dinamalar telegram
Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

26 Jul 2021

குளத்தில் எஞ்சியிருக்கும் நீரில் ஆர்வத்துடன் இரைதேடும் ஒயிட் ஸ்ட்ரோக் மற்றும் ஐபிஸ் பறவையினங்கள்.இடம் கோவை குனியமுத்தூர் செங்குளம்.,

26 Jul 2021

சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்த மாணவியர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கப்பட்டது.

26 Jul 2021

கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் ஆன்லைனில் தொடங்கியதை அடுத்த சென்னை காயிதே மில்லத் கல்லூரிக்கு நேரில் வந்து தகவல் கேட்டு சென்ற மாணவிகள். இடம்.பின்னிசாலை, எழும்பூர்

26 Jul 2021

விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதித் தேர்வுக்காக இளைஞர்கள் காத்திருந்தனர்

26 Jul 2021

காவேரி ஆற்றில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

26 Jul 2021

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஊராட்சி மன்ற தலைவர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பேசினார்.

26 Jul 2021

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வில் பங்கேற்றவர்கள்.

26 Jul 2021

சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுத படை மைதானத்தில் நடந்த இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்பயிற்சி தேர்வில் கலந்து கொண்ட இளைஞர்கள்.

26 Jul 2021

கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் உள்ள நினைவு தூணிற்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

26 Jul 2021

தூத்துக்குடி பனிமயமாதா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

26 Jul 2021

இது ஓவியமோ என எண்ண வேண்டாம். முழுநிலவின் வெளிச்சத்தில் பெரியாறு பாசன கால்வாய் மற்றும் கரையில் வளர்ந்துள்ள மரங்கள் கண்களுக்கு விருந்தளிக்கிறது. இடம்: மதுரை கள்ளந்திரி.

26 Jul 2021

காவல்காரர்கள் மூலம் மீட்கப்பட்ட வட மாநிலத்தவர்கள் வழியனுப்பும் நிகழ்ச்சி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்தது. இதில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜீவால் அவர்களின் பயணத்திற்கு தேவையான பொருட்களை வழங்கினார்.

26 Jul 2021

ஆடி மாதத்தை முன்னிட்டு, சென்னை தி. நகர் ரங்கநாதன் தெருவில், புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்...

26 Jul 2021

வழமைக்குத் திரும்பும் வாழ்க்கை..!ஊரிலிருக்கும் நடுகல்லில் அமர்ந்து தடுப்பூசி போடுவதற்காக காத்திருக்கும் பொதுமக்கள். இடம் கோவை நீலிகோணம்பாளையம்

25 Jul 2021

புதுச்சேரி கடற்கரையை சுற்றிப்பார்க்க வந்த வெளிமாநிலத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள்.

25 Jul 2021

ஆடி மாதத்தை முன்னிட்டு புதுச்சேரி சண்டே மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதிய காட்சி.

25 Jul 2021

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் அணையில் இருந்து 5430 கன அடி உபரிநீர் பவானி ஆற்றில் திறப்பு.

25 Jul 2021

மழலை மழை தரும் பாடம்.அனைத்தையும் கற்றுத்தரும் தொழில்நுட்பத்தால், இந்த தாய் பாசத்தை கற்றுத்தர இயலாது. மழையிலிருந்து குழந்தையை பாதுகாக்கும் தாய். இடம்: கோவை, காந்திபுரம்.

25 Jul 2021

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில், 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான காங்கேயம் இனமாடு.

25 Jul 2021

மாலை நேரத்தில் வானில் திரண்ட மேகங்கள்.இடம்: சிவகங்கை 48 காலனி பகுதி

25 Jul 2021

சேலத்தில் பெய்த கன மழையில் அழகாபுரம் கிரீன்வேஸ் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள்.

25 Jul 2021

தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது

25 Jul 2021

தென்மேற்கு பருவ மழையின் தாக்கத்தால் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ததை அடுத்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை தண்ணீரில் மூழ்கியது. இடம் சிறுமுகை அடுத்த லிங்காபுரம்.

25 Jul 2021

விபரீதத்தை தேடும் இளைஞர்கள்... :

கோவை நொய்யல் ஆற்றில் வெள்ளம் வரும் நேரத்தில் விபரீதமாக நடு ஆற்றில் மீன் பிடிக்கும் இளைஞர். இடம்: தண்ணீர் பந்தல்.

25 Jul 2021

திருப்பூர், சிக்கண்ணா அரசு கல்லூரியில் சர்வதேச தடகள மைதானம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம்.

25 Jul 2021

திருப்பூர், காலேஜ் ரோடு பகுதிகளில் உள்ள குட்கா, புகையிலை விற்பனை செய்த பெட்டி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

25 Jul 2021

என் உயிர் இல்லை என்றாலும்~ ஒரு உயிர் வாழ பயன் உள்ளவனாக இருப்பேன் என்று எடுத்துக்காட்டும் பட்டுப்போன பனைமரம்.

