19 Jan 2021
பள்ளி வந்த மாணவர்கள் சோதனைக்கு பின் கைக்கு சானிடர் தெளித்து வகுப்பறைக்கு அனுமதிக்கப்பட்டனர். இடம்: எம்.சி. மேல்நிலை பள்ளி, மதுரை.
19 Jan 2021
அஞ்சலி ! : மறைந்த அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர், டாக்டர் சாந்தா உடலுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இடம் : அடையாறு.
19 Jan 2021
நீலகிரி-பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பரிசோதனைக்கு பின்னர் வகுப்பறைகளுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
19 Jan 2021
தமிழகத்தில் 300 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 10 மற்றும் 12ஆம் வகுப்புகள் துவங்கி, சானிடைசர் வழங்கப்பட்டு வெப்ப பரிசோதனைக்குப் பின்னரே மாணவ மாணவியர் அனுமதிக்கப்படுகிறார்கள். இடம்- சென்னை, அரசு மேல்நிலைப்பள்ளி மணலி.
19 Jan 2021
10 மாதங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிந்து, வகுப்புகளில் அமர்ந்திருந்த மாணவியர்.இடம்: எவர்வின் மெட்ரிக் பள்ளி, கொளத்தூர், சென்னை.
19 Jan 2021
10 மாதங்களுக்குப்பின் தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன . ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கொரோனா விதிமுறை குறித்து ஆசிரியை ஆலோசனை வழங்கினார்.
19 Jan 2021
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்து வகுப்பிற்கு அனுமதிக்கப்பட்டனர்.
19 Jan 2021
பள்ளிகள் திறப்பு : பல மாதங்களுக்கு பிறகு பள்ளி திறப்பதால் ஆர்வமுடன் மாஸ்க் அணிந்து பள்ளிக்கு வந்த மாணவிகள் . இடம்: கோவை, ராஜவீதி, துணி வணிகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி .
19 Jan 2021
பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. இடம்: கோவை மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி.
19 Jan 2021
தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து பாதயாத்திரையாக சென்ற திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த பக்தர்கள். இடம்:ஒட்டன்சத்திரம்.
18 Jan 2021
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழாவின் 2ம் நாளில் அன்னவாகனத்தில் அம்மன் . உள்படம் : பூத வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர்.
18 Jan 2021
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த வரவேற்பு விழாவில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பேசினார். அருகில் நீதிபதி எம். எம். சுந்தரேஷ்.
18 Jan 2021
திருப்பூர், அவிநாசி ரோடு பங்களா ஸ்டாப் டி.எஸ்.கே., மகப்பேறு மருத்துவமனையில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
18 Jan 2021
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதையொட்டி தொற்று நோயிலிருந்து எதிர்கொள்ள ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவியருக்கும் தேவையான முகக் கவசங்கள், கிருமிநாசினி, தெர்மல் மீட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. இடம் - கோவை சிங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி
18 Jan 2021
பெண்களை இழிவுபடுத்தியும், தமிழக முதல்வரை அவதூறாகவும் பேசியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து சென்னை ராயபுரத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Jan 2021
பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்தும், வேளாண் சட்டத்தை எதிர்த்தும், காங்கிரஸ் கட்சி சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடந்தது.இடம் : சின்னமலை, சைதாப்பேட்டை
18 Jan 2021
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுவது யொட்டி ஆசிரியர்களுக்கு கொரானா விழிப்புணர்வு நெறிமுறைகள் குறித்து தலைமை ஆசிரியர் பாரி ஆலோசனை வழங்கினார். இடம்;.கடலூர் வண்டிப்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி.
18 Jan 2021
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் முன்னெச்சரிக்கையாக பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இடம்; மறைமலை அடிகள் அரசு மேல்நிலை பள்ளி , பல்லாவரம்.
18 Jan 2021
தஞ்சை மாவட்டம் திருவையாறு சத்குரு தியாகராஜரின் 174 வது ஆராதனை விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது.
18 Jan 2021
பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு சென்னை திரும்பிய பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் .இடம் : பெருங்களத்தூர்.