dinamalar telegram
Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

25 Sep 2021

சென்னை காசிமேடு மீன் பிடிப்பு பகுதியில், படகு பாரமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

24 Sep 2021

நெல் விதைகளை நாற்றுக்காக பயிரிட்டு வளர்த்து வருகிறார்கள்.இடம்: சோழபுரம்.

24 Sep 2021

சங்கடஹரசதுர்த்தியை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயகர்-க்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது.

24 Sep 2021

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் போலீசார் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து கலைநிகழ்ச்சி நடந்தது.

24 Sep 2021

புத்துணர்ச்சியுடன் மீண்டெழும் தமிழகம் என்ற தலைப்பில் டாடா டீ சக்ரா கோல்டு சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் , பரதநாட்டியம் ஆடும் பெண் ,காஞ்சிபுரம் பட்டு உள்ளிட்ட உருவங்களை , மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தத்ரூபமாக உருவாக்கி உள்ளார் .இடம் : ஈஞ்சம்பாக்கம் வி.ஜி.பி., கடற்கரை .

24 Sep 2021

மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் தலையில் துப்பட்டாவுடன் சென்ற மாணவிகள்.இடம்: சிவகங்கை கலெக்டர் அலுவலக மைதானம்.

24 Sep 2021

சென்னையில் பணிபுரியும் பெண் போலீசாருக்கான சமநிலை வாழ்க்கைமுறை என்ற மூன்று நாள் பயிற்சி வகுப்பினை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் துவங்கி வைத்து பெண் போலீசார்களுடன் கலந்துரையாடினார்.இடம்: புதுப்பேட்டை ஆயுதப்படை துணை கமிஷனர் அலுவலகம்.

24 Sep 2021

பொதுத்துறை பங்குகளை விற்பதை கண்டித்து மதுரை ரயில்வே ஸ்டேஷன் முன்பு டி. ஆர்.இ. யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

24 Sep 2021

புதுச்சேரி பா.ஜ. அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசினார் அருகில் மாநில தலைவர் சாமிநாதன் .

24 Sep 2021

சென்னை, நுங்கம்பாக்கம் குப்பை கிடங்கு சுற்றுச்சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள்.

24 Sep 2021

ஊட்டி தாவரவியல் பூங்காவில், இரண்டாம் சீசனுக்காக மலர் தொட்டிகள் அடுக்கும் பணி துவங்கியது.

24 Sep 2021

திருப்பூர், தலைமை தபால் அலுவலகத்தில் அனைத்திந்திய மாணவர் சங்கம் சார்பில் குடியரசு தலைவருக்கு நீட் தேர்வு தமிழகத்திற்கு விலக்களிக்க வலியுறுத்தி தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

24 Sep 2021

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் பொட்டலம் குடிக்காடு விவசாயி, ஒருவரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் முறையிட்டு, விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

24 Sep 2021

உலக காதுகேளாதோர் வாரத்தை முன்னிட்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், காது கேட்கும் கருவியை சிறுமிக்கு வழங்கிய முதல்வர்.இடம்: சென்ட்ரல்.

24 Sep 2021

ஊட்டி தாவரவியல் பூங்காவில், இரண்டாம் சீசனுக்காக மலர் தொட்டிகள் காட்சி மாடத்தில் அடுக்கும் பணி துவங்கியது.

24 Sep 2021

உடுமலை நகராட்சி யு.எஸ்.எஸ்.காலனியில் உள்ள மழைநீர் செல்லும் ஓடையை ஜே.சி..பி., இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடக்கிறது.

24 Sep 2021

சென்னை காசிமேடு கடல் பகுதியில் ஆபத்தை உணராமல் தடுப்பு கற்களை தாண்டிச் சென்றவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்.

24 Sep 2021

திருப்பூரில் கன மழையால் டி எம் எப் பாலத்தில் தேங்கியுள்ள மழைநீர்.

24 Sep 2021

கோவை பகுதியில் இரவில் பெய்த மழையால் மேட்டுப்பாளையம் ரோடு பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இடம் : வடகோவை.

23 Sep 2021

திருப்பூரில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் பெய்த கன மழையால் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் ஆறுபோல் ஓடிய மழை நீர்

23 Sep 2021

கோவையில் பல்வேறு இடங்களில் பெய்த மழையினால் தடாகம் ரோட்டில் குளம் போல தேங்கிய மழை வெள்ளம்.