25 Jul 2021

உடுமலை காந்தி நகர் நூலகத்தில் புத்தகங்களை எடுக்க வந்த வாசகங்கள் ஆர்வமுடன் படிக்கின்றனர்.

25 Jul 2021

திருப்பூர், தென்னம்பாளையம் மார்கெட் வெளியில் உள்ள மீன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

25 Jul 2021

பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், ஆபத்தை உணராமல், அணையில் விளையாடும் மக்கள்.

25 Jul 2021

பொள்ளாச்சி அருகே பூசாரிபட்டியில் நடந்த குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் பேசிய எஸ்.பி., செல்வநாகரத்தினம் .

25 Jul 2021

பொள்ளாச்சி அருகே பூசாரிபட்டியில் நடந்த குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற மக்கள் .

25 Jul 2021

கடலூர் முதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைமேடையில் உள்ள டிஜிட்டல் அறிவிப்பு பலகை பழுதடைந்து சரி செய்யப்படாமல் உள்ளது.

25 Jul 2021

புதுச்சேரி அரியாங்குப்பம் வீராம்பட்டினத்தில் விளையாட்டு திடலை திறந்து வைத்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் பரிசு வழங்கினார்

25 Jul 2021

சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்படும் கசூரா கார்டன் குளம் சுவர்கள் முழுவதும் பொதுமக்களை கவரும் வகையில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது...இடம் : நீலாங்கரை....

25 Jul 2021

கோவை அதிமுக அலுவலகத்தில் வருகிற 28-ஆம் தேதி திமுக ஆட்சியை கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது இதில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார். அருகில் எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ஜுனன்,ஜெயராம், அருண்குமார் அமுல் கந்தசாமி உள்ளிட்டோர்.

25 Jul 2021

திருப்பூர், காங்கயம் ரோட்டில் உள்ள டீ கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனையின் போது குட்கா பறிமுதல் செய்தனர்.

25 Jul 2021

விழுப்புரம் அடுத்த கோனூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த மரீச்சநாதேஸ்வரர் சிவன் கோவிலில் பாழடைந்து உள்ள கல் தூண்கள்.

25 Jul 2021

விழுப்புரம் அடுத்த கோனூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த மரீச்சநாதேஸ்வரர் சிவன் கோவிலின் வெளியே பாழடைந்து கிடைக்கும் சுவாமி சிற்பங்கள்.

25 Jul 2021

திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்டில் ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ் தினசரி மார்கெட் அமைக்கும் கட்டட பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

25 Jul 2021

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வுக்கான ஏற்பாடுகளை டி.ஐ.ஜி., எழிலரசன் பார்வையிட்டார். அருகில் எஸ்.பி., சக்தி கணேஷ்.

25 Jul 2021

சென்னை மியாட் மருத்துவமனையின் இருதயவியல் நிபுணர் டாக்டர் விஜய் பாலாஜி, கடலூர் ஆற்காட் மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினார்.

25 Jul 2021

புதிய வழித்தடங்களில் இயக்கப்படும் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளின் முன்பக்க கண்ணாடியில் முதல்வர் ஸ்டாலினின் படம் ஒட்டப்பட்டுள்ளது.இடம்: தி.நகர், சென்னை.

25 Jul 2021

கோவை மாணவி யஷ்வி மந்திரி,ஏசியன் புக்ஸ் ஆப் ரெகார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக்ஸ் ஆப் ரெகார்ட்ஸ் அளவில் பங்குபெற்று 30 நொடியில் 145 உதைகளை உதைத்து சாதனை செய்துள்ளார்.

25 Jul 2021

ஆடி மாதத்தை முன்னிட்டு, சென்னை பல்லவன் சாலையில் உள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோவிலில், சமூக இடைவெளியை மறந்து குவிந்த பக்தர்கள் கூட்டம்.

25 Jul 2021

கோவை ஐ.என.எஸ் அக்ராணியை,ரியர் அட்மிரல் பிலிபோஸ் ஜி பைனமூட்டில், கோயம்புத்தூர் ஐ.என்.எஸ் அக்ராணி என்ற முதன்மை தலைமை மற்றும் மேலாண்மை பயிற்சி நிறுவனத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

25 Jul 2021

புதுச்சேரி கடற்கரையில் முகக் கவசம் இன்றி சுற்றித்திரியும் சுற்றுலா பயணிகள்.

25 Jul 2021

உடுமலை அமராவதி அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்ட எல்லை சின்ன தாராபுரம் அருகில் வந்தது

25 Jul 2021

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில், நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள்.

