dinamalar telegram
Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

19 Jan 2021

திண்டிவனம் - திருவண்ணாமலை புறவழி சாலையில் விபத்து அபாயங்களை குறைப்பதற்காக போக்குவரத்து துறை, நகாய் அதிகாரிகள் திண்டிவனம் போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 0

19 Jan 2021

பள்ளிகள் தமிழகத்தில் இன்று செயல்பட துவங்கின. வகுப்பறையில் சமூக இடைவெளி முகவசம் அணிந்து மாணவர்கள் வந்தனர்.இடம்: மதுரை சேதுபதி மேல்நிலை பள்ளி. 0

19 Jan 2021

பள்ளி வந்த மாணவர்கள் சோதனைக்கு பின் கைக்கு சானிடர் தெளித்து வகுப்பறைக்கு அனுமதிக்கப்பட்டனர். இடம்: எம்.சி. மேல்நிலை பள்ளி, மதுரை. 0

19 Jan 2021

அஞ்சலி ! : மறைந்த அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர், டாக்டர் சாந்தா உடலுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இடம் : அடையாறு. 0

19 Jan 2021

நீலகிரி-பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பரிசோதனைக்கு பின்னர் வகுப்பறைகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். 0

19 Jan 2021

தமிழகத்தில் 300 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 10 மற்றும் 12ஆம் வகுப்புகள் துவங்கி, சானிடைசர் வழங்கப்பட்டு வெப்ப பரிசோதனைக்குப் பின்னரே மாணவ மாணவியர் அனுமதிக்கப்படுகிறார்கள். இடம்- சென்னை, அரசு மேல்நிலைப்பள்ளி மணலி. 0

19 Jan 2021

10 மாதங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிந்து, வகுப்புகளில் அமர்ந்திருந்த மாணவியர்.இடம்: எவர்வின் மெட்ரிக் பள்ளி, கொளத்தூர், சென்னை. 0

19 Jan 2021

10 மாதங்களுக்குப்பின் தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன . ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கொரோனா விதிமுறை குறித்து ஆசிரியை ஆலோசனை வழங்கினார். 0

19 Jan 2021

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்து வகுப்பிற்கு அனுமதிக்கப்பட்டனர். 0

19 Jan 2021

பள்ளிகள் திறப்பு : பல மாதங்களுக்கு பிறகு பள்ளி திறப்பதால் ஆர்வமுடன் மாஸ்க் அணிந்து பள்ளிக்கு வந்த மாணவிகள் . இடம்: கோவை, ராஜவீதி, துணி வணிகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி . 0

19 Jan 2021

பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. இடம்: கோவை மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி. 0

19 Jan 2021

தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து பாதயாத்திரையாக சென்ற திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த பக்தர்கள். இடம்:ஒட்டன்சத்திரம். 0

18 Jan 2021

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழாவின் 2ம் நாளில் அன்னவாகனத்தில் அம்மன் . உள்படம் : பூத வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர். 0

18 Jan 2021

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த வரவேற்பு விழாவில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பேசினார். அருகில் நீதிபதி எம். எம். சுந்தரேஷ். 0

18 Jan 2021

திருப்பூர், அவிநாசி ரோடு பங்களா ஸ்டாப் டி.எஸ்.கே., மகப்பேறு மருத்துவமனையில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 0

18 Jan 2021

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதையொட்டி தொற்று நோயிலிருந்து எதிர்கொள்ள ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவியருக்கும் தேவையான முகக் கவசங்கள், கிருமிநாசினி, தெர்மல் மீட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. இடம் - கோவை சிங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி 0

18 Jan 2021

பெண்களை இழிவுபடுத்தியும், தமிழக முதல்வரை அவதூறாகவும் பேசியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து சென்னை ராயபுரத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 0

18 Jan 2021

பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்தும், வேளாண் சட்டத்தை எதிர்த்தும், காங்கிரஸ் கட்சி சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடந்தது.இடம் : சின்னமலை, சைதாப்பேட்டை 0

18 Jan 2021

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுவது யொட்டி ஆசிரியர்களுக்கு கொரானா விழிப்புணர்வு நெறிமுறைகள் குறித்து தலைமை ஆசிரியர் பாரி ஆலோசனை வழங்கினார். இடம்;.கடலூர் வண்டிப்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி. 0

18 Jan 2021

10ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் முன்னெச்சரிக்கையாக பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இடம்; மறைமலை அடிகள் அரசு மேல்நிலை பள்ளி , பல்லாவரம். 0
Share
 

Dinamalar iPaper

Advertisement