23 Sep 2021

ஊட்டி- பந்தலூர் சாலையோர புல்வெளியில் யானைகள் முகாமிட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் கவனத்துடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

23 Sep 2021

கடந்த 1803ல் நடந்த அசோயி போர் நினைவு தினம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மைய போர் சதுக்கத்தில் அனுசரிக்கப்பட்டது.

23 Sep 2021

கடலூர் அண்ணா மேம்பாலம் ரவுண்டானா அருகே கொலை வழக்கில் கைதானவர்கள் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

23 Sep 2021

75வது சுதந்திர திருநாள் அமுத பேரு விழாவையொட்டி சட்டக்கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்றனர். இடம்: மருதமலை அடிவாரம்.

23 Sep 2021

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், நடந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற ஏராளமான மாற்றுத்திறனாளிகள்.

23 Sep 2021

இன்று மாலை திடீரென பெய்த மழையால் குளிர்ந்தது கோவை. இடம்: மில் ரோடு.

23 Sep 2021

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதியமின் இணைப்பு ஆணையை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். உடன் இடமிருந்து வலம், எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமைச் செயலர் இறையன்பு. இடம்: அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம்,சென்னை.

23 Sep 2021

நேரம் சரியில்லை... பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டில் உள்ள மணிக்கூண்டு ஒருவருக்கும் உபயோகம் இல்லாமல் உள்ளது

23 Sep 2021

புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் ராஜ்யசபா தேர்தல் வேட்புமனு பரிசீலனை மாநில தேர்தல் அதிகாரி சுப்பி சிங் முன்னிலையில் சட்டப்பேரவை செயலர் முனுசாமி மனுவை பரிசீலனை செய்தார். அருகில் பா.ஜ.க.,வேட்பாளர் செல்வகணபதி.

23 Sep 2021

திருப்பூர், ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜாசண்முகம் டீன் முருகேசனிடம் வழங்கினார்.

23 Sep 2021

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாரம்பரிய கட்டடங்களில், பழமை மாறாமல் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இடம்: சேப்பாக்கம்.

23 Sep 2021

விழுப்புரம் அடுத்த காங்கேயனூர் கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட திணைப் பயிர்களை களத்தில் சல்லடையில் ஜலித்து சுத்தம் செய்யும் விவசாயப் பெண்கள்.

23 Sep 2021

தமிழ்நாடு தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், சமுதாய வளைக்காப்பு நிகழ்ச்சி சென்னை, சைதாப்பேட்டையில் நடந்தது. இதில், அமைச்சர்கள் சுப்பிரமணியன், கீதா ஜீவன் ஆகியோர் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கினர்.

23 Sep 2021

கோவை ரேஸ்கோர்சில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிக வருமான வரியை செலுத்திய சென்னை மொபைல்ஸ் பங்குதாரர் சம்சு அலியை கோவை வருமான வரித்துறை ஐ.டி கமிஷனர் பிந்து விருது வழங்கி கவுரவித்தார், அருகில் (இடமிருந்து) பி. ஆர்.ஓ., ராஜசேகரன், கூடுதல் கமிஷனர் வேல்ராஜ், வருமானவரித்துறை தேர்வாணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் ராமலிங்கம், கமிஷனர் பூபால் ரெட்டி, கூடுதல் கமிஷனர் நவீன் குமார், வருமான வரித்துறை அலுவலர் ராம்குமார், ஐ.டி.இ.எப்., செயலர் மதுசூதனன் உள்ளிட்டோர்.

23 Sep 2021

வாழைத்தார் விலை உயர்வு... புரட்டாசி மாதம் முன்னிட்டு கடலூர் உழவர் சந்தையில் குவிந்த வாழைத்தார்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் குறைந்தளவில் வந்தனர்..

23 Sep 2021

புரட்டாசி மாதம் எதிரொலி... மீன் விலை குறைந்தது. ஆனால், வாங்க ஆளில்லாமல் வெறிச்சோடிய கடலூர் முதுநகர் மீன்பிடித் துறைமுகம்.

23 Sep 2021

விழுப்புரம் அடுத்த காங்கேயனூர் கிராமத்தில் அறுவடை செய்யப்பட்டு திணைப் பயிர்களை களத்தில் சல்லடையில் ஜலித்து சுத்தம் செய்யும் விவசாயப் பெண்கள்.

