dinamalar telegram
Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

26 Oct 2021

வேலுார் கலெக்டர் அலுவலகத்தில், பெட்ரோல் கேனுடன் பெண் தர்ணா செய்தார்.

25 Oct 2021

ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டனர்

25 Oct 2021

உணவு பாதுகாப்பு துறை சார்பில், உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணாநகர் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. உணவுகளில் கலப்படங்களை கண்டறிவது குறித்து மாணவியரிடம் உணவு பாதுகாப்பு துறையினர் விளக்கினர்.

25 Oct 2021

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஸ்வாமி கோயிலில் உள்ள யானைகள் ஆண்டாள் மற்றும் லட்சுமி குளிப்பதற்காக, ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை சாலையில் "உடையவர் தோப்பில்" கட்டப்பட்டுள்ள புதிய நீச்சல் குளத்தில் குளித்து கும்மாளமிட்டது.

25 Oct 2021

திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தில் உபரி நீர் திறந்து விட்டதால் அங்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில் ஆபத்தான முறையில் வாலிபர்கள் குளித்தும் டைவ் அடித்து விளையாடினர்.

25 Oct 2021

புதுச்சேரி நோனான்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் படகு இயங்கியது. உற்சாகமாக வலம் வந்த மக்கள்.

25 Oct 2021

தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்த, திண்டிவனம் கருவூல புதிய கட்டடத்தை அமைச்சர் மஸ்தான் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

25 Oct 2021

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பட்டு வருகிறது. இதற்கு தமிழகத்திலிருந்து ராம பரிவார் சார்பில் ராமர், லட்சுமணர், சீதை, மற்றும் ஆஞ்சிநேயர் பஞ்ச உலோக விக்கிரகங்கள் வழங்க உள்ளது. 20வது இடமாக காரமடை ஐயப்பன் திருக்கோயில் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டது.

25 Oct 2021

உலக உயர வளர்ச்சி தடைபட்டோர் தினத்தை ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி கொண்டாடிய மாற்றுத்திறனாளிகள். இடம்: திருவல்லிக்கேணி, சென்னை.

25 Oct 2021

தீபாவளி பண்டிகை முன்னிட்டு புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் பட்டாசு தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

25 Oct 2021

ஊட்டி படகு இல்ல வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற நீதிமன்ற உத்தரவு வந்ததால் வியாபாரிகளே கடைகளில் உள்ள பொருட்களை அகற்றினர்.

25 Oct 2021

கல்குவாரி தடைவிதிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, திருப்பூர் அடுத்த ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த கிரைண்டர் கல் கொத்தும் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

25 Oct 2021

ஊட்டி தாவரவியல் பூங்கா, இத்தாலியன் பார்க்கில் 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் பூத்துள்ளதால் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

25 Oct 2021

திருவாரூர் நகராட்சிக்கு எதிரில் உள்ள கமலாலயம் குளத்தின் தென்கரை மதில்சுவர் தொடர் மழை காரணமாக இடிந்து குளத்திற்குள் விழுந்தது.

25 Oct 2021

திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள உயர்கோபுர மின் விளக்கு எரியாததால், நோயாளிகள் இரவு நேரங்களில் சிரமப்படுகின்றனர்.

25 Oct 2021

தொடர் மழை காரணமாக திருப்பூர் ஆண்டிபாளையம் குளம் நிறைந்து கடைமடை வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது.

25 Oct 2021

விசாரணைக்காக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு வந்த முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இடம்: ஆலந்தூர்.

25 Oct 2021

தீபாவளி முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பட்டாசு ஏதும் கொண்டு செல்கிறார்களா? என ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனையிட்டனர்.

25 Oct 2021

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இரண்டு மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்து பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

25 Oct 2021

குளத்திற்குள் பனி... திருப்பூர், நஞ்சராயன் குளத்தில் பனி சூழ்ந்து ரம்மியாக காட்சியளிக்கிறது.

25 Oct 2021

கோவை செட்டிபாளையம் கரி மோட்டார் ஸ்பீடு வேயில், ஜே.கே., டயர் சார்பில் நடந்த தேசிய அளவிலான பைக் பந்தயப் போட்டியில் ஆர்.இ., ஜி.டி., பிரிவில் சீறிப்பாய்ந்த பைக்குகள்.

