dinamalar telegram
Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

17 Oct 2021

கொடைக்கானலில் இருந்து கண்ணுக்குத் தெரியும் அளவிற்கு காணப்படும் இது பார்க்கடல் அல்ல. தேனி, திண்டுக்கல் மாவட்ட பகுதிகள் தான் ரம்யமான சூழலில் கடல் நுரை போல் அழகுற காட்சியளித்தது. அதில் வைகை அணையின் தோற்றத்தை காணமுடிந்தது. இடம் :கோக்கர்ஸ் வாக்.

17 Oct 2021

அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இடம்: மணலி புதுநகர், சென்னை.

17 Oct 2021

கோவையில் கனமழை பெய்து வருவதால் புட்டுவிக்கி அணைக்கட்டு ஆபத்தை உணராத சிறுவர்கள்

17 Oct 2021

வடகிழக்கு பருவமழை யொட்டி விழுப்புரம் தீயணைப்பு துறையில் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் ராபின் காஸ்ட்ரோ முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களை பாதுகாப்பது குறித்து ஒத்திகையில் ஈடுபட்டனர்.

17 Oct 2021

புதுச்சேரி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் குவிந்ததுடன் குளித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

17 Oct 2021

கோவை மத்திபாளையம் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற பெண்ணின் உடலை இரண்டாவது நாளாக தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர்.

17 Oct 2021

கோவையில் தொடர் மழையின் எதிரொலியால் நல்ல சீதோஷண நிலை நிலவி வருவதால் பேரூர் கோளாராம்பதி குளத்தில் அல்லி பூக்கள் பூத்து கண்களுக்கு விருந்தளிக்கிறது.

17 Oct 2021

மேட்டுப்பாளையத்தில் உள்ள மண்டியில் உருளைக்கிழங்குகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

17 Oct 2021

பூண்டு சீசன் முடிவடைந்த நிலையில் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு குறைவான பூண்டுகளே விற்பனைக்கு வந்திருந்தன.

17 Oct 2021

வடகிழக்கு பருவ மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு செந்நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இடம்: கோவை புட்டுவிக்கி தடுப்பணை.

17 Oct 2021

துலா மாதம் என்னும் ஐப்பசிமாத தொடக்கத்தை முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவைசாதித்தார்.

17 Oct 2021

தொடர்ந்து பெய்து வரும் மழையால் சிவகங்கை அருகே பையூர் கண்மாய் நிறைந்து காணப்படுகிறது.

17 Oct 2021

புதுச்சேரி நேரு வீதியில் உள்ள மீன் மார்க்கெடில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.

17 Oct 2021

புதுச்சேரி காந்தி சிலை முன் அரிச்சுவடி மனநல மையம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பிரெஞ்சு சிட்டி சார்பில், உலக மனநல மாத விழிப்புணர்வு விழாவை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்து பார்வையிட்டார். அருகில் அமைச்சர் லட்சுமிநாராயணன், அரிச்சுவடி இயக்குநர் இளவழகன்.

17 Oct 2021

அனைத்துக் கோவில்களும் திறக்க அனுமதி வழங்கியதால், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

17 Oct 2021

அ.தி.மு.க வின் 50வது ஆண்டு பொன்விழா துவக்க நாளையொட்டி, சென்னை தி.நகர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்கு வந்த சசிகலா, தொன்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

17 Oct 2021

அ.தி.மு.க.,வின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், பொன் விழா சிறப்பு மலரை ஒருங்கிணைப்பாளர்பன்னீர்செல்வம் , மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டனர் .

17 Oct 2021

கடலூர் முதுநகர் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் வாங்க கூடிய கூட்டத்தின் ஒரு பகுதி.

17 Oct 2021

உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்கஅருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.

17 Oct 2021

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 6 கிலோ எடை கொண்ட வஞ்சிரம் மீனை வாங்கி செல்லும் மக்கள்.

