dinamalar telegram
Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

20 Oct 2021

கோவையில் பெய்து வரும் மழையால் நிரம்பியுள்ள பெருமாள் கோவில்பதி முண்டந்துறை தடுப்பணை.

20 Oct 2021

நீலகிரி, பந்தலூர் முருகன் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவனுக்கு காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னபிஷேகம் நடந்தது.

20 Oct 2021

கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் நிரம்பியுள்ள நண்டங்கரை தடுப்பணை.

20 Oct 2021

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள ராமலிங்க செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் 1975-76ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.

20 Oct 2021

வழிப்பறியில் திருட்டுப்போன செல்போன்களை கோவை எஸ்.பி., அலுவலகத்தில் உரியவரிடம் எஸ்.பி., செல்வ நாகரத்தினம் வழங்கினார்.

20 Oct 2021

ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயிலில் சிறப்பு யாகம் நடந்தது.

20 Oct 2021

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டதால் சோனாநதி பகுதியில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட கிரிவலப்பாதை.

20 Oct 2021

விழுப்புரம் சுற்றியுள்ள கிராமங்களில் சில வாரங்களாக பெய்த மழையால் விவசாயிகள் நெல் நாற்று நட்டு விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதால் பசுமையாக காட்சியளிக்கும் விவசாய நிலங்கள்.

20 Oct 2021

அரியலுார் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 60 கிலோ அரிசியால் அன்னாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

20 Oct 2021

ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவிலில் மூலவர் பெருவுடையார் திருமேனிக்கு, 750 கிலோ அரிசியில் சமைத்த சாதத்தாலும், 650 கிலோ காய்கறிகளாலும், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

20 Oct 2021

மதுரை.தெற்குமாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகத்துடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.

20 Oct 2021

புதுச்சேரி கோரிமேடு காவலர் மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நடந்த பயிற்சியை கலெக்டர் ரிஷிதா குப்தா துவக்கி வைத்து பேசினார்.

20 Oct 2021

விழுப்புரம் மஹாலட்சுமி பிளாசாவில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்த தீயணைப்புதுறையினரின் இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தும் பொருட்களை கலெக்டர் மோகன் பார்வையிட்டார். அருகில் போலீஸ் எஸ்.பி., ஸ்ரீநாதா.

20 Oct 2021

இப்ப வருமோ... எப்ப வருமோ... மழை அறிகுறியுடன் தஞ்சை பெரிய கோவிலைச் சூழ்ந்த கார்மேகங்கள்.

20 Oct 2021

ஐப்பசி மாதத்தையொட்டி உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் விஸ்வநாதர் சுவாமிக்கு அன்னாபிஷேகத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

20 Oct 2021

திருப்பூர், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் துவைக்கி வைத்து பேசினார்.

20 Oct 2021

கடலூர் முதுநகர் துறைமுகத்தில் கப்பல் வந்து நிற்கும் தலம் கட்டுமான பணி முடிந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் சரக்கு கப்பல் போக்குவரத்து பணி துவங்க தயார் நிலையில் உள்ளது.

20 Oct 2021

தடையை மீறி மதுரை கோரிப்பாளையம் தர்காவிற்கு செல்ல முயன்ற பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலூர் இப்ராகிம் மற்றும் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

20 Oct 2021

தூர்வாரப்படாமல், ஆகாயத்தாமரை வளர்ந்து காணப்படும் சென்னை கொரட்டூர் ஏரி.

20 Oct 2021

சிக்குமா மீன்கள்.... சென்னை எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் வலைவீசி மீன்களை பிடிக்கும் மீனவர்.

20 Oct 2021

புதுச்சேரியில் திடீரென மழை பெய்ததால் சாலை வெறிச்சோடிக் காணப்பட்டது. இடம்: கடலூர் - புதுச்சேரி அரியாங்குப்பம்.

20 Oct 2021

பொள்ளாச்சி அருகே கண்ணுக்கெட்டும் தூரம் வரை தங்குதடை வளைவுகள் ஏதுமின்றி காட்சியளிக்கும் நடுபுனி நெடுஞ்சாலை.

20 Oct 2021

மிலாது நபி விழாவையொட்டி கோவை கோட்டை மேடு ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத் சார்பில் சலுகை விலையில் பிரியாணி வழங்கப்பட்டது.

20 Oct 2021

சென்னை மயிலாப்பூர் பகுதியில் உரிய அடையாள அட்டை இன்றி வாகனங்களில் வழக்கறிஞர் பத்திரிக்கையாளர் என ஸ்டிக்கர் ஒட்டி வருபவர்களை சோதனை செய்த போலீசார்.இடம். லஸ் கார்னர்

20 Oct 2021

ஊட்டி அருகே தொட்டபெட்டா சிகரத்திற்கு, செல்லும் சாலை சரிந்து பல மாதங்களாக அப்படியே உள்ளது.