25 Jul 2021

கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும், பச்சை பசுமையாகவும் வளர்ந்துள்ள நெற்பயிர், வரிசையாக உள்ள பனைமரங்கள், அழகாய் இருக்கும் வெண்மேகங்கள் அருளால் காட்சிதரும் அண்ணாமலையார் மலையே. இடம்: திருவண்ணாமலை.

25 Jul 2021

கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு இந்து அமைப்புகள் சார்பில் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

25 Jul 2021

சேலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஏற்காட்டில் இருந்து அடிவாரப்பகுதிக்கு நீர் வர தொடங்கியது. அதில் உற்சாகத்துடன் விளையாடிய சிறுவர்கள். இடம்: கற்பகம் கிராமம், கன்னங்குறிச்சி.

25 Jul 2021

திருவள்ளூர் அருகே 42 மாணவ மாணவியர் கண்களை கட்டிக் கொண்டு பானை மீது நின்று சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.

25 Jul 2021

சேலம், ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் கட்சி அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தல் குறித்தும்,28 ம் தேதி நடைபெற உள்ள போராட்டம் குறித்தும் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி.

25 Jul 2021

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி அருள்மிகு சென்றாய பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

25 Jul 2021

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளையொட்டி கரூர் ஜவகர் பஜாரில் கட்சி நிர்வாகிகள் மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.

25 Jul 2021

வெள்ளம் வரும் நேரத்தில் தடுப்பணைகளில் விபரீதமாக நின்று நடு ஆற்றில் குளிக்கும் இளைஞர்கள். இடம்: கோவை குனியமுத்தூர் அணைக்கட்டு.

25 Jul 2021

மேட்டுப்பாளையம் சிறுமுகை அடுத்துள்ள காந்தை ஆற்றில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு குழுவினர் இணைந்து வெள்ளப்பெருக்கில் தண்ணீரில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஒத்திகையை நடத்தினர்.

25 Jul 2021

மேற்கு தொடர்ச்சி மலையை வருடிச்செல்லும் மேகங்கள்.இடம்:விருதுநகர் அருகே கூமாபட்டி.

25 Jul 2021

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் பல இடங்களிலும் கொட்டும் அருவிகளின் அழகு. இடம்: சிறுவாணி ரோடு.

25 Jul 2021

புதுச்சேரி கடற்கரையில் பொதுமக்கள் காந்தி சிலை அருகே கடலில் மகிழ்ச்சியாக குளியல் போட்டனர்

24 Jul 2021

திருச்சி- ராமேஸ்வரம் ரயில்வே தண்டவாளத்தில் கல்லையும்,மண்ணையும் பிரித்தெடுக்கும் இயந்திரம் மூலம் பராமரிப்பு பணி நடந்துவருகிறது.இடம்: சிவகங்கை.

24 Jul 2021

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்ய கோவிலுக்கு வந்தபோது கல்யாணி யானைக்கு உணவு வழங்கினார்.

24 Jul 2021

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி பகுதியில், டிராக்டர் மூலம் உழவுப் பணி மேற்கொள்ளும் விவசாயி

24 Jul 2021

சென்னை, அடையாறு ஆற்றில் வலை வீசி மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர். இடம்: நந்தம்பாக்கம்.

24 Jul 2021

புதுச்சேரி அடுத்த கணகன் ஏரி தூர்வாரும் பணிகள் நடக்கிறது.

24 Jul 2021

ஆடி தள்ளுபடியில் பொருட்கள் வாங்க வந்த கூட்டம் என நினைக்க வேண்டாம், நம்ம சென்னை காசிமேட்டில் அசைவ பிரியர்கள் மீன் வாங்க வந்த கூட்டம் தான்.

24 Jul 2021

இந்துக்களை தரக்குறைவாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி மதுரையில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

24 Jul 2021

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கடலூர் மாவட்ட மைய கூட்டம் நடந்தது.

24 Jul 2021

நிலுவையில் உள்ள இரண்டு மாத சம்பளம் வழங்க கோரி மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனை ஒப்பந்த செவிலியர்கள் கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

24 Jul 2021

ராமநாதபுரம் ரெகுநாதபுரம் அருகே பனை ஓலையை காயவைக்கும் பணி நடந்தது.

24 Jul 2021

விருத்தாசலம் கடலூர் மெயின் ரோடு பெரியார் நகரில் சாலை விரிவாக்க பணி காரணமாக மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.

24 Jul 2021

ராமநாதபுரம் திருப்புல்லாணியில் விளைந்த தேங்காய்களை லாரியில் ஏற்றும் பணி நடந்தது.

