dinamalar telegram
Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

11 Apr 2021

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வெறிச்சோடி காணப்பட்டது. 0

11 Apr 2021

சென்னையில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் விடுமுறை தினங்களில் கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்ட கடற்கரை. இடம்: எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர். 0

11 Apr 2021

கொரோனா அதிகரித்து வரும் நிலையில், முககவசம் அணிந்து செல்லும் பெண்கள். இடம்; உடுமலை. 0

11 Apr 2021

மீன்பிடி தடைக்காலம் : தமிழகத்தில் வரும் வியாழக்கிழமை முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்குவதால், இந்த ஞாயிற்றுக்கிழமையே மீன்களை வாங்க குவிந்த பொதுமக்கள். இடம்; காசிமேடு. 0

11 Apr 2021

மாலை நேர வெளிச்சத்தில், மின்மினிப் பூச்சி போல் ஜொலிக்கும் நீரின் மத்தியில் இறை தேடி காத்திருக்கும் இந்த நீர் காகத்தை சேர்ந்து பார்த்தால் ஓவியம் போல் தோன்றுகிறது. இடம்: கோவை வெள்ளலூர் குளம். 0

10 Apr 2021

திண்டுக்கல் தியேட்டர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதித்தனர். 0

10 Apr 2021

மாலை நேர வெளிச்சத்தில், மின்மினிப் பூச்சி போல் ஜொலிக்கும் நீரின் மத்தியில் இரை தேடி காத்திருக்கும் இந்த நீர் காகத்தை சேர்த்து பார்த்தால் ஓவியம் போல் தோன்றுகிறது. இடம்: கோவை வெள்ளலூர் குளம். 0

10 Apr 2021

கோவை ரயில்வே ஸ்டேஷனில் ஸ்ரீ நாகசக்தி அம்மன் சமூக ஆன்மீக அறக்கட்டளை ஸ்ரீ நாகசக்தி அம்மன் தெய்வீக மூலிகை ஆராய்ச்சி நிலையம்சார்பில், கொரோனா தொற்று பரவாமல் இருக்க கபசுர குடிநீர் இலவசமாக வழங்கினர். 0

10 Apr 2021

மலைக்குப் பின்னால் பொன்னிறமாய் மறையும் சூரியன்.இடம்.உடுமலை தனி. 0

10 Apr 2021

புதுச்சேரி கவர்னர் மாளிகை வளாகத்தில் அனைத்து மதத் தலைவர்களுடன் கொரோனா தொற்று குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். 0

10 Apr 2021

சென்னை, சைதாப்பேட்டை வி.ஜி.பி., சாலையில், ஒரே பகுதியை சேர்ந்த 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 0

10 Apr 2021

கொளுத்தும் வெயிலில் காரைக்குடியில் தவித்தபடி நடந்து செல்லும் பெண்கள். 0

10 Apr 2021

கோவை ரயில்வே ஸ்டேசன் முதல் வடகோவை வரை ரயில் தண்டவாளம் புதிதாக மாற்றும் பணி நடந்தது. 0

10 Apr 2021

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இடம்: அண்ணா சாலை, சென்னை. 0

10 Apr 2021

கடும் வெயிலிலும் குருவை சாகுபடி நடவு பணிக்காக தனி ஆளாய் நின்று நிலத்தை சரி செய்யும் விவசாயி. இடம்: விருத்தாசலம் அருகே மணவாளநல்லூர். 0

10 Apr 2021

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் தீ மிதித்த பக்தர்கள். 0

10 Apr 2021

கொரோனா தொற்று பரவல் அதிகமானதால் திருப்பூர் தென்னம்பாளையம் மார்கெட்டில் முக கவசம் அணியும்படி ஒலிபெருக்கியின் மூலம் அறிவுறுத்தப்பட்டது. 0

10 Apr 2021

துணை முதல்வர் பன்னீர்செல்வம் மாமியார் வள்ளியம்மாள் மறைவிற்கு துக்கம் விசாரிப்பதற்காக முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, ராஜலட்சுமி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வந்தனர். இடம்: உத்தமபாளையம், தேனி மாவட்டம். 0

10 Apr 2021

அரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 0

10 Apr 2021

அபராதம் வசூல் : கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீண்டும் அமலுக்கு வந்ததை அடுத்து, சென்னையில் உள்ள கடைகளில், முகக்கவசம் அணியாத பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலித்த மாநகராட்சியினர். இடம்: புரசைவாக்கம். 0
Share
 

Dinamalar iPaper

Advertisement