25 Oct 2021

கடலின் முகத்துவாரம் பகுதியில்,மணல் மேடுகளை அகற்றும் பணி பொக்லைன் இயந்திரம் மூலம் நடக்கிறது. இடம்: எண்ணூர்.

25 Oct 2021

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 4-ம் பட்டாலியன் என்.சி.சி., மாணவ, மாணவிகள் சார்பில் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியிலிருந்த பிளாஸ்டிக் குப்பைகள் எடுத்து, சுத்தம் செய்தனர்.

25 Oct 2021

அப்பாடா தீபாவளி வந்துடுச்சு:நடமாடும் துணிக்கடை தெருக்களில் உள்ள வீடுகளுக்கு வீடு வீடாகச் சென்று தீபாவளி பண்டிகையொட்டி துணி வியாபாரம் செய்ய வேன் முழுவதும் துணிகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு தயாராக செல்கிறது. இடம்:கடலூர் மஞ்சகுப்பம் பீச் ரோடு.

25 Oct 2021

அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பில் கோவை ஈச்சனாரி கற்பகம் பல்கலையில், தேசிய அளவிலான சிலம்பப் வீரர்கள், நடுவர்கள் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி பட்டறை நடக்கிறது.

25 Oct 2021

ஆறும்-கடலும் கலக்கும் பகுதியான முகத்துவாரம்.இடம்: எண்ணூர்.

25 Oct 2021

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம், கடைவீதியில் உள்ள ஜவுளி கடைகளில் புத்தாடை வாங்குவதற்காக குவிந்த மக்கள்.

25 Oct 2021

கோவை...சிறுமுகை அடுத்த பகத்தூர் கிராமத்து மக்கள் விவசாயம் மேம்படவும் நிலத்தடி நீர் உயர்வதற்கும் பள்ளத்தை தூர் வாரினர். இதில் பருவமழை காரணமாக நீர் நிரம்பியது.

25 Oct 2021

கருரில் பெய்த மழையில் வடக்கு பிரகாசம் சாலை வேரோடு மரம் சாய்ந்தது. அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

24 Oct 2021

புதுச்சேரி தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி மைதானத்தில் பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பு அங்காடியை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார்..அருகில் முதல்வர் ரங்கசாமி,கூட்டுறவுத்துறை அமைச்சர் சாய் சரவணன். ஆறுமுகம் எம்.எல்.ஏ.

24 Oct 2021

அரசு பஸ்சை தள்ளும் அரசு ஊழியர்கள் இடம். கடலூர் பஸ் நிலையம்.

24 Oct 2021

குளத்திற்குள் பனி...திருப்பூர், நஞ்சராயன் குளத்தில் பனி சூழ்ந்து ரம்மியாக காட்சியளிக்கிறது.

24 Oct 2021

ஸ்டண்ட் ஷோ...:கோவை செட்டிபாளையம் கரி மோட்டார் ஸ்பீடு வேயில், ஜே.கே., டயர்ஸ் சார்பில் நடந்த தேசிய அளவிலான கார் மற்றும் பைக் பந்தய போட்டியின் முடிவில் நடந்த கார் சாகச நிகழ்ச்சி.

24 Oct 2021

தீபாவளி பண்டிகை நெருங்கியதையொட்டி பொருட்கள் மற்றும் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இடம் : தி .நகர்

24 Oct 2021

மண்டல அளவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி அணியினர்.

24 Oct 2021

சென்னை மெரினா கடற்கரைக்கு வர நவம்பர் 1 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் வருவதற்கு தடை உள்ள நிலையில், தடையை மீறி கடற்கரையில் குவிந்த மக்கள் கூட்டம்.