17 Oct 2021

தேவகோட்டை சங்கரபதி கோட்டை அருகே அ.தி.மு.க., பொன்விழாவை முன்னிட்டு கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க., சிவகங்கை மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

17 Oct 2021

சென்னை காசிமேட்டில் விசைப் படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்கள் தரம் வாரியாக பிரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

17 Oct 2021

இன்று ஞாயிறு விடுமுறை முன்னிட்டு சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பாறை மீனை வாங்கிச் செல்லும் மக்கள்.

17 Oct 2021

ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை திறக்க அரசு அனுமதி அளித்ததால் உடுமலை சி.எஸ்.ஐ., இம்மானுவேல் ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பலர் பங்கேற்றனர்..

17 Oct 2021

சென்னை திருவான்மியூர் மின்சார ரயில் நிலையம் அருகில் பூங்கா அமைக்கும் பணி இறுதிக்கட்ட நிலையை அடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக வர்ணங்களில் ஜொலிக்கும் ரயில் நிலைய தூண்கள்.

17 Oct 2021

புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையம் செல்லும் சாலையில் இருபுறமும் இரு சக்கர வாகனங்கள் சாலையில் நின்று போடுவதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

16 Oct 2021

சென்னை கொளத்தூரில் நடந்த முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த வருமுன் காப்போம் மருத்துவ முகாமில் பங்கேற்ற பொதுமக்கள்.

16 Oct 2021

தொடர்ந்து பெய்து மழையால் சிவகங்கை அருகே பையூர் கண்மாய் நிறைந்து.

16 Oct 2021

புரட்டாசி கடைசி சனிக்கிழமை ஒட்டி கோயில்கள் திறக்கப்பட்டதையடுத்து கோவை சிங்காநல்லூரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவிலில் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டனர்.

16 Oct 2021

சென்னை, தி.நகர் உஸ்மான் சாலையில் பாதசாரிகளுக்கு இடையூராக நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்கள்.

16 Oct 2021

புதுச்சேரியில் தசரா பண்டிகை முடிந்து துர்க்கை காளியை கடலில் கரைக்க எடுத்துச் சென்றனர்.

16 Oct 2021

கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ ஆண்டவனார் அருட்துறையில் பெருமாள் திருக்கல்யாணத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி.

16 Oct 2021

தசரா பண்டிகையை முன்னிட்டு கோவை நல்லாம்பாளையத்திலுள்ள முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் காளி வேடம் மற்றும் பல்வேறு வேடமணிந்து நேர்த்திகடன் செலுத்தினர்.

16 Oct 2021

தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையை நம்பி வானம் பார்த்த பூமியில் ''ஒரு நாற்று நெல்'' வகை பயிர் நடும் பணிக்கு தயாராகும் விவசாயிகள் இடம்: ரிங் ரோடு திருவண்ணாமலை.

16 Oct 2021

பக்கிங்காம் கால்வாயில் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்.இடம் : எஸ்.ஆர். பி. சிக்னல், திருவான்மியூர்

16 Oct 2021

வெள்ளி, சனி, ஞாயிறு கோயில்கள் திறக்க அனுமதிக்கப்பட்டதை அடுத்து புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், பெருமாள் தரிசனம் காண வந்த பக்தர்கள்.

16 Oct 2021

உலக பார்வை தினத்தை முன்னிட்டு கண்தானம் மற்றும் கண் பாதுகாப்பு குறித்து சென்னை, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் கையில் பதாகைகளுடன் மனித சங்கிலி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

16 Oct 2021

விழுப்புரம் மாவட்டம் எல்லிஸ்சத்திரம் தென்பெண்ணை ஆற்று அணைக்கட்டில் நிறைந்துள்ள மழைநீர் மதகு வழியாக வெளியேறுவதை அணைக்கட்டு மேல் நின்று ரசிக்கும் பொதுமக்கள்.

16 Oct 2021

நீலகிரி மாவட்டம் -பந்தலூரில் திடீரென பெய்த மழையால் சாலை மற்றும் கடைகளில் மழை வெள்ளம் புகுந்தது.

