dinamalar telegram
Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

13 May 2021

உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்க மாரியம்மன் கோவிலில் உணவு தயாரிக்கப்பட்டு பார்சல் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

0

13 May 2021

விழுப்புரம் மாவட்டம் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அருகில் கலெக்டர் அண்ணாதுரை.

0

13 May 2021

திரைப்பட துறையினரின் நலனுக்காக திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பை துவக்குவது தொடர்பாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

0

13 May 2021

கடலூர் முதுநகர் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் சிக்கிய மயங்கிய நிலையில் ஊழியரை சக ஊழியர்கள் தூக்கி வந்தனர்.

0

13 May 2021

கடலூர் முதுநகரில் கிரிம்சன் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை தீ பிடித்து எரிந்தது. இதில் 3 பேர் பலியாகினர்.

0

13 May 2021

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கடலூர் மற்றும் திருக்கோயிலூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து பணிபுரியும் ஊழியர்களுக்காக சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு கலெக்டர் அலுவலகம் சாலையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

0

12 May 2021

இரவில் ஓட்டல்கள் முன்பு பார்சல் வாங்க கூடும் மக்கள். இடம்: கோவை பி.என்.புதூர்.

0

12 May 2021

ஊட்டி தாவரவியல் பூங்காவில், கோடை சீசனுக்காக வளர்க்கப்பட்ட லில்லியம் மலர்செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

0

12 May 2021

என்னதான் ஊரடங்கு போட்டாலும் சாலையில் செல்லும் வாகனங்கள் குறையவில்லை. இடம். ஜி.எஸ்.டி. சாலை, பெருங்களத்தூர், தாம்பரம்

0

12 May 2021

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

0

12 May 2021

தேனி புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பூத்து குலுங்கும் சரக்கொன்றை பூக்கள்.

0

12 May 2021

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்க கூடலழகர் பெருமாள் கோயிலில் உணவு தயாரிக்கப்பட்டு பேக்கிங் செய்யப்படுகிறது.

0

12 May 2021

கோவை அரசு மருத்துவ மனையில் நோயாளிகளின் படுக்கை வசதிக்காக கொண்டு செல்லப்பட்ட பெட்.

0

12 May 2021

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நாளை அமைச்சர்கள் பங்கேற்கும் கருத்தரங்க அறையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நகராட்சி ஊழியர் கிருமி நாசினி மருந்து தெளித்தார்.

0

12 May 2021

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கு, இந்துசமய அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

0

12 May 2021

ஊட்டி தாவரவியல் பூங்காவில், கோடை சீசனுக்காக வளர்க்கப்பட்ட மலர்செடிகள் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

0

12 May 2021

விழுப்புரம் சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பொது மக்களிடம் போக்குவரத்து காவல்துறை எஸ்.ஐ., குமாரராஜா இருக்கை கும்பிட்டு தேவையில்லாமல் வெளியே வராதீர்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

0

12 May 2021

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விவசாய பணிகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பம்புசெட் மூலம் சாகுபடி செய்த நெல்லை, அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள். இடம்: மேல உளூர், தஞ்சாவூர் மாவட்டம்.

0

12 May 2021

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மதர் தெரசா பட்ட மேற்படிப்பு மையத்தில் நடந்த செவிலியர் தின விழாவில் சிறப்பாக பணிபுரிந்த செவிலியர்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நினைவு பரிசு வழங்கினார். அருகில் சுகாதாரத்துறை செயலாளர் அருண், இயக்குனர் டாக்டர் மோகன் குமார்.

0

12 May 2021

ஊரடங்கில் பழக்கடை வைக்க அனுமதித்தால் திருப்பூர், பி.என் ரோட்டில் பழங்கள் வாங்கிய பொதுமக்கள் .

0
Share
 

Dinamalar iPaper

Advertisement