24 Oct 2021

திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் தீபாவளி பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

24 Oct 2021

அகில இந்திய சிலம்ப சம்மேளனம் சார்பில், கோவை ஈச்சனாரி கற்பகம் பல்கலையில், தேசிய அளவிலான சிலம்ப வீரர்கள், நடுவர்கள், பயிற்சியாளர்களுக்கு நடந்த பயிற்சி பட்டறையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

24 Oct 2021

நிழலும்... நிஜமும்... தமிழக அரசு ஊரடங்கில் பெரும்பாலான தளர்வுகள் அளித்துவிட்டதால், சென்னை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். காலை நேரத்தில் வாலிபால் விளையாடி மகிழும் இளைஞர்களும் அவர்களின் நிழல்களும். இடம்: நொச்சிக்குப்பம்.

24 Oct 2021

கோவை மாநகர மக்களை மிரட்டிய மின்னல். இடம்:மருதமலை ரோடு.

24 Oct 2021

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை பெரியகடை வீதியில் உள்ள துணிக்கடைகளில் புத்தாடை வாங்க குவிந்த மக்கள்.

24 Oct 2021

தமிழக தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க வந்தார். அருகில் மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன்.

24 Oct 2021

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்த மாநிலம் தழுவிய சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார். அருகில் சுகாதாரத்துறை செயலர் அருண்.

24 Oct 2021

கோவை மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் சார்பில், நடந்த பெண்களுக்கான மண்டல அளவிலான கூடைப்பந்து இறுதி போட்டியில், பி.எஸ்.ஜி., அணியும், அல்வேணியா அணியும் மோதின.

24 Oct 2021

மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்kத்தூரில் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி, எம்.எல்.ஏ. தமிழரசி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

24 Oct 2021

ஆபத்தை உணராமல் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்வது அதிகரித்து வருகிறது. இடம்: சிவகங்கை-திருப்புத்தூர் ரோடு.

24 Oct 2021

இந்தியாவில் 100 கோடிக்கு மேல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு சாதனை படைத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, பா.ஜ., சார்பில் கோவை ஈஷா யோக மையத்தில் உள்ள ஆதியோகி முன் நடந்தது.

24 Oct 2021

மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அவரது நினைவிடத்தில் உள்ளி சிலைக்கு சிறுவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

24 Oct 2021

காற்றில் பறந்த கொரோனா... கட்டுப்பாடுகள்: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.

24 Oct 2021

மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

24 Oct 2021

உடுமலை பழனி ஆண்டவர்நகர் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷகேம் முன்னிட்டு கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றினர்..

24 Oct 2021

தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் நெல் பயிரிடப்பட்ட வயல்கள் பசுமையாக காட்சியளிக்கிறது.இடம் : திருப்புல்லாணி அருகே உத்தரவை.

24 Oct 2021

விடுமுறை தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் பொதுமக்கள் குவிந்தனர்.

24 Oct 2021

கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட பழநி முருகன் கோயிலில் தங்கரதம் நேற்று முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

24 Oct 2021

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடமான சென்னை தி.நகர் பகுதியில், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆய்வு மேற்கொண்டு, முக கவசம் அணியாமல் வந்த பொது மக்களை எச்சரித்து, முக கவசங்களை வழங்கினர். இடம் : பாண்டி பஜார்

23 Oct 2021

தமிழக கவர்னர் ஆர். என் ரவி தலைநகர் புதுடில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.

23 Oct 2021

விடுமுறை தினத்தையொட்டி பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் குவிந்த பொதுமக்கள் கூட்டம்.

23 Oct 2021

கோவை செட்டிபாளையம் கரி மோட்டார் ஸ்பீடு வேயில் ஜே.கே., டயர் சார்பில் நடந்து வரும் தேசிய அளவிலான கார் பந்தயப் போட்டியில் எல்.ஜி.பி., பார்முலா- 4 பிரிவில் சீறிப்பாய்ந்த கார்கள்.

23 Oct 2021

மழைநீர் அல்ல.. கானல் நீர்... : மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தாலும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கமும் குறையவில்லை என்பதற்கு சாலையில் தென்பட்ட கானல் நீரே சாட்சி. இடம்: தேனி மாவட்டம் க.விலக்கு - வருஷநாடு ரோடு.

23 Oct 2021

திருப்பூர், தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த ஓட்டுப்பெட்டிகள் உத்திரபிரதேச மாநிலத்திற்கு கொண்டு செல்ல லாரியில் ஏற்றப்படுகிறது.