22 Sep 2021

சிங்கார சென்னை திட்டத்தின் கீழ், வில்லிவாக்கம் சுரங்கப் பாலத்தின் சுவர்களில், மாநகராட்சியினரால் வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள்.

22 Sep 2021

திருப்பூர், ராம்ராஜ் காட்டன் சார்பில் காந்திய வேட்டி நூற்றாண்டு விழா நடந்தது. இதில் ராமராஜ் நிறுவனர் நாகராஜ் பேசினார். அருகில் கோவை பாரதிய பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர்,ரூட்ஸ் நிறுவனர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

22 Sep 2021

திருப்பூர், ராம்ராஜ் காட்டன் சார்பில் காந்திய வேட்டி நூற்றாண்டு விழா நடந்தது. இதில் மகாத்மாவை கொண்டாடுவோம் நூலை கோவை பாரதிய பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் வெளியிட ரூட்ஸ் நிறுவனர் ராமசாமி பெற்றுக் கொண்டார்.உடன் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

22 Sep 2021

பொள்ளாச்சி ஆழியாறு அணையின் அழகும் மலையுடன் கூடிய வானமும் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

22 Sep 2021

சென்னை பல்கலையின் இணைப்பில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில், இலவச பட்டப்படிப்பு சேர்க்கை திட்டத்தில் தேர்வு செய்யபட்ட ,313 மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கைக்கான கடிதத்தை துணைவேந்தர் கெளரி வழங்கினார்.

22 Sep 2021

தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட கரும்பு விவசாயிகளில், அதிக மகசூல் ஈட்டிய சிறந்த விவசாயி ஒருவருக்கு அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி, செல்வ சுரப்பி பரிசு, சான்றிதழ் வழங்கினார். அருகில், வேளாண் பல்கலைக்கழக முதல்வர் வேலாயுதம் உள்ளிட்டோர்.

22 Sep 2021

கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகர்.

22 Sep 2021

சென்னையில் நடந்த தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டில் 2,120.54 கோடி ரூபாயில் 24 தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது உடன். இடமிருந்து தலைமைச் செயலர் இறையன்பு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரகத் தொழிற்துறை அமைச்சர் அன்பரசன். இடம்: கலைவாணர் அரங்கம்.

22 Sep 2021

கடலூர் அடுத்துள்ள கிழக்கு ராமாபுரம் பகுதியில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி 4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

22 Sep 2021

புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் செல்வகணபதி மனுத்தாக்கல் செய்தார். முதல்வர் ரங்கசாமி உடனிருந்தார்.

22 Sep 2021

காய்கறி நாற்றுகள் நடவு செய்வதற்காக விவசாயிகள் நிலத்தை உழுது பாத்தி அமைத்து தயார் நிலையில் வைத்துள்ளனர். இடம். உடுமலை.

22 Sep 2021

காங்கேயம் நகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் கமிஷனர் மீது புகார் தெரிவித்து திருப்பூர், கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தனர்.

22 Sep 2021

சென்னையில் உள்ள பெத்தேல் நகர் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரியும் , குடியிருப்பு பகுதியை பாதுகாக்கக் கோரியும் அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இடம் : பெத்தேல் நகர், ஈஞ்சம்பாக்கம்.

22 Sep 2021

திருப்பூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்க மகா சபைக் கூட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

22 Sep 2021

தொடர்ந்து மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை 51 அடியை எட்ட உள்ளதால் சிறிய மதகு மூலம் வினாடிக்கு 77 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

22 Sep 2021

புரட்டாசி மாதத்தில் வாழை இலை அதிகம் விற்பனையாவது வழக்கம். ஆனால், திண்டுக்கல்லில் விற்பனையாகாமல் தேங்கியுள்ள வாழை இலைகள்.

22 Sep 2021

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கிருஷ்ணா நீர் கால்வாய் வழியாக பூண்டி நீர்தேக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறது

22 Sep 2021

புரட்டாசி மாதம் எதிரொலி... கடலூரில் இறால் விலை வீழ்ச்சியடைந்ததால். வாங்க ஆள் இல்லாமல் கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட் வெறிச்சோடியது

22 Sep 2021

புதுச்சேரி கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார். அருகில் எம்.எல்.ஏ. ரமேஷ்.

