dinamalar telegram
Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

01 Dec 2021

சரவணா குழுமத்தின் ஒரு கடையான, சரவணா செல்வரத்தினம் கடையில், வருமான வரி துறையினர் இன்று சோதனை நடத்தினர். இடம்: தி.நகர், சென்னை.

01 Dec 2021

கோவை நிர்மலா கலை அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து போலீஸ் துணை தலைமை வார்டன் சாம் பாபு பங்கேற்று பேசினார்.

01 Dec 2021

தொடர் மழையால் பழநி அருகே புதுக்குளம் நிரம்பியதால் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

01 Dec 2021

விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு ஊரணியில் கழிவு நீர் நிரம்பியதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

01 Dec 2021

விருதுநகரில் பெய்த மழையால் பராசக்தி மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்திற்கு நீர்வர துவங்கியது.

01 Dec 2021

திண்டிவனம், முருங்கப்பாக்கத்தில் உள்ள அனைத்து கிணறுகளும் மழையால் நிரம்பி நீர் தளும்பி நிற்கின்றன. தடுப்புச்சுவர் குறைவாக இருப்பதால் ஆபத்தான நிலையில் கிணற்றை கடக்கும் அரசு பஸ்.

01 Dec 2021

மஞ்சுவிரட்டு காளைகளை அலங்கரிக்க தயாராகி வரும் சலங்கை, கொலுசு மற்றும் கலர் கயிறுகள். இடம்: சிவகங்கை அருகே ஒக்கூர்.

01 Dec 2021

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் முடிந்து, அண்ணாமலையார் மலையிலிருந்து, மஹாதீப ராட்சத கொப்பரையை கீழே இறக்கி அருணாசலேஸ்வரர் கோவில் ஆயிரங்கால் மண்படத்தில் வைத்து நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

01 Dec 2021

கேரளா - தமிழகம் இடையில் போக்குவரத்து துவக்கப்பட்ட நிலையில், இரு மாநில எல்லையான நாடுகாணி வழியாக கூடலூருக்கு இயக்கப்பட்ட கேரளா மாநில அரசு பஸ்.

01 Dec 2021

உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து 24 ஆண்டுகளுக்கு பிறகு மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்ட உபரிநீர் பாலாற்றில் பாய்ந்து செல்கிறது.

01 Dec 2021

உலக எய்ட்ஸ் தினம் முன்னிட்டு சிவகங்கையில் கலெக்டர், அதிகாரிகள், மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

01 Dec 2021

மதுரை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நர்சிங் மாணவிகள் மனிதசங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

01 Dec 2021

சென்னை அருகே மணலி புதுநகர் மாநகராட்சி துவக்கப் பள்ளியை சூழ்ந்துள்ள மழை வெள்ள நீர்.

01 Dec 2021

ராமநாதபுரத்தில் பெய்த கனமழை காரணமாக வயல்களில் இடுப்பளவு நீர் சூழ்ந்ததால் பயிர்கள் மூழ்கியது.

01 Dec 2021

மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம் சார்பில், பகவான் யோகி ராம்சுரத்குமார் 103 வது ஜெயந்தி விழா இன்று (டிச.,1) நடந்தது. விழாவில் சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இடம்: திருவல்லிக்கேணி.

01 Dec 2021

சென்னை மெரினா கடற்கரையில் தேங்கிய மழைநீர் செல்வதற்கு வழி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்.

01 Dec 2021

உடுமலை திருமூர்த்தி அணை 24 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடப்பட்டது.

01 Dec 2021

ஊட்டியில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு , ஜே.எஸ்.எஸ்., கல்லூரி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஊர்வலமாக சென்றனர்.

01 Dec 2021

ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது.

01 Dec 2021

விச்சூர் தொழில் பேட்டையிலிருந்து மழை நீர் வெளியேறும் இரண்டாவது பிரதான கால்வாய். இடம்: மணலி புதுநகர்.

01 Dec 2021

தொடர் மழை காரணமாக சென்னை அருகே மணலி புதுநகர் சுந்தர விநாயகர் கோவில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

01 Dec 2021

மணலி எழில் நகரில் வெள்ளநீர் சூழ்ந்து இருப்பதால் படகுகள் மூலம் மக்களை மீட்டுக் கொண்டுவரும் போலீசார்.

01 Dec 2021

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டு, பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ள பழைய பஸ் ஸ்டாண்ட்.

01 Dec 2021

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கோவை கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

01 Dec 2021

விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் ரயில்வே சுரங்க பாதையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்போது மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

01 Dec 2021

பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டில் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களை, வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு செய்தார்.