16 Oct 2021

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி நம்பி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நம்பி கோவிலுக்கு சென்ற நூற்றுக்கணக்கான பக்தர்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

16 Oct 2021

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் விட்டபடி மரியாதை செலுத்தினார் சசிகலா. இடம்: மெரினா கடற்கரை, சென்னை.

16 Oct 2021

சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வருவதாக வெளிவந்த தகவலையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கட்சி அலுவலகத்தின் வெளியே குவிந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டம்.

16 Oct 2021

ஊட்டி ரோஜா பூங்காவில், ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

16 Oct 2021

அய்யா வைகுண்ட தர்மபதி கோவில், புரட்டாசி மாத திருவிழாவின், முக்கிய நிகழ்வான திருவிளக்கு மற்றும் சரவிளக்கு பணிவிடை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இடம்: மணலி புதுநகர்.

16 Oct 2021

சென்னை கொளத்தூரில் வருமுன் காப்போம் திட்ட துவக்க நிகழ்ச்சியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். உடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு .

16 Oct 2021

கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இடம்: புதுச்சேரி காந்தி சிலை.

16 Oct 2021

ஊட்டி அருகே மசினகுடி வனபகுதியில், டி 23 புலியை பிடித்த வனத்துறையினர் லாரியில் கூண்டில் அடைத்து கொண்டு சென்றனர்.

16 Oct 2021

தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மீனாட்சி மைந்தனாக முருகன் தங்ககுதிரையில் அம்பு போடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

16 Oct 2021

தமிழக காவல் துறை சார்பாக தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து குஜராத் வரை இரு சக்கர வாகன பயணம் செய்யும் தமிழக போலீசார் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் வழியே சென்றனர்.

16 Oct 2021

வார்டு உறுப்பினருக்கு சான்றிதழ் வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்ட விழுப்புரம் அடுத்து கல்யாணமாபூண்டி கிராம மக்கள்.

16 Oct 2021

திண்டுக்கல்லில் பெய்த மழையில் நேருஜி நகர் ரவுண்டனாவில் குளம்போல் தேங்கிய மழைநீரில் ஊர்ந்து சென்ற வாகனம்.

16 Oct 2021

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாக சுவர்களில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்துவது குறித்து விழிப்புணர்வு ஓவியங்களை வரையும் ஓவியர்கள்.

16 Oct 2021

உடுமலை சக்தி விநாயகர் கோவிலில் நடந்த நவராத்திரி நிறைவு நாளில் குழந்தைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

15 Oct 2021

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லி புத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவிலில் பயிரிடப்பட்டு கண்களுக்கு அழகாய் காட்சி தரும் சென்டுபூக்கள்.

15 Oct 2021

தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு முருகன் அம்பு போடும் நிகழ்ச்சியினை தொடர்ந்து தீபாராதனை நடந்தது.

15 Oct 2021

கோவை உக்கடம் புல்லுகாடு பகுதியில் தொற்றுநோய் இருந்து தற்காத்துக்கொள்ள கைகழுவுதல் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

15 Oct 2021

உலக வெண்கோல் தினத்தை முன்னிட்டு கண் பார்வையற்றவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இடம் :திருவொற்றியூர்.

15 Oct 2021

விஜயதசமியை முன்னிட்டு சிவகங்கை காசி விஸ்வநாதர் கோயிலில் குழந்தைகளுக்கு அரிசியில் அ என்று எழுத கற்றுக்கொடுத்தார்கள்.

15 Oct 2021

விஜயதசமியை முன்னிட்டு, சென்னை, ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை நெல்லில் அ எழுத வைத்து மகிழ்ந்தனர்.

15 Oct 2021

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து நாட்களும் கோவில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.

15 Oct 2021

கோயில்கள் திறக்கப்பட்டதையொட்டி கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பா.ஜ., சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அப்போது போலீசார் இடையூறு செய்ததாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்

15 Oct 2021

திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடந்தது. அப்போது, சீருடை மற்றும் புத்தகங்களை குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ) சரண்யா மழலையர்களுக்கு வழங்கினார்.

