dinamalar telegram
Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

21 Jan 2021

துணை அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து கமலா ஹாரிஸ் சொந்த ஊரான துளசேந்திபுரத்தில் கிராமத்தினர் விளக்கு ஏற்றி கொண்டாடினர். 0

20 Jan 2021

குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் பந்தல் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 0

20 Jan 2021

மதுரை மாவட்டம் செக்கானூரணியில் தி.மு.க., சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். 0

20 Jan 2021

பருவ மழை நிறைவடைந்து ஏரிகள் மற்றும் கிணறுகள் நிரம்பிய நிலையில் தற்போது விவசாய பணியில் தீவிரம் காட்ட துவங்கியுள்ள விவசாயிகள். இடம்: ரிங்ரோடு, திருவண்ணாமலை. 0

20 Jan 2021

ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் முதல் நாள் கல்லூரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவர்களை மூத்த மாணவர்கள் பூ கொடுத்து வரவேற்றனர்.அருகில் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் கல்லூரியின் டீன் ஜெயந்தி.இடம்: சேப்பாக்கம், சென்னை. 0

20 Jan 2021

திருச்சி மாவட்டம் சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறி வந்த காளையை அடக்கிய வீரர். 0

20 Jan 2021

விழுப்புரம் நகர பாஜக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. 0

20 Jan 2021

கள்ளக்குறிச்சி பருத்தி வாரச்சந்தையில் விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்த பஞ்சு மூட்டைகள் குடோனில் வைக்கப்பட்டுள்ளது 0

20 Jan 2021

ஊட்டி தாவரவியல் பூங்காவில், சினிமா சூட்டிங் எடுக்கப்பட்டது. 0

20 Jan 2021

ஆடியோ மட்டும் வருது படத்த காணோம் : திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பம் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு குறும்படம் போடப்பட்டது அதில் ஆடியோ மட்டும் வந்தது வீடியோ கடைசி வரை வரவே இல்லை. 0

20 Jan 2021

தமிழகத்தில் 300 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 10 மற்றும் 12ஆம் வகுப்புகள் துவங்கி, சானிடைசர் வழங்கப்பட்டு வெப்ப பரிசோதனைக்குப் பின்னரே மாணவ மாணவியர் அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் ஆர்வத்துடன் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர். இதையடுத்து விட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் குறித்து விளக்கிய தலைமை ஆசிரியை. இடம்- சென்னை, அரசு மேல்நிலைப்பள்ளி மணலி. 0

20 Jan 2021

மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இடம்: தேனி அருகே குன்னூர். 0

20 Jan 2021

முதல்வரை அவதூறாக பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர். 0

20 Jan 2021

திருச்சி மாவட்டம் சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டை காண திரண்ட ஜல்லிக்கட்டு பிரியர்கள். 0

20 Jan 2021

முதலாமாண்டு மருத்துவ மாணவ, மாணவியர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஸ்டான்லி அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி. 0

20 Jan 2021

எச்சரிக்கை : 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி தேனி போக்குவரத்து போலீசார் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை எமதர்ம ராஜா வேடமணிந்த நபர் எச்சரித்து அறிவுரை வழங்கினார், இடமிருந்து, இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, முகமது மீரா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார். 0

20 Jan 2021

திருப்பூர், முருகம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கலெக்டரிடம் மனுக்கொடுக்க வந்தனர். 0

20 Jan 2021

ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் முதல் நாள் கல்லூரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவியருக்கு மூத்த மாணவியர் பூ கொடுத்து வரவேற்றனர்.இடம்: சேப்பாக்கம், சென்னை. 0

20 Jan 2021

திருப்பூர் ஆவின் மற்றும் கனரா வங்கியின் சார்பில் வேளாண் கடன் வழங்கும் சிறப்பு முகாம் தாராபுரம் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. 0

20 Jan 2021

இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ். உடன் கட்சிப் பிரமுகர்கள். 0
Share
 

Dinamalar iPaper

Advertisement