dinamalar telegram
Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

08 Dec 2021

பழநி அருகே ஆலமரத்துக்களம் பகுதியில் நாற்று நடவு செய்ய டிராக்டர் மூலம் வயலை தயார் செய்யும் பணி நடந்தது.

08 Dec 2021

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது விடுகளின் முகப்பில் கட்டப்படும் ஸ்டார்கள் வண்ண விளக்கு அலங்காரத்தில் ரூ 15 முதல் 300 வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன . இடம் : தாம்பரம் பஜார் பகுதி .

08 Dec 2021

குன்னூர் காட்டேரி பகுதியில் ராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடத்தில் ஆய்வு செய்த முப்படையினர்.

08 Dec 2021

மழை பெய்ததை தொடர்ந்து ஒட்டன்சத்திரம் பைபாஸ் ரோடு பகுதியில் கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில் பசுமையாக காட்சியளிக்கும் சோளப்பயிர்கள்.

08 Dec 2021

வேலுார் அருகே கார் டயர் வெடித்ததால் தலைகீழாக கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

08 Dec 2021

மானாமதுரையில் பொங்கல் பண்டிகைக்காக மண்பானைகள் தயாராகி உலர்த்தி வருகிறார்கள்.

08 Dec 2021

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் மற்றும் வணிக வளாகத்தில், திருநங்கைகளுக்கும் கடை ஒன்று ஒதுக்கீடு செய்து தரக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால், இன்று திறப்பு விழாவின்போது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

08 Dec 2021

சென்னை சேத்துப்பட்டு படகு குளத்தில் மீண்டும் படகு சவாரி தொடங்கியதை தொடர்ந்து மக்கள் தண்ணீரின் அழகை ரசித்தபடி படகில் சென்றனர்.

08 Dec 2021

மார்கழி துவங்குவதற்கு முன்னரே, சென்னையில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இடம்: முகப்பேர்.

08 Dec 2021

விளைநிலங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில், கண்ணுக்கெட்டிய தொலைவிற்கு பசுமையான காட்சியளிக்கும் நெற்பயிர்கள். இடம்: கவரக்குளம், திருவண்ணமலை.

08 Dec 2021

சென்னையில் பெய்த மழையால் சேதமடைந்த கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்ட பூங்கா சீரமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.

08 Dec 2021

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் மற்றும் வணிக வளாகத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து, பஸ் போக்குவரத்தினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

08 Dec 2021

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காய வைக்கப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களை புடைத்து சுத்தம் செய்யும் தொழிலாளர்.

08 Dec 2021

குன்னுார் அருகே நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை ராணுவீரர்கள் மீட்டுச் சென்றனர்.

08 Dec 2021

பெயர் சேர்த்தல்- நீக்கல் குறித்து வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் ஈஸ்வரன், திண்டிவனம் காந்தி நகரில் வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அருகில் சப் கலெக்டர் அமித், மற்றும் அதிகாரிகள்.

08 Dec 2021

திருப்பூர், காசிபாளையம் பகுதியில் முறைகேடாக சாய கழிநீர் வெளியேற்றியது தொடர்பாக தினமலர் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து மாசுக்கட்டுபாட்டு வாரியத்தினர் ஆய்வு மேற்கொண்டனர்.

08 Dec 2021

கடலூர் முதுநகர் துறைமுகம் செல்லும் சால்ட் ஆபீஸ் சாலையில் வெள்ள நீர் வடிவதற்கு பள்ளம் தோண்டப்பட்டது. மீண்டும் மூடப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால் பள்ளி வாகனங்கள் மற்றும் அவசர வாகனங்கள் செல்வதில் தடை ஏற்பட்டது.

08 Dec 2021

தொடர் மழையால் அடையாறு ஆற்றில் அதிக அளவில் காணப்படும் மீன்களுக்காக வரிசையில் காத்திருக்கும் கொக்குகள். இடம்: கோட்டூர்புரம்.