15 Oct 2021

விழாக்காலமோ... விடுமுறை நாட்களோ இல்லாத தோட்ட தொழிலாளர்கள். நீலகிரியின் பொருளாதாரத்தின் முக்கிய தூண்கள். இடம்: ஊட்டி-

15 Oct 2021

உடுமலை மாரியம்மன் கோவிலில் நவராத்திரி கடைசி நாளில் பக்தர்கள் முளைப்பாரி கரைத்தனர்.

15 Oct 2021

விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியம் பெரியதச்சூர் காலனி மக்கள் தங்களுக்கு தனி பஞ்சாயத்து ஒதுக்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர் அவர்களிடம் வட்டாட்சியர் வெங்கடசுப்ரமனியன், டி.எஸ்.பி.,பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்தினர்.

15 Oct 2021

கொரோனா நோய் பெரும் தொற்று குறைந்ததை அடுத்து,தமிழக அரசால் விதிக்கப்பட்டிருந்த தடைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், தஞ்சை பெரிய கோவில் திறக்கப்பட்டு மூலவர் பெருவுடையாருக்கு பஞ்சதீபம் ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

15 Oct 2021

ஊட்டி-பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் உள்ள தனியார் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது

15 Oct 2021

சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியையை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இடம்: திருப்பூர், காலேஜ் ரோடு ஐயப்பன் கோவில் .

15 Oct 2021

புதுச்சேரி இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில் தர்ம சம்ரஷண சமிதி சார்பில் நவராத்திரியை முன்னிட்டு சத சண்டி ஹோமம் நடந்தது.

14 Oct 2021

தடுப்பூசி தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மத்திய தொல்லியல் மற்றும் பாதுகாப்பு துறையின் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் சிறப்பு வண்ண ஒளி அமைப்பு அமைக்கப்பட்டு இருந்தது.

14 Oct 2021

திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் சீறிப் பாய்ந்து வரும் தண்ணீரில், ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டிவரும் இளைஞர்

14 Oct 2021

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் நவராத்திரி உற்சவம் ஒன்பதாம் நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பராசக்தி அம்மன்.

14 Oct 2021

ஆயுத பூஜையை முன்னிட்டு திருப்பூர், வடக்கு தீயணைப்பு வாகனங்களில் வாழை மரம் கட்டி பூஜை செய்து ஊர்வலம் வந்தனர்.

14 Oct 2021

விடுமுறை தினம் என்பதால், சென்னை மெரினா கடற்கரையில், குவிந்த மக்கள் கூட்டம்.

14 Oct 2021

சில தினங்களாக பெய்து வரும் மழையால் சிவகங்கை கீழ்பாத்தி கண்மாயில் தண்ணீர் பெருகிவருகிறது அதில் வெண்மேகங்கள் முகம் பார்த்து செல்கிறது.

14 Oct 2021

ஊட்டி தாவரவியல் பூங்காவில், சுற்றுலா பயணிகள் முககவசம் அணிய வலியுறுத்தும் ஊழியர்.

14 Oct 2021

ஆயுத பூஜையையொட்டி கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு சிட்கோ தொழில் பேட்டை பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.

14 Oct 2021

கோவை நல்லா பாளையத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா விழாவையொட்டி வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக சாமி அலங்காரம் அணிந்து ஊர்வலமாக வந்தனர்.

14 Oct 2021

பசுமையின் படலம் விவசாயத்தின் அழகு... இடம்: கோவை சாடிவயல் பகுதி.

14 Oct 2021

சென்னை, தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள தமிழக நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக சுவற்றில் பொதுமக்களை கவரும் வகையில் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள்.

14 Oct 2021

ஆயுத பூஜையை முன்னிட்டு தங்கள் விசைப்படகுகளுக்கு பூஜை செய்து ஆயுத பூஜையை கொண்டாடிய மீனவர்கள்.இடம்: காசிமேடு.