24 Jul 2021

புதுச்சேரி தலைமை செயலகத்தில் நடந்த தூய்மைப் பணியாளர்கள் குறைகேட்பு கூட்டத்தில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைக்குழுவின் தலைவர் வெங்கடேசன் குறைகளை கேட்டறிந்தார் .அருகில் உள்ளாட்சித் துறை செயலர் வல்லவன்.

24 Jul 2021

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கோவை நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து குளங்களுக்கு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இடம்: சித்திரை சாவடி.

24 Jul 2021

தொடர் மழை காரணமாக பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை, 100 அடியை எட்டியுள்ளது.

24 Jul 2021

சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் கார்களின் ஸ்டாண்டாக மாறியதால் பயணிகளுக்கு போக்குவரத்துக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

24 Jul 2021

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக பொள்ளாச்சி அருகே கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கவியருவியின் அழகு தண்ணீரில் பிரதிபலிக்கிறது.

24 Jul 2021

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கோவை நொய்யல் ஆற்றில் பொங்கி வரும் வெள்ளம்.

24 Jul 2021

ராமநாதபுரம் சாலைத்தெருவில் ரோடு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

24 Jul 2021

திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சி சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடந்தது.

24 Jul 2021

திண்டுக்கல் அருகே கோட்டூர் ஆவாரம்பட்டி பகுதியில் வெங்காய சாகுபடிக்கு பாத்தி கட்டியது வயலில் கோடுகள் இட்டது போல தெரிகிறது.

24 Jul 2021

சிவகங்கை அரசு மருத்துவமனையில் பெண்கள் ஆலோசனை மைய கட்டட திறப்பு விழாவிற்காக பர்னிச்சர் பொருட்களை நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ஸ்ட்ரெக்சரில் எடுத்து வந்தனர்.

24 Jul 2021

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்த பயணிகள்.

24 Jul 2021

ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் தமிழகம் முழுவதும் நூலகங்கள் திறக்கப்பட்டது கடலூரில் திறக்கப்பட்ட மாவட்ட மைய நூலகத்தில் புத்தகங்களை ஆர்வத்துடன் படிக்கும் வாசகர்கள்.

24 Jul 2021

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உரிய அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் ஒரு வாரத்திற்குள் போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவித்திருந்தனர். அதனடிப்படையில் 4 மாவட்டங்களில் ஒப்படைக்கப்பட்ட 81 துப்பாக்கிகள்.

24 Jul 2021

இரண்டு மாதத்துக்கு பின் கரூர் அதிமுக மாவட்ட கழக அலுவலகம் முன்பு கட்சி தொண்டர்கள் கூட்டம் குவிந்தனர்

24 Jul 2021

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ தொழிற்சங்க தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடந்தது.

24 Jul 2021

ஆடி தள்ளுபடியில் பொருட்கள் வாங்க வந்த கூட்டம் என நினைக்க வேண்டாம், நம்ம சென்னை காசிமேட்டில் அசைவ பிரியர்கள் மீன் வாங்க வந்த மக்கள் கூட்டம் தான்.

24 Jul 2021

ஊட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில், துப்புரவு தொழிலாளர்கள் சம்பளம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

24 Jul 2021

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மேட்டுப்பாளையத்தில் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆய்வு செய்தார்.

24 Jul 2021

ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் தமிழகம் முழுவதும் நூலகங்கள் திறக்கப்பட்டது. தர்மபுரியில் திறக்கப்பட்ட மாவட்ட மைய நூலகத்தில் நாவல்களை ஆர்வத்துடன் படிக்கும் வாசகர்கள்.

24 Jul 2021

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

24 Jul 2021

விழுப்புரம் பல்கலை., பாதுகாப்புக்குழு சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் நகரப்பகுதியில் திறக்கப்பட்ட,பல்கலைக்கழகத்தை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.

24 Jul 2021

கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. காலை,10 மணிக்கு வினாடிக்கு, 7 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டு இருந்த நீர்வரத்து, காலை 11 மணி நிலவரப்படி வினாடிக்கு, 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

24 Jul 2021

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவைக் கண்டித்து பழங்காநத்தம் ரவுண்டனா அருகே, பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

24 Jul 2021

ஊரடங்கு தளர்வு காரணமாக, 75 நாட்களுக்கு பிறகு சேலம் குமாரசாமிப்பட்டி மாவட்ட மைய நூலகம் திறக்கப்பட்டது.அதில் ஆர்வமுடன் புத்தகங்களை வாசிக்கும் வாசகர்கள்.

24 Jul 2021

சேலம் மாவட்டம், ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்ட் முன், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து, பா.ஜ., மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

24 Jul 2021

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்து பிரகாரம் சுற்றி வந்தார்.

24 Jul 2021

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையனை கண்னித்து, சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர்

Share
 

Dinamalar iPaper

Advertisement