08 Dec 2021

மத்திய ஜி.எஸ்.டி., சார்பில் திருப்பூர் ஏற்றுதியாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் கோவை மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் கலால் வரித்துறை முதன்மை கமிஷ்னர் ஏ.ஆர்.எஸ் குமார் பேசினார்.

08 Dec 2021

கிருஷ்ணகிரி ஆயுதப்படை வளாகத்தில் போலீஸ் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தது.

08 Dec 2021

விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி நடந்தது.

08 Dec 2021

திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, வ.ஊ.சி நகரில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீரை அகற்றக் கோரி பாரதிய ஜனதா கட்சியினர் மீன் பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

08 Dec 2021

திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, வ.ஊ.சி., நகரில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீரை அகற்றக் கோரி பா.ஜ., கட்சியினர் மீன் பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

08 Dec 2021

வால்பாறை அருகே தேயிலை எஸ்டேட்டில் முகாமிட்டிருந்த ஒற்றை யானை மயங்கி விழுந்த நிலையில் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தது.

08 Dec 2021

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி பகல் பத்து 5- ம் நாள் (டிச.,08) ஸ்ரீநம்பெருமாள் ரத்தின பாண்டியன் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைரகைக் காப்பு,விமான பதக்கம், நெல்லிக்காய் மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

08 Dec 2021

சத்திரப்பட்டி அடுத்த வடகரை கிராமத்தில் காட்டு பன்றிகளால் சேதமான மக்காச்சோள பயிர்களுடன் விவசாயிகள்.

08 Dec 2021

திண்டுக்கல்லில் தென்மண்டல ஐ.ஜி. அன்பு ஆய்வு செய்து மோப்பநாய்களை பார்வையிட்டார். அருகில் எஸ்.பி. ஸ்ரீனிவாசன்.

08 Dec 2021

திறக்கப்பட உள்ள மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட்.

07 Dec 2021

கோவை நஞ்சப்பா ரோடு, காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் முன் போதிய மின்விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்துள்ளது.

07 Dec 2021

கலக்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் 12 ஆம் ஆண்டு கதக்களி திருவிழாவின் ஒரு பகுதியாக சூர்ப்பனகங்கம் எனும் கதக்களி நடன நாடகம் நடந்தது.இடம் : கலாக்ஷேத்ரா வளாகம், திருவான்மியூர்.

07 Dec 2021

மாலையில் மேகங்கள் சிவந்து ஓவியமாக காட்சி தந்தது.இடம்: சிவகங்கை அருகே கொல்லங்குடி.

07 Dec 2021

விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் பயிரிடப்பட்டுள்ள சோளக் கதிர்கள்.

07 Dec 2021

புதுச்சேரி அடுத்த தந்திரியான்குப்பம் கடற்கரையில் நீர் சறுக்கு பயிற்சியில் ஈடுபட்ட பெண்.

07 Dec 2021

விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் பயிரிடப்பட்டுள்ள சோள கதிர்கள்

07 Dec 2021

குளிர்காலத்திற்கு ஏற்ற வகையிலான. சொட்டர் வெளிமாநிலத்தில் இருந்து கடலூர் முதுநகருக்கு விற்பனைக்காக வந்துள்ளது.

07 Dec 2021

சென்னையில் மெரினா கடற்கரையில் அந்தி சாயும் பொழுதில் மீன் வலையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்.

07 Dec 2021

புதுச்சேரி பா.ஜ., மகளிர் அணி சார்பில் மத்திய அரசின் வளர்ச்சி பணிகள் குறித்தும் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இடம்: சுதேசி மில்.

07 Dec 2021

தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில் ஆபத்தான வகையில் பயணிகள் கூட்டமாக நின்று பஸ் ஏறி வருகின்றனர். இடம்: தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலை

07 Dec 2021

நடிகர் ரஜினியை, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சசிகலா சந்தித்து பேசினார். அருகில் ரஜினி மனைவி லதா.

