dinamalar telegram
Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

13 Jun 2021

விருதுநகர் கட்டபொம்மன் தெருவில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் முன் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர்.

13 Jun 2021

சமூக இடவெளியை பின்பற்றாமல் மீன் வாங்க குவிந்த கூட்டத்தின் ஒரு பகுதி இடம்.கடலூர் மீன்பிடி துறைமுகம்.

13 Jun 2021

கடலூரில் மீனவர்கள் பிடித்து வந்த மெகா சைஸ் கொம்பன் திருக்கை மீன். இடம்; கடலூர் முதுநகர் மீன்பிடித் துறைமுகம்.

13 Jun 2021

மீன்பிடி தடைக்காலம் கடலுக்கு மட்டுந்தான்... கடல் மீன் இல்லைனா என்ன... அதான் நம்ம குறிச்சி குளம் இருக்குதே... இடம்: கோவை.

12 Jun 2021

சீசனை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் விலை குறைவால் மாம்பழம் விற்பனை களைக் கட்டியுள்ளது.

12 Jun 2021

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள அம்மா மினி கிளினிக்கில் நடந்து வரும் கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பார்வையிட்டார்... உடன் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி, மற்றும் அதிகாரிகள்

12 Jun 2021

போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள சிப்பிப்பாறை வகை நாய்க்கு, வனத்துறையினர் பயிற்சி அளித்தனர். இடம்: கோவை புள்ளாகவுண்டன்புதூர்.

12 Jun 2021

விழுப்புரம் பகுதியில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

12 Jun 2021

நிரம்பியது தெப்பம் :

மதுரை வைகை ஆற்றில் வரும் மழைநீர் கால்வாய் வழியாக திருப்பப்பட்டு மாரியம்மன் தெப்பக்குளத்தில் நிரப்பப்படுகிறது.

12 Jun 2021

மதுரை ஓபுளாபடித்துறையில் புதிய பாலம் அமைக்க தரைப் பாலத்தை இடிக்கும் பணி நடக்கிறது.

12 Jun 2021

அறநிலையத்துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில் கலந்துகொண்ட அதிகாரிகள்.

12 Jun 2021

திருவண்ணாமலையில், தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் ஊரக பணித்துறை பொறியாளர்கள் சங்கம் சார்பில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஏழு லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாநிலத் தலைவர் ஜெகன் பொதுப்பணித் துறை அமைச்சர் எவ. வேலுவிடம் வழங்கினர் உடன் எம்.பி., அண்ணாதுரை உட்பட பலர்.

12 Jun 2021

திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் பூத்துள்ள கொன்றை பூக்கள்.

12 Jun 2021

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் துரைமுருகன் என்பவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பலனின்றி இறந்த அவரை குடும்பத்திற்கு உதவும் வகையில், 1997 இரண்டாம் பேட்ஜ் காவலர்கள் முயற்சியில் திரட்டிய ரூபாய் மூன்று லட்சத்திற்கான காசோலையை எஸ்.பி., பவன் குமார் ரெட்டியிடம் வழங்கினர். உடன் ஏ.எஸ்.பி., அசோக்குமார் உட்பட பலர்.

12 Jun 2021

பொதுமக்களுக்கு ரேஷன் கடையில் நிவாரண தொகை மற்றும் 14 பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.இடம்:திருப்பூர், தாராபுரம் ரோடு, செட்டிபாளையம்.

12 Jun 2021

ராமநாதபுரம் அருகே எட்டி வயலில் ஊரடங்கு காரணமாக கரிமூட்டம் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

12 Jun 2021

திருப்பூர், பெருமாள் கோவில் வீதி பூ கடைகளில் வாடிக்கையாளர்கள் இன்றி காணப்பட்டது

12 Jun 2021

மின்விசிறியை வைத்து ஆய்வு செய்கின்றனரோ என எண்ண வேண்டாம்.மதுரை அனுப்பானடி சிவகாமி முதல் தெருவில் வீட்டிலிருந்த காஸ் சிலிண்டர் வெடித்ததில் உருக்குலைந்த சிலிண்டர் தான் இது.

12 Jun 2021

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மக்கள் நடமாட்டம் இன்றி உள்ளதால், உணவை தேடி குரங்குகள் கூட்டம் சுகந்திரமாக நடப்பாதையில் செல்கிறது.

12 Jun 2021

மதுரை துவரிமான்- சமயநல்லூர் நான்கு வழிச்சாலையில் மண் மேவியுள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

Share
 

Dinamalar iPaper

Advertisement