21 Sep 2021

4 மணி நேர பிளாங்க் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட பள்ளி மாணவன் சுபாஷ். இடம் : சி.ஆர்.பி.எப் வளாகம், ஆவடி, சென்னை

21 Sep 2021

கொடைக்கானல் ரோஜா பூங்காவில் நீலவானம் பளிச்சிடும் நிலையில் பூங்காவில் மலர்களை இரசித்த பயணிகள்.

21 Sep 2021

சென்னை, விருகம்பாக்கம் வேம்புலியம்மன் கோவில் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மாநகராட்சி பூங்கா.

21 Sep 2021

சென்னையில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென வானிலை மாறி வானில் கரு மேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்தது. இடம் : எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர்.

21 Sep 2021

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்துவிட்டு கவர்னர் மாளிகையில் இருந்து வெளியே வந்த முதல்வர் ரங்கசாமி.

21 Sep 2021

நவராத்திரி விழாவை ஒட்டி வட மாநிலத்தினர் கொண்டாடப்படும் துர்கா பூஜைக்காக சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இடம்: கோவை சிங்காநல்லூர்.

21 Sep 2021

தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜேஸ்குமார், சட்டசபை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான சீனிவாசனிடம் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அருகில் முதல்வர் ஸ்டாலின்.

21 Sep 2021

திருப்பூர், ராயபுரம் குடிநீர் தொட்டி பகுதியில் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு (ஆவோஸ் யோஜனா) திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விண்ணப்பம் எழுதும் பணியில் ஈடுபட்ட பா.ஜ.,வினர்.

21 Sep 2021

கோவை வேளாண் பல்கலை வளாகத்தில் சூரியகாந்திப் பூக்கள் பயிரிடப்பட்டு தற்பொழுது பூத்துக் குலுங்குகின்றன

21 Sep 2021

ஊட்டி நகராட்சி துப்புரவு தொழிலாளர் குடியிருப்பை தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேஷ் ஆய்வு செய்தார்.

21 Sep 2021

கோவை சூலூர் அருகே கோவிலில் சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ( உட்கார்ந்திருப்பவர்கள் இடமிருந்து) திருமூர்த்தி வடிவேல், முருகேஷ்.

21 Sep 2021

புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில் மற்றும் வாகனத்தை கலால் போலீசார் பறிமுதல் செய்ததை விழுப்புரம் எஸ்.பி.,ஸ்ரீநாதா பார்வையிட்டு போலீசாரை பாராட்டினார்.

21 Sep 2021

ரயில் நிலையங்களில் பயணிகளிடம் திருடுபோன விலை உயர்ந்த 26 செல்போன்களை தாம்பரம் ரயில்வே போலீசார் மீட்டு அதை ரயில்வே டி.எஸ்.பி., ஸ்ரீகாந்த் உரியவர்களிடம் ஒப்படைத்தார் .இடம் : தாம்பரம் ரயில்வே ஷ்டேஷன். .

21 Sep 2021

சென்னை வடபழனி ஆண்டவர் கோவில் மூலமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்ட விநாயகர் சிலைகள் திரும்பப் பெறப்பட்டு கோவில் தெப்பக்குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது

21 Sep 2021

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ளபூம்புகார் நிறுவனத்தில் கொலு பொம்மைக் கண்காட்சி துவங்கியது. இதில் இடம்பெற்றுள்ள பொம்மைகளை ஆர்வமுடன் பார்வையிடும் சிறுமி.

21 Sep 2021

ராஜ்யசபா தேர்தலையொட்டி புதுச்சேரி அண்ணாமலை ஓட்டலில் நடந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மூன்று சுயோட்சை எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது..

20 Sep 2021

ஒருங்கிணைந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்க திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்குள் உள்ளே அனுமதிக்கததால் தர்ணாவில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள்.

20 Sep 2021

ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பல்கலை தின விழா கொண்டாடப்பட்டது.இதில், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் வெங்கடாசலம் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடன் (இடமிருந்து) பதிவாளர் சுவாமிநாதன், இணை வேந்தர் செங்குட்டுவன் மற்றும் துணை வேந்தர் விஜயராகவன்.இடம்: போரூர், சென்னை.

20 Sep 2021

சேலம் - விருத்தாச்சலம் ரயில் பாதையை, மின் வழிப்பாதையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. அதில் செம்பு மின்வடம் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். இடம்: சத்திரம் ரயில் மார்க்கெட், சேலம்.