07 Dec 2021

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒரு துணிக்கடையில் சாண்டா கிளாஸ் பொம்மை வாடிக்கையாளர்களை கவர்வதற்காக வைக்கப்பட்டுள்ளனர்.

07 Dec 2021

கோவை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த நல்ல மழையின் பயனால் நொய்யலில் வெள்ளம் பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது, பார்க்கவே ஆனந்தமாய் இருக்கிறது. இடம்: பேரூர் தடுப்பணை.

07 Dec 2021

காரமடை ஒன்றியம் மருதூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது இதில் ஊராட்சி மன்ற தலைவர் பூர்ணிமா ரங்கராஜ் பேசினார்.

07 Dec 2021

கார்த்திகை மாதம் என்பதால், பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில், மாடுகளின் வரத்து இருந்தாலும் விற்பனை மந்தமாக நடந்தது.

07 Dec 2021

பொள்ளாச்சி கடைவீதியில், ரோட்டில் சரக்கு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தம் செய்து சரக்குகளை இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

07 Dec 2021

கோவை அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த செயல்வீரர் கூட்டத்தில் எம்.எல்.ஏ., வேலுமணி கலந்து கொண்டு பேசினர். அருகில் எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூன், ஜெயராமன் உள்ளிட்டோர்.

07 Dec 2021

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி வாகைக்குளம் கண்மாய் நிறைந்து நத்தம்பட்டி பிரதான சாலையை மூழ்கடித்து செல்கிறது..

07 Dec 2021

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூர் பகுதியில், மகசூல் நிலையை அடைந்த நெற் பயிர்கள் சாய்ந்துள்ளன.

07 Dec 2021

கடலூர் புதுப்பாளையம் ராஜகோபாலசாமி கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை துவங்கியது.

07 Dec 2021

கடலூர் வண்ணாரப்பாளையம் பீச் செல்லும் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் டூவீலர்கள், நான்குசக்கர வாகனங்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றன.

07 Dec 2021

சென்னை புறநகரில், குளிர்காலத்திற்கு ஏற்ற வகையில், வட மாநில வண்ண, வண்ண போர்வை வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இடம்: செங்குன்றம்.

07 Dec 2021

திண்டிவனத்தில் ஒரு கிலோ தக்காளி விலை 70 முதல் 100 ரூபாய்க்கு விற்க, செவ்வாழை பழங்கள் கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. புதுச்சேரி- திண்டிவனம் பைபாஸ் சாலையில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள செவ்வாழை பழங்கள்.

07 Dec 2021

சென்னை மெரினா கடற்கரையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்.

07 Dec 2021

வழக்கத்திற்கு மாறாக வட சென்னை எண்ணூர் பகுதியில் இன்று கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.

07 Dec 2021

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே, பழைய பம்மது குளம் கிராமத்தில், கீரை விவசாயத்திற்காக, ஏர் பூட்டிய காளைகள் மூலம் பண்படுத்தப்படும் நிலம்.

07 Dec 2021

புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் சென்னையில் உள்ள அமெரிக்கா துணை தூதரகத்தின் துணை தூதர் ஜூடித் ரேவின் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்.

07 Dec 2021

ஊட்டி நகராட்சி மார்கெட்டில், மலைக்காய்கறிகள் வரத்து குறைவால் விலை உயர்ந்தது. காய்களை தரம்பிரிக்கும் பணியில் தொழிலாளர் ஈடுபட்டனர்.

07 Dec 2021

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி சார்பில், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ், இளம் மருத்துவர்களுக்கான செய்முறை பயிற்சி துவக்க விழா நடந்தது. இதில் மருத்துவ மாணவர்கள் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

07 Dec 2021

விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

07 Dec 2021

கடலூர் அடுத்த சுப்பிரமணியபுரம் பகுதியில் ஈஷா யோகா மையத்தின் சார்பில். மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

07 Dec 2021

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலக திறப்பு விழாவில் ராகுல் படத்தை வைத்ததற்கு பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

07 Dec 2021

உடுமலை சின்னப்பன்புதூரில் மழையினால் பாதிப்புக்கு உள்ளாகி காணப்படும் மிளகாய் செடிகள்.