19 Oct 2021

அறுவடைக்கு தயாராக காணப்படும் கம்பு பயிர்கள். இடம்.உடுமலை.

19 Oct 2021

மழை பெய்ததை தொடர்ந்து பழநி அருகே கண்ணாடிப் பெருமாள் கோயில் குளம் நிறைந்து ரம்யமாக காட்சியளிக்கிறது.

19 Oct 2021

புதுச்சேரி கடற்கரையில் பெங்களூர் மாணவன் குளிக்கும் போது இறந்தார் அதனைப் பொருட்படுத்தாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளிப்பதால் போலீசார் உயிர் சேதத்தை தவிர்க்க எச்சரிக்கை செய்ய வேண்டும்.

19 Oct 2021

மிலாடி நபி விழாவையொட்டி கோவை ஆத்துப்பாலம் பஸ் ஸ்டாப் அருகேவுள்ள பள்ளிவாசல் மின் ஒளியில் ஜொலித்தது.

19 Oct 2021

சென்னை எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் வலைவீசி மீன்களை பிடிக்கும் மீனவர்.

19 Oct 2021

கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் சந்தித்து பேசினார்.

19 Oct 2021

தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க நாளுக்குநாள் கோவை ஒப்பணக்கார வீதியில் கூட்டம் கூடிக் கொண்டே செல்கிறது.

19 Oct 2021

மேற்கு தொடர்ச்சி மலையை தழுவிச் சென்ற வெண்மேகக் கூட்டம். இடம்: பழநி அருகே சத்திரப்பட்டி.

19 Oct 2021

கோவை கோனியம்மன் கோவில் முன் இந்து முன்னணி சார்பில் கோவில் நகைகளை உருக்கக் கூடாது என்று வலியுறுத்தி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

19 Oct 2021

நிரம்பியது கண்மாய்... தொடர்ந்து பெய்த மழையால் மதுரை வண்டியூர் கண்மாய் நிறைந்து மறுகால் பாய்கிறது.

19 Oct 2021

விடைபெற மனமில்லை..... தென் மேற்கு பருவமழைக்கு .....மெல்ல நகரும் மேகங்கள்..... இடம் : லிங்காபுரம், கோவை.

19 Oct 2021

சென்னை, அண்ணா சாலை ஜெமினி மேம்பால சுவரில் வரையப்பட்டுள்ள வண்ண,வண்ண ஓவியங்கள் காண்போரைக் கவர்ந்து வருகிறது..

19 Oct 2021

ஊட்டி படகு இல்லத்திற்கு வந்த சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

19 Oct 2021

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், காவல்துறை இயக்குனராக பதவி உயர்வு பெற்றதால், முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

19 Oct 2021

ஊட்டி படகுஇல்லத்திற்கு வந்த சுற்றுலாப்பயணிகள் நினைவாக படம் எடுத்து மகிழ்ந்தனர்.

19 Oct 2021

மாநில அளவில் நடந்த வூசு போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற கோவை அணியினர்.

19 Oct 2021

உடுமலை தளி ரோடு எலையம்புத்தூர் பிரிவில் போலீசார் இரு சக்கர வாகனங்களில் வருபவர்களின் உடமைகளை சோதனை செய்தனர்.

19 Oct 2021

கோவை புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில், மிலாடி நபியை முன்னிட்டு, இஸ்லாமிய பெண்கள் மற்றும் குழந்தைகள் ஊர்வலகமாக சென்றனர்.

19 Oct 2021

எங்கெங்கு காணினும் பசுமைதான்... சிவகங்கை அருகே சோழபுரம் பகுதியில் விவசாயிகள் பல ஏக்கரில் நெற்பயிரிட்டுள்ளதால் அப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது.

19 Oct 2021

கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

19 Oct 2021

புதுச்சேரி கருவடிக்குப்பம் சித்தானந்த கோவிலில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார்.

19 Oct 2021

சிறுமுகை அருகே உள்ள காந்தை ஆற்றுப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் லிங்காபுரம் - காந்த வயல் கிராம மக்கள் பரிசலில் பயணித்தனர்.