20 Sep 2021

மத்திய அரசைக் கண்டித்து சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் முன் கருப்பு கொடியேந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., எம்.எல்.ஏ., உதயநிதி. உடன் கட்சியினர்.

20 Sep 2021

கடலூரில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியினை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். அருகில் கலெக்டர் பாலசுப்ரமணியம் எம்.எல்.ஏ., அய்யப்பன்.

20 Sep 2021

திண்டுக்கல் ராமையன்பட்டி குளத்து தண்ணீரில் வெண் மேகங்கள் மிதக்கும் கண்கொள்ளாக் காட்சி..

20 Sep 2021

கோவை கூட்ஸ் செட் ரோட்டில் மாபெரும் தூய்மை பணி முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.

20 Sep 2021

பொறியியல் படிப்பிற்கு 7.5 சதவீத சிறப்பு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கைக்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அருகில், அமைச்சர்கள் மகேஷ், பொன்முடி, மா.சுப்பிரமணியன். இடம்:.அண்ணா பல்கலை வளாகம், சென்னை.

20 Sep 2021

நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் தூர்வாரும் மாபெரும் பணி முகாம் துவங்கியது. இடம் : பள்ளிக்கரணை.

20 Sep 2021

கோவை போத்தனூர் - பொள்ளாச்சி இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் தண்டவாளத்தில் அதிகாரிகள் கொண்ட சிறப்பு ரயிலில் வேகம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

20 Sep 2021

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலமாக அரிசி மூட்டைகள் கடலூர் முதுநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டுவரப்பட்டது. மூட்டைகளை லாரியில் ஏற்றி குடோனுக்கு அனுப்பி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

20 Sep 2021

உடுமலை அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர் தூவினர்.

20 Sep 2021

வேளாண் சட்டங்கள் ரத்து , பெட்ரோல் , டீசல் , சமையல் எரிவாயு விலை உயர்வு, பொது சொத்துக்களை தனியார் மயமாக்கல் கண்டித்து தாம்பரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு முன்னிலையில் அவரது வீட்டு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது உடன் தாம்பரம் எம்எல்ஏ எஸ் ஆர் ராஜா உள்ளார்.

20 Sep 2021

கோவை பீளமேட்டில் முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திக் தலைமையில் பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு மற்றும் தொலைபேசி ஒட்டு கேட்பு அதை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

20 Sep 2021

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.

20 Sep 2021

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நடந்த உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் பரிசு வழங்கி பாராட்டினார்.

20 Sep 2021

கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட உள் நோயாளியின் உறவினர், அங்கு பணியாற்றும் ஒப்பந்த ஊழியரை தாக்கியதை கண்டித்து அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

20 Sep 2021

புறா படை!மாநகருக்குள் நாங்கள் படையெடுக்க கூடாதா என கேட்கின்றனவோ, இந்த புறாக்கள்?இடம்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு

20 Sep 2021

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவை ரசித்த பயணிகள்.

20 Sep 2021

புதுச்சேரி சண்டே மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்.

19 Sep 2021

கடலூர் அருகே உள்ள சான்றோர் பாளையம் அரசு நிலத்தில் கிராவல் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனங்களை சிறைப்பிடித்த மக்களிடம் இன்ஸ்பெக்டர் உதயகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

19 Sep 2021

சுகமான சுமை...! சுற்றுலா வந்த பயணி ஒருவர் தனது குழந்தையை தோலில் சுமந்து கொண்டு சுகமான பயணத்தை மேற்கொண்டார் ; இடம் புதுச்சேரி சட்டசபை சாலை.

19 Sep 2021

ஞாயிற்றுகிழமை அத்தியவாசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் கோவை பெரியகடை வீதி மார்க்கெட் வெறிச்சோடியது.

19 Sep 2021

கரூர் நகர பகுதியில் மழை பெய்தது. அமராவதி பாலம் லைட் ஹவுஸ் பகுதியில் மழையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

19 Sep 2021

உழவர் சந்தையில் காய்கறிகளை எடைபோடுவதற்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள எடைகற்கள். இடம்: உடுமலை

19 Sep 2021

விஷுவல் படம்:அழகான மரங்கொத்தி பறவை.இடம்: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகம்.

19 Sep 2021

சென்னையில் நடந்த இரண்டாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள காத்திருந்த மக்கள். இடம் : மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செனாய் நகர்.

Share
 

Dinamalar iPaper

Advertisement