07 Dec 2021

சென்னை, ஆற்காடு சாலையில் நடந்துவரும் மெட்ரோ ரயில் பணிகளால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இடம்: வடபழனி.

07 Dec 2021

விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.

07 Dec 2021

சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரயில் மேம்பால தூண்கள் அழகு படுத்தும் பணியில் குழந்தைகளை கவரும் வகையில் வரைந்துள்ள கார்ட்டூன் ஓவியங்கள். இடம் : கஸ்தூரிபாய் நகர், மத்திய கைலாஷ்.

07 Dec 2021

பறிப்பதற்கு தயரான நிலையில் இருந்த வெண்டை செடிகள் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. (இடம்: பி.அம்மாபட்டி செல்லும் ரோடு)

07 Dec 2021

மதுரை பைபாஸ் ரோடு சாலை முத்து நகர் ரோட்டில் கண்மாய் நீர் கால்வாய் வழியாக வெளியேறி மழைநீர் தேங்கியுள்ளது.

07 Dec 2021

போடி பகுதியில் பெய்த கனமழையால் கீழச்சொக்கநாதபுரம் குள்ளிகவுண்டர் கண்மாய் உடைந்து மழைநீர் ஊருக்குள் புகுந்தது. (இடம் : கீழச்சொக்கநாதபுரம் செல்லும் ரோடு)

07 Dec 2021

கொரோனா காலத்தில் லேப் டெக்னீஷியனாக தற்காலிகமாக ஊழியர்களாக பணிபுரிந்த, லேப் டெக்னீஷியன்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அண்ணா அறிவாலயம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

07 Dec 2021

பூமா வீரவல்லி எழுதிய பாரதியின் கவிதைகள் பயர்லெட்ஸ் (firelets) ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்நூலை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை துணை வேந்தர் சுதா சேஷய்யன் வெளியிட தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் பெற்றுக்கொண்டார். பாரதியாரின் கொள்ளுபேரன் ராஜ்குமார் பாரதி, நூல் ஆசிரியர் பூமா வீரவல்லி. இடம்: நுங்கம்பாக்கம், சென்னை.

07 Dec 2021

கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு திண்டுக்கல் ரவுண்ட் ரோடு கற்பக கணபதி கோயிலில் 108 சங்கு பூஜை நடந்தது.

07 Dec 2021

அடிப்படைவசதி கேட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த மக்கள்.

07 Dec 2021

காணாமல் போன குளத்தை கண்டுபிடித்து தரக்கோரி பெரம்பலுார் கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியாவிடம மனு கொடுத்த நன்னை கிராமத்தைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி நல்லம்மாள்.

07 Dec 2021

முதல்வர் நிகழ்ச்சிக்காக குண்டும் குழியுமாக மாற்றப்பட்ட கோவை வ.உ.சி., மைதானம் மீண்டும் சரிசெய்யப்படாமல் உள்ளது.

06 Dec 2021

தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில் தனியார் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதால் இன்று (டிச.,6) மாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .

06 Dec 2021

கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு திண்டுக்கல் ராம்நகர் வல்லப மகாகணபதி கோயிலில் 108 சங்கு பூஜை நடந்து.

06 Dec 2021

உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கியுள்ளது.

06 Dec 2021

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில் மனு கொடுக்க ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

06 Dec 2021

கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் மத்திய அரசு திட்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி படங்களை புறக்கணிப்பதை கண்டித்து பா.ஜ., கட்சி சார்பில் சிவகங்கை கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.

06 Dec 2021

மதுரை ராஜா மில் பாலம் - எல்.ஐ.சி., பாலம் ஸ்டேஷன் ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது.