19 Oct 2021

புதுச்சேரி ராயல் பார்க் ஹோட்டலில் நடந்த இந்து ஆச்சார்யா சபா கூட்டத்தில், தேசிய இணை செயலாளராக அறிவிக்கப்பட்ட கார்த்திகேயனுக்கு சபா நிறுவனர், சுவாமி விஜந்திர பூரி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

19 Oct 2021

விழுப்புரம் அடுத்த செங்கமேடு பவானி அம்பாள் உடனுறை பவானீஸ்வரர் திருக்கைலாய திருக்கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

19 Oct 2021

தாராபுரம் கிளாசிக் போலோவின் தீபாவளி சிறப்பு விற்பனையில் ஆடைகளை தேர்வு செய்த வாடிக்கையாளர்கள்.

18 Oct 2021

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத பிரதோஷத்தில் ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பெருமானுக்கு, சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

18 Oct 2021

ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் விஸ்வநாதர், விசாலாட்சியம்மன் ரிஷப வாகனத்தில் அருள்பாலித்தனர்.

18 Oct 2021

2021 ஐ.பி.எல் போட்டியில் வெற்றிபெற்ற சி.எஸ்.கே. அணியின் சார்பில் வெற்றிக்கோப்பையை சென்னை, தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

18 Oct 2021

புதுச்சேரி கடற்கரையில் கடல் உள்வாங்கியதால் அதிகளவில் மணல் பரப்பு ஏற்பட்டது. இதை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

18 Oct 2021

சென்னை ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சுவர் பூங்கா தற்போது பெய்து வரும் மழையினால் செடிகள் வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது

18 Oct 2021

ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையிலுள்ள கள்ளி செடிகள் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்கிறது.

18 Oct 2021

புதுச்சேரி உழவர் சந்தை அருகேயுள்ள ரயில்வே கேட் சிக்னல் பகுதியை தலைமை சிக்னல் தொடர்பு பொறியாளர் சந்தீப்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

18 Oct 2021

திருப்பூர், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க பாட்டில் வடிவில் வைக்கப்பட்டுள்ள இரும்புக் கூடை.

18 Oct 2021

புதுச்சேரி செஞ்சி - ஆம்பூர் சாலையில் உள்ள பெரிய கழிவுநீர் கால்வாயின் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

18 Oct 2021

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் குழந்தை பாதுகாப்பு குழுக்கள் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் பேசினார். அருகில், டாக்டர் மல்லிகா, ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் கவிதா உள்ளிட்டோர்.

18 Oct 2021

சென்னை பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். அருகில் மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபு, பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் விமலா. இடம்: பிராட்வே.

18 Oct 2021

பருவமழையை எதிர்கொள்வதற்காக சென்னை யானைக்கவுனி பகுதியில் உள்ள பக்கிங் கால்வாயை ஹந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் எம். பி. தயாநிதி உடன் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

18 Oct 2021

புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்திற்கு முதல்வரிடம் ஒய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுக்க வந்தனர்.

18 Oct 2021

உடுமலை திருமூர்த்திமலையில் பெய்த மழைக்கு மரத்தில் முளைத்து காணப்படும் காளான்கள்.

18 Oct 2021

தக்காளி செடிகளில் பறிக்கப்பட பழங்களை விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக பெட்டிகளில் தரம் பிரித்து வைத்துள்ளனர். இடம்.உடுமலை கண்ணமநாயக்கனூர்.

18 Oct 2021

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் உடல் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

18 Oct 2021

சென்னை கீழ்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் அங்கு முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் வந்து அமர்ந்திருந்தனர்.

18 Oct 2021

தொடர் மழை காரணமாக திருப்பூர், நொய்யல் ஆறு அணைக்காடு தடுப்பணையில் தண்ணீர் அதிக அளவில் ஆர்ப்பரித்து செல்கிறது.

18 Oct 2021

கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வெறிச்சோடி காணப்பட்ட திருவான்மியூர் கடற்கரை. இடம்: திருவான்மியூர், சென்னை.

18 Oct 2021

கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அனுமதியை மீறி குவிந்த பொதுமக்கள் கூட்டம். இடம்: பெசன்ட் நகர், சென்னை.

18 Oct 2021

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சுபபாரதி கல்வி நிறுவனங்களின் தாளாளர் தனசேகரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

18 Oct 2021

திருச்சி, எடமலைப்பட்டி புதூர், ராமச்சந்திரா நகரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

18 Oct 2021

கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டிலுள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனார் சுந்தரம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியதால், வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

18 Oct 2021

கோவை பகுதியில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து குனியமுத்தூர் அணைக்கட்டு பகுதியில் பெருக்கெடுத்த வெள்ளம்.

18 Oct 2021

விழுப்புரம் அடுத்த கண்டமானடி அரசு ஊழியர் நகர் பொதுமக்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

18 Oct 2021

கருமேகம் வெடித்து பெருமழை.. அபிஷேகம் கண்ட 2500 அடி சுயம்புலிங்கமாய் காட்சிதரும் பிரான்மலை.

