dinamalar telegram
Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

13 May 2021

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளுக்காக எம்பி., விஜயவசந்த் அவரது சொந்த பணத்தில் ஆம்புலன்ஸ் வழங்கினார். கல்லூரி முதல்வர் சுகந்திராஜகுமாரி பெற்று கொண்டார். அருகில் மருத்துவர்கள்.

0

13 May 2021

நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே அணைகட்டி கிராமத்தில் , பழங்குடியினருக்கான கொரோனா சிறப்பு முகாமில் , இருளர் பழங்குடி 18 வயது முதல் உள்ளவர்களுக்கு தடுப்புஊசி போடப்பட்டது.

0

13 May 2021

புதுச்சேரி திண்டிவனம் பைபாஸ் சாலையில் கோடையின் வெப்பம் சற்று அதிகமாக உள்ளதால் கானல் நீர் சாலையில் ஜொலிக்கின்றன.

0

13 May 2021

கடலூர் முதுநகர் சிப்காட்டில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்தில் காயமடைந்து தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் கணேசன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

0

13 May 2021

250 படுக்கை வசதி கொண்ட மாணவர்கள் விடுதியை கொரோனா பராமரிப்பு மையமாக உருவாக்கப்பட்டதை, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர் ராஜா, மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். இடம். கிழக்கு தாம்பரம்.

0

13 May 2021

உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்க மாரியம்மன் கோவிலில் உணவு தயாரிக்கப்பட்டு பார்சல் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

0

13 May 2021

விழுப்புரம் மாவட்டம் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அருகில் கலெக்டர் அண்ணாதுரை.

0

13 May 2021

திரைப்பட துறையினரின் நலனுக்காக திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பை துவக்குவது தொடர்பாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

0

13 May 2021

கடலூர் முதுநகர் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் சிக்கிய மயங்கிய நிலையில் ஊழியரை சக ஊழியர்கள் தூக்கி வந்தனர்.

0

13 May 2021

கடலூர் முதுநகரில் கிரிம்சன் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை தீ பிடித்து எரிந்தது. இதில் 3 பேர் பலியாகினர்.

0

13 May 2021

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கடலூர் மற்றும் திருக்கோயிலூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து பணிபுரியும் ஊழியர்களுக்காக சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு கலெக்டர் அலுவலகம் சாலையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

0

12 May 2021

இரவில் ஓட்டல்கள் முன்பு பார்சல் வாங்க கூடும் மக்கள். இடம்: கோவை பி.என்.புதூர்.

0

12 May 2021

ஊட்டி தாவரவியல் பூங்காவில், கோடை சீசனுக்காக வளர்க்கப்பட்ட லில்லியம் மலர்செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

0

12 May 2021

என்னதான் ஊரடங்கு போட்டாலும் சாலையில் செல்லும் வாகனங்கள் குறையவில்லை. இடம். ஜி.எஸ்.டி. சாலை, பெருங்களத்தூர், தாம்பரம்

0

12 May 2021

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

0

12 May 2021

தேனி புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பூத்து குலுங்கும் சரக்கொன்றை பூக்கள்.

0

12 May 2021

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்க கூடலழகர் பெருமாள் கோயிலில் உணவு தயாரிக்கப்பட்டு பேக்கிங் செய்யப்படுகிறது.

0

12 May 2021

கோவை அரசு மருத்துவ மனையில் நோயாளிகளின் படுக்கை வசதிக்காக கொண்டு செல்லப்பட்ட பெட்.

0

12 May 2021

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நாளை அமைச்சர்கள் பங்கேற்கும் கருத்தரங்க அறையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நகராட்சி ஊழியர் கிருமி நாசினி மருந்து தெளித்தார்.

0

12 May 2021

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கு, இந்துசமய அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

0
Share
 

Dinamalar iPaper

Advertisement