01 Dec 2021

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் விதமாக சுற்றித்திரியும் மாடுகள்.

01 Dec 2021

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டு, பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ள வணிக வளாகம்.

01 Dec 2021

நீண்ட நாட்களுக்குப் பிறகு கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டதால் உடுமலையில் இருந்து மூணார் செல்லும் பஸ்ஸில் பயணம் செய்வதற்காக காத்திருக்கும் பயணிகள்.

01 Dec 2021

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருப்பூர், ரயில்வே ஸ்டேஷனில் சுகாதார துறை சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

01 Dec 2021

வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திண்டிவனத்தில் நடந்த அவசர செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் மஸ்தான் பேசினார். அருகில் நிர்வாகிகள்.

01 Dec 2021

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் ஜங்ஷனிலிருந்து மாவட்ட எய்ட்ஸ் அழகு சார்பில், விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்து சிறிது தூரம் நடந்து சென்றார். இதில், ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

01 Dec 2021

தி.மு.க., இளைஞர் அணி செயலாளர் உதயநிதி எம்.எல்.ஏ., பிறந்தநாளையொட்டி. விழுப்புரம் மாவட்டம் சின்ன கள்ளிப்பட்டு கிராமத்தில் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

01 Dec 2021

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் இன்று (டிச.1ம் தேதி) துவங்கியது.

01 Dec 2021

கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 23 மாதங்களுக்கு பிறகு கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

01 Dec 2021

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர் வருவதை வரவேற்கும் விதமாக பூ போட்டும் நீர்வழித்தடத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

01 Dec 2021

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருப்பூர், ரயில்வே ஸ்டேஷனில் சிக்கண்ணா கல்லூரி மாணவர்களின் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

01 Dec 2021

மழை விட்டு வெயில் அடித்ததால் உடுமலை பாலப்பம்பட்டியில் பயிரிடப்பட்டுள்ள சோளா பயிர்களுக்கு மேலே நீல வானத்தில் காணப்படும் வெண்மேகங்கள்.

01 Dec 2021

புதுச்சேரியில் சற்று மழை ஓய்ந்ததையடுத்து, கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் வரத் துவங்கியுள்ளனர். இடம் : காந்தி சிலை அருகே.

01 Dec 2021

சென்னையில் பெய்த தொடர் மழையின் காரணமாக, பெசன்ட்நகர் அண்ணை வேளாங்கண்ணி ஆலயம் அருகே, கழிவுநீர் மழைநீருடன் கலந்து குளம்போல் தேங்கி உள்ளது.

01 Dec 2021

கார்த்திகை 2வது செவ்வாய்க்கிழமையையொட்டி தேனி வீரகாளியம்மன் கோயிலில் அலங்காரத்தில் அம்மன்.

01 Dec 2021

ராமநாதபுரம் உத்திரகோசமங்கை பிரகாரத்தில் மழைநீர் தேங்கி உள்ளது

01 Dec 2021

திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் முன் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி தமிழக அரசை கண்டித்து வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

01 Dec 2021

கோவை குனியமுத்தூர் சுகுணா புரத்தில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர்.

30 Nov 2021

சென்னையில் பெய்த தொடர் மழையின் காரணமாக, பெசன்ட்நகர் அன்னை வேளாங்கன்னி ஆலயம் அருகே, கழிவுநீர் மழைநீருடன் கலந்து குளம்போல் தேங்கி உள்ளது.

30 Nov 2021

தொடர் கனமழை காரணமாக,கடலூர் மாவட்டம்,பெண்ணாடம் அடுத்த திருமலை அகரத்தில் சம்பா நெற்பயிர்களில் மஞ்சள் நிற மர்மநோய் தாக்கி உள்ளது.

30 Nov 2021

சென்னை அடையாறு ஆற்றில் அடித்து வரப்பட்ட குப்பைகள் கடற்கரையில் ஒதுங்கி உள்ளன. இடம்: அடையாறு முக துவாரம்.

30 Nov 2021

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் முடிந்து, 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையிலிருந்து மகாதீப ராட்சத கொப்பரையை தோளில் சுமந்து கீழே இறக்கி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு செல்லும் ஊழியர்கள்.

30 Nov 2021

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் சேர்ந்த மஹாலக்ஷ்மி ஸ்ரீ பீடம், ரதத்துடன் கோடி பஞ்சாக்ஷரி ஜப, மஹாருத்ர பாராயண புரஸ்ஸர மூன்று நாள் திருவண்ணாமலை கிரிவலம் நிகழ்ச்சியில் முதல் நாளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

30 Nov 2021

மாநகரப் போக்குவரத்துக் கழகம் - சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து 12 இணைப்பு சிற்றுந்துகளை ஆலந்தூர் ரயில் மெட்ரோ ரயில் ஸ்டேஷனில் இருந்து துவக்கி வைக்கப்பட்டது. இதை சென்னை தலைமை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் துவக்கி வைத்தார்.