14 Oct 2021

ஆயுத பூஜையை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க குவிந்த மக்கள்.இடம்: பத்திரியன் தெரு, பிராட்வே.

14 Oct 2021

புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது

14 Oct 2021

திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் சீறிப் பாய்ந்து வரும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் தண்ணீரில் சாகசம் செய்யும் சிறுவர்கள்

14 Oct 2021

கோவை சாய்பாபா காலணி பகுதியில் தமிழக அரசின் கைத்தறி மற்றும் உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

14 Oct 2021

ஆயுத பூஜையை முன்னிட்டு கொத்தால் சாவடி மார்க்கெட் பகுதியில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த வாகன ஓட்டிகள்.

14 Oct 2021

ஆயுத பூஜையையொட்டி ஆங்காங்கே ரோடுகளில் திருஷ்டி சுற்றி உடைக்கப்படும் பூசணிக்காய்களால் டூவீலர் வாகன ஓட்டிகள் மிக சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இடம்: கோவை - பாலக்காடு மெயின் ரோடு குனியமுத்தூர்.

14 Oct 2021

ஆயுத பூஜையை முன்னிட்டு பாடிகாட் முனீஸ்வரர் கோவிலில் தங்கள் வாகனத்திற்கு பூஜை செய்து ஆயுத பூஜையை கொண்டாடிய மக்கள்.இடம்: பல்லவன் சாலை.

14 Oct 2021

புதுச்சேரி தர்ம சம்ரக் ஷணசமிதி சார்பில் நவராத்திரியை முன்னிட்டு ஈசிஆர் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில் சதசண்டி ஹோமம் நடந்தது.

14 Oct 2021

சென்னை, ராமாபுரம் ஏரியில் உற்சாக குளியல் போடும் சிறுவர்கள்.

14 Oct 2021

ஆயுத பூஜையை முன்னிட்டு வாகனங்களை சுத்தம் செய்வதற்காக ஆற்றங்கரையில் அணிவகுத்து நின்ற காட்சி. இடம்: செம்மண்டலம், கடலூர்.

14 Oct 2021

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் தொடர் மழை மற்றும் லேசான வெயில் காரணமாக தேயிலைத்தோட்டங்கள் பசுமைக்கு மாறி கண்களுக்கு விருந்தளிக்கிறது.

14 Oct 2021

தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடலூர் மஞ்சக்குப்பம் கிளை சார்பில் திருவந்திபுரத்தில் நவராத்திரி கொலு வைத்து வழிபட்டனர்.

14 Oct 2021

மன்னார் வளைகுடா பகுதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எச்சரித்துள்ளதால், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 8000 நாட்டுப்படகு மீனவர்கள், மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் கரையில் நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தது.

14 Oct 2021

திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடிய அரசு ஊழியர்கள்.

14 Oct 2021

ஆர்.எஸ்.மங்கலம் அருகே மங்கலம் பகுதியில், மழையால் மூழ்கிய நெல் பயிர்களை காப்பாற்ற, வயலில் உள்ள நீரை, மோட்டார் மூலம் வெளியேற்றும் விவசாயிகள்.

14 Oct 2021

தொடர் விடுமுறை காரணமாக சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் அலைமோதிய பயணியர் கூட்டம்.

14 Oct 2021

தொடர் விடுமுறையை ஒட்டி கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சென்ற பொதுமக்கள். அதிக அளவில் பஸ்கள் இருந்தும் குறைவான அளவில் பொதுமக்கள் பயணித்தனர்.

13 Oct 2021

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் நவராத்திரி உற்சவம் எட்டாம் நாள் லிங்க பூஜை அலங்காரத்தில் பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

13 Oct 2021

முதல்வர் ஸ்டாலின் கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர். என் ரவியை சந்தித்து பேசினார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அதிகாாிகள் உடனிருந்தனர்.

Share
 

Dinamalar iPaper

Advertisement