23 Oct 2021

புதிய தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அத்தி நாற்றுகளை இளம் விஞ்ஞானி ஸ்ரீ லஷ்மி, புதுச்சேரி சபாநாயகர் செல்வத்திடம் காண்பித்தார். அருகில் ராமலிங்கம் எம்.எல்.ஏ., கூடப்பாக்கம் வேங்கடபதி.

23 Oct 2021

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் புதூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த 87 பேருக்கு, 25 ஆண்டுகளாக இலவச வீட்டுமனைப்பட்டா கிடைக்காமல் தவித்தனர். இந்நிலையில் எம்.பி., பழனிமாணிக்கம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கினார்.

23 Oct 2021

கோவை செட்டிபாளையம் கரி மோட்டார் ஸ்பீடு வேயில் ஜே.கே., டயர் சார்பில் நடந்து வரும் தேசிய அளவிலான கார் பந்தயப் போட்டியில் எல்.ஜி.பி., பார்முலா- 4 பிரிவில் சீறிப்பாய்ந்த கார்கள்.

23 Oct 2021

ஒட்டன்சத்திரம் - பழநி பைபாஸ் ரோட்டில் தண்ணீர் ஓடுவது போல கண்ணுக்கு தெரிந்த துாரம் வரை கானல் நீர் காட்சியளித்தது.

23 Oct 2021

கடலூர் முதுநகர் மனவெளி பகுதியில் நடந்த முகாமில் திருநங்கைகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது.

23 Oct 2021

மதுரையில் நடந்த மாநில அளவிலான யோகா போட்டியில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள்.

23 Oct 2021

வயலுக்கு இறைதேடி வந்த பறவைகள்.இடம்: சிவகங்கை அருகே சாமியார்பட்டி.

23 Oct 2021

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

23 Oct 2021

தாம்பரம் சித்தமருத்துவமனை அருகே உள்ள சுமார் ஒன்பது ஏக்கர் இடத்தில் தாம்பரம் மாநகராட்சி கட்டடம் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டடம் கட்டுவதற்காக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் , மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி ஆய்வு செய்தனர்.

23 Oct 2021

புதுச்சேரியில் பாரத் சேவக் சமாஜ் பல்கலைக்கழகம் சார்பில் நடந்த விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி முருகபூபதிக்கு டாக்டர் பட்டத்தை பல்கலை சேர்மன் மேன்வேல் வழங்கினார். அருகில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சம்பத்குமார் மற்றும் பலர்.

23 Oct 2021

சென்னை தி.நகரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அடுத்த ஆண்டிற்கான காலண்டர் டைரி விற்பனையை தமிழக ஆலோசனை குழுவின் தலைவர் சேகர் வெளியிட்டு துவக்கி வைத்தார்.

23 Oct 2021

சென்னை பெருங்குடி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரிசையில் அமர்ந்திருந்த பொதுமக்கள்.

23 Oct 2021

கதிரவன் ஒளிகள் மரக்கிளைகளில் ஊடுருவி, பொன்னிறத்தில் அழகாய் வரவேற்கிறது நம் காலை பொழுதை. இடம்: பெசன்ட் சாலை, பெசன்ட் நகர், சென்னை.

23 Oct 2021

மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் பாதையில் ஆடர் லி மற்றும் ஹில்குரோ இடையே மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டதால் பயணிகள் ரயில் மேட்டுப்பாளையம் திரும்பி வந்தது.

23 Oct 2021

சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த, மெகா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட மருத்துவ துறை செயலர் ராதாகிருஷ்ணன்.இடம்: சேப்பாக்கம்.

23 Oct 2021

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு மற்றும் தொற்று நோயால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை வழங்கினார். அருகில் கலெக்டர் சமீரன்.

23 Oct 2021

பொள்ளாச்சியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள சிறுவர் சிறுமியருக்கான மனமகிழ் மன்றம் நிகழ்ச்சியில், எஸ்.பி., செல்வநாகரத்தினம் நோட்டு புத்தகங்களை, மாணவர்களுக்கு வழங்கினார்.