30 Nov 2021

சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கன்னி கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் பார்வையிட்டனர்.

30 Nov 2021

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மாநில அரசு குறைக்க வலியுறுத்தி மதுரையில் பா.ஜ., சார்பில் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

30 Nov 2021

வரும் ஜனவரியில் கள் இறக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என கள் இயக்க தலைவர் நல்லசாமி கோவை பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். அருகில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.

30 Nov 2021

திண்டுக்கல் வேடப்பட்டி ஒத்தக்கண் பாலத்தின் அடியில் தண்ணீர் செல்வதால் மக்கள் நடமாட முடியாமலும், டூவீலர் ஓட்டிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

30 Nov 2021

தொடர்மழையால் கடந்த சில நாட்களாகவே பழநி முருகன் கோவிலை சூழ்ந்து வரும் மேகக்கூட்டம்.

30 Nov 2021

கார்த்திகை மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசியை முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

30 Nov 2021

சென்னையில் பெய்த தொடர் மழையால், மேற்கு மாம்பலம் ஏரிக்கரை சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளம்போல் காட்சி அளிக்கிறது.

30 Nov 2021

உடுமலை இ.எஸ்.ஐ., மருத்துவமனை வாசலில் மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கியுள்ளதால் மக்கள் உள்ளே வர வரிசையாக கல் வைத்துள்ளார்.

30 Nov 2021

தொடர் கனமழை காரணமாக விருதுநகர் லட்சுமி நகர் தெருவில் ஆறு போல் ஓடும் மழைநீர்.

30 Nov 2021

மழை வரும் என்று மிரட்டிச் செல்லும் கருமேகங்கள். இடம்: விருதுநகர் நான்கு வழிச்சாலை.

30 Nov 2021

கோவை ராமநாகபுரம் பகுதியில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 86 கிலோ எடையுள்ள சூரை மீன்.

30 Nov 2021

சென்னை சீனிவாசபுரம் முகத்துவாரம் அருகே மழைநீரில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கிய குப்பை கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்.

30 Nov 2021

திண்டிவனம்- சென்னை பை-பாஸ் சாலையில், ஆரியாஸ் ஓட்டல் எதிரில் துவங்கி மேல்மருவத்தூர் வரை, விபத்துகள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள்.

30 Nov 2021

வானில் மழை மேகம் சூழ்ந்திருக்க மீன் பிடிக்கும் பணியை தொழிலாக வைத்துள்ள பொது மக்கள். இடம்: பேரூர் குளம், கோவை.

30 Nov 2021

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் பா.ஜ., சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

30 Nov 2021

ரோடு விரிவாக்கப் பணிக்காக, பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கட்டடம் ஜே.சி.பி., மூலம் அகற்றினர்.

30 Nov 2021

விருதுநகரில் நேற்றிரவு பெய்த கனமழையால் பெத்தனாட்சி நகரில் குளம்போல் தேங்கி உள்ள மழைநீர்.

30 Nov 2021

புதுச்சேரி புதிய பஸ் நிலையம் பின்புறம் ராஜா நகரில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி முகாமை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் துவக்கி வைத்தார்.

30 Nov 2021

திருநெல்வேலி தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காட்சி. இடம்: குறுக்குத்துறை முருகன் கோவில்.

30 Nov 2021

இயற்கையின் அழகே... அழகுதான்... ஊட்டி அருகே லவ்டேல் பகுதியில், கடும் மேகமூட்டத்துடன் மழை பெய்தது.

30 Nov 2021

ஊட்டி ஆவ்லாக் சாலையில், கனமழைக்கு விழுந்த மரத்தை தீயணைப்புத்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

30 Nov 2021

விருதுநகரில் பெய்த தொடர் கனமழையால் அரசு போக்குவரத்து டிப்போ முழுவதும் தண்ணீர் புகுந்து குளம்போல் மாறியுள்ளது.

30 Nov 2021

உடுமலை வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் உட்கார இடமில்லாததால் தரையில் அமர்ந்து போராட்டம் செய்த விவசாயிகள்.

30 Nov 2021

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் புதிய கட்டடங்கள் கட்ட பாறைகள் வெடி வைத்து உடைக்கப்பட்டு குழிகள் தோண்டப்பட்டுள்ளது.