17 Oct 2021

கொடைக்கானலில் இருந்து கண்ணுக்குத் தெரியும் அளவிற்கு காணப்படும் இது பார்க்கடல் அல்ல. தேனி, திண்டுக்கல் மாவட்ட பகுதிகள் தான் ரம்யமான சூழலில் கடல் நுரை போல் அழகுற காட்சியளித்தது. அதில் வைகை அணையின் தோற்றத்தை காணமுடிந்தது. இடம் :கோக்கர்ஸ் வாக்.

17 Oct 2021

அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இடம்: மணலி புதுநகர், சென்னை.

17 Oct 2021

கோவையில் கனமழை பெய்து வருவதால் புட்டுவிக்கி அணைக்கட்டு ஆபத்தை உணராத சிறுவர்கள்

17 Oct 2021

வடகிழக்கு பருவமழை யொட்டி விழுப்புரம் தீயணைப்பு துறையில் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் ராபின் காஸ்ட்ரோ முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களை பாதுகாப்பது குறித்து ஒத்திகையில் ஈடுபட்டனர்.

17 Oct 2021

புதுச்சேரி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் குவிந்ததுடன் குளித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

17 Oct 2021

கோவை மத்திபாளையம் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற பெண்ணின் உடலை இரண்டாவது நாளாக தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர்.

17 Oct 2021

கோவையில் தொடர் மழையின் எதிரொலியால் நல்ல சீதோஷண நிலை நிலவி வருவதால் பேரூர் கோளாராம்பதி குளத்தில் அல்லி பூக்கள் பூத்து கண்களுக்கு விருந்தளிக்கிறது.

17 Oct 2021

மேட்டுப்பாளையத்தில் உள்ள மண்டியில் உருளைக்கிழங்குகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

17 Oct 2021

பூண்டு சீசன் முடிவடைந்த நிலையில் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு குறைவான பூண்டுகளே விற்பனைக்கு வந்திருந்தன.

17 Oct 2021

வடகிழக்கு பருவ மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு செந்நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இடம்: கோவை புட்டுவிக்கி தடுப்பணை.

17 Oct 2021

துலா மாதம் என்னும் ஐப்பசிமாத தொடக்கத்தை முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவைசாதித்தார்.

17 Oct 2021

தொடர்ந்து பெய்து வரும் மழையால் சிவகங்கை அருகே பையூர் கண்மாய் நிறைந்து காணப்படுகிறது.

17 Oct 2021

புதுச்சேரி நேரு வீதியில் உள்ள மீன் மார்க்கெடில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.

17 Oct 2021

புதுச்சேரி காந்தி சிலை முன் அரிச்சுவடி மனநல மையம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பிரெஞ்சு சிட்டி சார்பில், உலக மனநல மாத விழிப்புணர்வு விழாவை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்து பார்வையிட்டார். அருகில் அமைச்சர் லட்சுமிநாராயணன், அரிச்சுவடி இயக்குநர் இளவழகன்.

17 Oct 2021

அனைத்துக் கோவில்களும் திறக்க அனுமதி வழங்கியதால், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

17 Oct 2021

அ.தி.மு.க வின் 50வது ஆண்டு பொன்விழா துவக்க நாளையொட்டி, சென்னை தி.நகர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்கு வந்த சசிகலா, தொன்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

17 Oct 2021

அ.தி.மு.க.,வின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், பொன் விழா சிறப்பு மலரை ஒருங்கிணைப்பாளர்பன்னீர்செல்வம் , மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டனர் .

17 Oct 2021

கடலூர் முதுநகர் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் வாங்க கூடிய கூட்டத்தின் ஒரு பகுதி.

17 Oct 2021

உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்கஅருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.

17 Oct 2021

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 6 கிலோ எடை கொண்ட வஞ்சிரம் மீனை வாங்கி செல்லும் மக்கள்.

17 Oct 2021

தேவகோட்டை சங்கரபதி கோட்டை அருகே அ.தி.மு.க., பொன்விழாவை முன்னிட்டு கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க., சிவகங்கை மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

17 Oct 2021

சென்னை காசிமேட்டில் விசைப் படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்கள் தரம் வாரியாக பிரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

17 Oct 2021

இன்று ஞாயிறு விடுமுறை முன்னிட்டு சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பாறை மீனை வாங்கிச் செல்லும் மக்கள்.

17 Oct 2021

ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை திறக்க அரசு அனுமதி அளித்ததால் உடுமலை சி.எஸ்.ஐ., இம்மானுவேல் ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பலர் பங்கேற்றனர்..

Share
 

Dinamalar iPaper

Advertisement