23 Oct 2021

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி 70 வது பிறந்தநாளை முன்னிட்டு வடபழனியில் நலத்திட்ட உதவிகளை மாநில துணைத்தலைவர் கோபண்ணா வழங்கினார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் காண்டீபன் விழா ஏற்பாடுகளை செய்தார்.

23 Oct 2021

விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை சந்தித்து வாழ்த்து பெற்ற0னர்.

23 Oct 2021

சென்னை தீவுத்திடல் அருகே தடுப்பூசி போட்டுக்கொள்பவர்ளுக்கு குலுக்கல் முறையில் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதால் முகாமிலேயே பொருட்களை வைத்துள்ளனர்.

23 Oct 2021

விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக ஜெயசந்திரன் பொறுப்பேற்றார். அருகில் கலெக்டர் மோகன்.

23 Oct 2021

கோவிட் பரவல் காரணமாக, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சியை ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று மீண்டும் துவக்கி வைத்தார்.

23 Oct 2021

பழநி வரதமாநதி அணை கரையில் கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில் புற்கள் வளர்ந்துள்ளது.

23 Oct 2021

கொரோனா பரவல் காரணமாக, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சியை ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீண்டும் துவக்கி வைத்தார்.

22 Oct 2021

பசுமை படர்ந்த பூமி இது...:விவசாயத்தின் மகிமை ,பசுமை போர்த்திய நிலங்களை கண்டால் தெரியும். இடம்: கோவை வேடப்பட்டி ரோடு.

22 Oct 2021

காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு போலீஸ் பேண்ட் குழுவினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.இடம்: மெரினா கடற்கரை, சென்னை.

22 Oct 2021

விழுப்புரம் தெளி ஊராட்சி துணைத் தலைவரை மாற்றி அறிவித்து விட்டதாக உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கானை ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு மறு ஓட்டுப்பதிவு நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

22 Oct 2021

மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.

22 Oct 2021

உடுமலை திருமூர்த்திமலை பாலாற்றில் வரும் மழைநீர் திருமூர்த்திஅணைக்குள் பாய்ந்து செல்கிறது.

22 Oct 2021

கோவை மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் சைபர் குற்றங்கள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர்.

22 Oct 2021

புதுச்சேரி தட்டாஞ்சாவடி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அலுவலகத்தில் மத்திய குழு உறுப்பினர் ராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

22 Oct 2021

திருப்பூர் வித்தியாலயம் பகுதியில், பா.ஜ., கட்சி அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதை தேசிய செயலாளர் அருண் சிங், மாநில தலைவர் அண்ணாமலை, மாநில மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

22 Oct 2021

பனங்கிழங்கு சீசன் துவங்கியது; இடம் :- அவிநாசி, திருப்பூர் ரோடு.

22 Oct 2021

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் தமிழக உறுப்பு மாற்று ஆணையம் இணைந்து நடத்தும் எலும்பு தானம் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். உடன் எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் மருத்துவ குழுவினர்.

22 Oct 2021

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

22 Oct 2021

போனஸ் உப்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு என்.டி.சி., ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

22 Oct 2021

பனி போர்த்தி காணப்படும் ரயில்வே தண்டவாளத்தில் முகப்பு விளக்கை எரியவிட்டு வரும் ரயில். இடம்.உடுமலை.

22 Oct 2021

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கண்ணாடி மாளிகையில் பூத்துள்ள ஆந்தோரியம பூ.

22 Oct 2021

தனியார் பள்ளிக்கு இணையாக நவீன முறையில் மாற்றப்பட்டுள்ள அரசு மாநகராட்சி தொடக்கப்பள்ளி. அங்கு, அமைக்கப்பட்டுள்ள நூலகம். இடம். திருச்சி, வண்ணாரப்பேட்டை ரோடு.

22 Oct 2021

ஊட்டி போல் மாறிய சாலை...:கோவையில் இரவில் ஏற்பட்ட பனிமூட்டத்தின் அழகுதான் இது.இடம்: பொள்ளாச்சி ரோடு.

Share
 

Dinamalar iPaper

Advertisement