06 Dec 2021

புதுச்சேரி எம்.ஜி.ரோடு கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டமாக நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.

06 Dec 2021

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்களாக ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து கடலூரில் அ.தி.மு.க., கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

06 Dec 2021

சென்னையில் மழை நின்று, மாலை வேளையில் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. இடம்: ஐ.சி.எப்.,

06 Dec 2021

கார்த்திகை மூலம் ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள் 152வது ஜன்ம தின வைபவ திருப்புகழ் இசை வழிபாடு கோவை வடவள்ளி ஸ்ரீ வீரமாத்ரே அம்மன் கோவிலில் நடந்தது.

06 Dec 2021

ஊட்டி படகு இல்லத்தில், படகு சவாரி செய்து ஏரியின் அழகை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்.

06 Dec 2021

பள்ளிகளில் மாணவியர் தங்களுக்கு ஏதேனும் பாலியல் தொந்தரவு நடந்தால், அது குறித்து புகார் அளிக்கும் வகையில், உதவி எண் குறித்த அறிவிப்பு பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இடம்: சென்னை உயர்நிலை பள்ளி, தேனாம்பேட்டை.

06 Dec 2021

செக்கச்சிவந்த வானம்: காலையில் ஒளி வீசிய கதிரவன், மாலையில் ஓய்வெடுக்க செல்லும் போது நீல நிற வானம் , சிவந்த நிறத்தில் மாறி அழகாய் காட்சி அளிக்கிறது. இடம்: பொள்ளாச்சி.

06 Dec 2021

அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு புதுச்சேரி சட்டசபை அலுவலகம் முன் அம்பேத்கர் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

06 Dec 2021

சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள பழமை வாய்ந்த மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் கட்டடம் இடிக்கும் பணி நடந்து வருகிறது.

06 Dec 2021

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் 5 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியுள்ளது.

06 Dec 2021

திருப்பூர் டி.பி.என். கார்டன் காசி விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது.

06 Dec 2021

சென்னையில் பெய்த தொடர் மழை காரணமாக, மாதவரம் ரெட்டேரி நீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.

06 Dec 2021

தங்களை தாலாட்டி., சீராட்டி, பெற்றெடுத்த தாய், போதைக்கு அடிமையானதால், இரண்டு குழந்தைகளும் என்ன செய்வதென்று தெரியாமல் அருகில் அமர்ந்திருந்தனர். இடம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம்.

06 Dec 2021

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை அதிகப்படுத்தி வழங்கக்கோரி மனு அளிக்க வந்தனர்.

06 Dec 2021

சிவகங்கை காஞ்சரங்கால் ஊராட்சி மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

06 Dec 2021

புதுச்சேரி மெரினா கடற்கரையில் கடல் சீற்றத்தால் காணமல் போன மணல் பரப்பு.

06 Dec 2021

பசுமை பயணம்: கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பசுமையாய் காட்சியளிக்கும் வயல் வெளிகளுக்கு மத்தியில் ரம்மியமாக ஊர்ந்து சொல்லும் ரயில். இடம்: விருத்தாசலம் - சேலம் பைபாஸ் ரோடு.

06 Dec 2021

என்று எங்கள் குறை தீருமோ... திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

06 Dec 2021

டைடல் பார்க் சிக்னல் அருகில் ஓ.எம்.ஆர் சாலையில், நடந்துவரும் மெட்ரோ பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடம்: தரமணி.

06 Dec 2021

புதுச்சேரி சாராயலு நாயக்கர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் எட்டு மாதங்களுக்கு பிறகு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டதால் வரும் மாணவிகளை ஆசிரியர்கள் ரோஜா பூ கொடுத்து மற்றும் சந்தனம் தெளித்து வரவேற்றனர்.

06 Dec 2021

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இடம்: ராஜா அண்ணாமலை புரம், அடையாறு.

Share
 

Dinamalar iPaper

Advertisement