11 Apr 2021
சென்னையில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் விடுமுறை தினங்களில் கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்ட கடற்கரை. இடம்: எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர்.
11 Apr 2021
கொரோனா அதிகரித்து வரும் நிலையில், முககவசம் அணிந்து செல்லும் பெண்கள். இடம்; உடுமலை.
11 Apr 2021
மீன்பிடி தடைக்காலம் : தமிழகத்தில் வரும் வியாழக்கிழமை முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்குவதால், இந்த ஞாயிற்றுக்கிழமையே மீன்களை வாங்க குவிந்த பொதுமக்கள். இடம்; காசிமேடு.
11 Apr 2021
மாலை நேர வெளிச்சத்தில், மின்மினிப் பூச்சி போல் ஜொலிக்கும் நீரின் மத்தியில் இறை தேடி காத்திருக்கும் இந்த நீர் காகத்தை சேர்ந்து பார்த்தால் ஓவியம் போல் தோன்றுகிறது. இடம்: கோவை வெள்ளலூர் குளம்.
10 Apr 2021
திண்டுக்கல் தியேட்டர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதித்தனர்.
10 Apr 2021
மாலை நேர வெளிச்சத்தில், மின்மினிப் பூச்சி போல் ஜொலிக்கும் நீரின் மத்தியில் இரை தேடி காத்திருக்கும் இந்த நீர் காகத்தை சேர்த்து பார்த்தால் ஓவியம் போல் தோன்றுகிறது. இடம்: கோவை வெள்ளலூர் குளம்.
10 Apr 2021
கோவை ரயில்வே ஸ்டேஷனில் ஸ்ரீ நாகசக்தி அம்மன் சமூக ஆன்மீக அறக்கட்டளை ஸ்ரீ நாகசக்தி அம்மன் தெய்வீக மூலிகை ஆராய்ச்சி நிலையம்சார்பில், கொரோனா தொற்று பரவாமல் இருக்க கபசுர குடிநீர் இலவசமாக வழங்கினர்.
10 Apr 2021
மலைக்குப் பின்னால் பொன்னிறமாய் மறையும் சூரியன்.இடம்.உடுமலை தனி.
10 Apr 2021
புதுச்சேரி கவர்னர் மாளிகை வளாகத்தில் அனைத்து மதத் தலைவர்களுடன் கொரோனா தொற்று குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
10 Apr 2021
சென்னை, சைதாப்பேட்டை வி.ஜி.பி., சாலையில், ஒரே பகுதியை சேர்ந்த 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
10 Apr 2021
கொளுத்தும் வெயிலில் காரைக்குடியில் தவித்தபடி நடந்து செல்லும் பெண்கள்.
10 Apr 2021
கோவை ரயில்வே ஸ்டேசன் முதல் வடகோவை வரை ரயில் தண்டவாளம் புதிதாக மாற்றும் பணி நடந்தது.
10 Apr 2021
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இடம்: அண்ணா சாலை, சென்னை.
10 Apr 2021
கடும் வெயிலிலும் குருவை சாகுபடி நடவு பணிக்காக தனி ஆளாய் நின்று நிலத்தை சரி செய்யும் விவசாயி. இடம்: விருத்தாசலம் அருகே மணவாளநல்லூர்.
10 Apr 2021
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் தீ மிதித்த பக்தர்கள்.
10 Apr 2021
கொரோனா தொற்று பரவல் அதிகமானதால் திருப்பூர் தென்னம்பாளையம் மார்கெட்டில் முக கவசம் அணியும்படி ஒலிபெருக்கியின் மூலம் அறிவுறுத்தப்பட்டது.
10 Apr 2021
துணை முதல்வர் பன்னீர்செல்வம் மாமியார் வள்ளியம்மாள் மறைவிற்கு துக்கம் விசாரிப்பதற்காக முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, ராஜலட்சுமி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வந்தனர். இடம்: உத்தமபாளையம், தேனி மாவட்டம்.
10 Apr 2021
அரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
10 Apr 2021
அபராதம் வசூல் : கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீண்டும் அமலுக்கு வந்ததை அடுத்து, சென்னையில் உள்ள கடைகளில், முகக்கவசம் அணியாத பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலித்த மாநகராட்சியினர். இடம்: புரசைவாக்கம்.
10 Apr 2021
கொரோனா பரவலை தடுக்க மார்க்கெட் பகுதிகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க சாலைகளில் கட்டைகளை கட்டி வைத்துள்ளனர். இடம் .சண்முகம் சாலை, மேற்கு தாம்பரம்