dinamalar telegram
Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

06 Mar 2021

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புத்தகங்களை ஆர்வமுடன் பார்வையிடும் புத்தக பிரியர்கள். 0

06 Mar 2021

திருப்பூர், குமரன் ரோடு லயன்ஸ் கிளப் அரங்கில் வடக்கு தொகுதி சட்டசபை தேர்தல் பணி குறித்து மண்டல அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. 0

06 Mar 2021

திருப்பூரில் தினமலர் முன்னாள் ஆசிரியர் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் படத்திற்கு, சக்ஷம் அமைப்பு மாவட்ட தலைவர் ரத்தினசாமி, சிந்தனை கழக மாநகர செயலாளர் ராமகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார். 0

06 Mar 2021

திருப்பூரில் தினமலர் முன்னாள் ஆசிரியர் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் படத்திற்கு, சேவாபாரதி மாவட்ட பொது செயலாளர் மோகன்குமார் அஞ்சலி செலுத்தினார். 0

06 Mar 2021

தேர்தல் பறக்கும் படையினர், திருப்பூர் வளம் பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 0

06 Mar 2021

தாம்பரம், சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆகிய தொகுதிகளில் ஓட்டு எண்ணும் மையங்களை செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லூயிஸ் ஆய்வு செய்தார். இடம்: கிழக்கு தாம்பரம். 0

06 Mar 2021

தஞ்சாவூர் கட்டளை கால்வாயில், தண்ணீர் திறக்காத நிலையில், சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் காய்ந்து வருவதால், உடனே பாசனத்திற்காக தண்ணீரை திறக்க கோரி, கருகும் பயிர்களுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள். 0

06 Mar 2021

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம் முகப்பு பகுதியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல்பாடு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. 0

06 Mar 2021

தஞ்சாவூரில் நாகலாந்து பழங்குடியின மக்களின் ஹார்ன்பில் திருவிழாவின் புகைப்பட கண்காட்சியை, இந்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்டக் கண்காணிப்புத் தொல்லியலாளர் அருண்ராஜ் திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தஞ்சை மாநகராட்சி கமிஷனர் ஜானகி ரவீந்திரன், புகைப்படக் கலைஞர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர். 0

06 Mar 2021

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்தது. 0

06 Mar 2021

விருத்தாசலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது பிடிபட்ட பணத்தை தாசில்தார் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். 0

06 Mar 2021

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் 100 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் முன் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 0

06 Mar 2021

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள மரங்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தண்ணீர் ஊற்றினார். 0

06 Mar 2021

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கையாளுவது குறித்து பயிற்சி நடந்தது. 0

06 Mar 2021

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் இடையிலான நட்புறவு கிரிக்கெட் போட்டி நடந்தது. 0

06 Mar 2021

சிவகங்கை-மேலூர் செல்லும் அரசு பஸ்சில் பள்ளி மாணவர்கள் ஆபத்து உணராமல் படிகட்டில் தொங்கிய படி செல்கிறார்கள். இடம்:சிவகங்கை பழைய கோர்ட் அருகே. 0

06 Mar 2021

விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரை இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசியை அரசு மருத்துவமனையில் போட்டுக் கொண்டார். 0

06 Mar 2021

குப்பைக்கு போனது:பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச பேக். இடம்: சிவகங்கை. 0

06 Mar 2021

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் இந்து மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனுவை கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பெற்றுக்கொண்டார். இடம்: கோவை கிருஷ்ண விலாஸ் ஹோட்டல் 0

06 Mar 2021

தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை, தி.நகரில் நடந்தது. 0
Share
 

Dinamalar iPaper

Advertisement