022

திண்டுக்கல்லில் தொடக்கப் பள்ளி ஆசியர்களுக்கான வலுவூட்டல் பயிற்சியில் பங்கேற்றவர்கள்.

20 Jan 2022

சென்னையில் நாளுக்கு நாள் பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது.இடம்: சென்ட்ரல் பூங்கா ரயில் நிலையம்.

20 Jan 2022

கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

20 Jan 2022

டில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில், வாய்ப்பு மறுக்கப்பட்ட, தமிழக அலங்கார ஊர்தி, சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ள, அலங்கார ஊர்தியை வடிவமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது: இடம்: லேடி வெலிங்கடன்கல்லுாரி, சென்னை.

20 Jan 2022

இது மளிகை பொருள் வாங்க வந்தவர்கள் அல்ல,நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் உயர்வதற்கு இதுவும் ஒரு காரணம்... கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் இடம் கிடைக்க தங்கள் பெயர் பதிவும் செய்யும் படிவத்தை பெற இப்படி கூட்டம் கூட்டமாக காத்திருந்த கொரோனா தொற்று உடையவர்கள்.

20 Jan 2022

தேனியில் முன்கள பணியாளர்கள், 60 வயது கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இடம்: அல்லிநகரம் நகராட்சி ஆரம்பப்பள்ளி.

20 Jan 2022

பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி.

20 Jan 2022

திண்டிவனம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் உரிமம் கோரப்படாமல் 2017 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த 31 வாகனங்களை ஏலம் விடும் பணிக்காக ரோஷனை போலீஸ் ஸ்டேஷனுக்கு லாரியில் ஏற்றி செல்லப்பட்டது.

20 Jan 2022

திண்டுக்கல்- பழைய கரூர் ரோட்டில் குப்பையை கொட்டி தீ வைத்து எரிப்பதால் புகைமண்டலமாக உள்ளது.

20 Jan 2022

திருப்பூர், சைமா அரங்கில் தையல் நிலைய உரிமையாளர்கள் சம்பள பேச்சுவார்த்தை நடந்தது.

20 Jan 2022

சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலம் தங்கத்தை பெற திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருந்த ஏராளமான பயனாளிகள்.

Share
 

Dinamalar iPaper

Advertisement