30 Nov 2021

துாத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட லெவிஞ்சிபுரத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் தூத்துக்குடி - திருச்செந்தூர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

30 Nov 2021

நீலகிரி மாவட்டம் லவ்டேலில் ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

30 Nov 2021

தர்மபுரி அடுத்த பாளையம் டோல்கேட் அருகே இன்று (நவ.,30) காலை மழைக்கு மத்தியில் தோன்றிய வானவில் ரம்மியமாக காட்சியளித்தது.

30 Nov 2021

விழுப்புரத்தில் சில தினங்களாக தொடர்ந்து மழையால் பெய்ததால் புதிய பஸ் நிலையத்தில் சூழ்ந்த மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

30 Nov 2021

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் செல்வதால் நீரைக் காய்ச்சிக் குடிக்க நகராட்சி ஆணையர் வலியுறுத்தல்.

30 Nov 2021

புதுச்சேரியில் பெய்த தொடர் மழையால் இந்திராகாந்தி சிக்னலில் கை குழந்தையுடன் பஸ்சுக்காக காத்திருந்த பெண்.

30 Nov 2021

கார்த்திகை சோமவாரத்தில் கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில் சங்காபிஷே பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள்.

30 Nov 2021

சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள குமரன் நகர் தணிகாசலம் தெருவில் உள்ள கால்வாயை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். உடன் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு..

30 Nov 2021

திருப்பூர், காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு தேரில் அருள்பாளித்த ஐயப்ப சுவாமி.

29 Nov 2021

திருவண்ணாமலை கார்த்திகை தீபவிழாவில் 2,668 அடி உயரம் உள்ள மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டு, தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரிந்தது. இதில் கடைசி நாளான இன்று அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலையில் தீப ஜோதியாய் காட்சி.

29 Nov 2021

திருவண்ணாமலை கார்த்திகை தீபவிழாவில் 2,668 அடி உயரம் உள்ள மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டு, தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரிந்தது. இதில் கடைசி நாளான இன்று மேகங்கள் தழுவி செல்ல தீப ஜோதியாய் காட்சி அளிக்கும் அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை குளத்தில் பிரதிபலிக்கும் காட்சி.

29 Nov 2021

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

29 Nov 2021

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா நர்சிங் கல்லூரி மாணவிகளின் விளக்கேற்றும் விழா நடந்தது.

29 Nov 2021

அடுத்த மழைக்கு இடிந்து விழுந்திற கூடாதுல்ல... கோவை மத்திய பஸ் ஸ்டாண்டில் மேற்கூரைகளை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் ஆய்வு செய்தார்.

29 Nov 2021

தொடர் கனமழையால் புதுச்சேரி - கடலூர் சாலை பிள்ளையார்குப்பம் மெயின் ரோட்டில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

29 Nov 2021

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

29 Nov 2021

சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால் மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவில் தெருவில் வீடுகளில் தேங்கியுள்ள மழைநீர்.

29 Nov 2021

புதுச்சேரியில் பெய்த தொடர் மழையால் இந்திராகாந்தி சிக்னலில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

29 Nov 2021

தொடர் கனமழை எதிரொலி... புதுச்சேரி பாகூரில் உள்ள வயல்களில் தேங்கியுள்ள மழை நீரில் நெற் பயிர்கள் மூழ்கியது.

29 Nov 2021

கோவை நவ இந்தியா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு பண்டிகையையொட்டி கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடந்தது.

29 Nov 2021

சிவகங்கையில் மாவட்ட மகளிர் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஊர்வலமாகச் சென்றனர்.

29 Nov 2021

சென்னையில் பெய்துவரும் மழையால் மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவிலில் தேங்கியுள்ள மழைநீர்.

29 Nov 2021

மழை காரணமாக, சென்னை கோயம்பேடு அடுத்த பாடிகுப்பம் ரயில் நகரில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

29 Nov 2021

கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு பொள்ளாச்சி ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில், 1,008 சங்காபிஷேகம் நடந்தது.

29 Nov 2021

வீட்டு மனை பட்டா வழங்க கோரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த காரணம்பேட்டை பருவாய் பகுதி பொதுமக்கள்.

29 Nov 2021

பக்கிங்காம் கால்வாயில் நீர் நிறைந்து கரையோர குடியிருப்பு பகுதிகளான அறிஞர் அண்ணா நகர் 2வது தெருவில் வீடுகளுக்குள் நுழைந்தது. இடம்: நீலாங்கரை.

Share
 

Dinamalar iPaper

Advertisement