dinamalar telegram
Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

05 Dec 2020

கோவை : வி.எஸ்.எஸ்.எம்., பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் சார்பில், மத்திய அரசின் நீர் மேலாண்மை அமைச்சகத்தின் விருது பெற்ற கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டனுக்கு பாராட்டு விழா நடந்தது. 0

05 Dec 2020

திருநெல்வேலி சித்த மருத்துவ கல்லூரி மருத்துவர் சுபாஷ் சந்திரனுக்கு கொரோனா மேலாண்மைக்கான மருத்துவ விருதை தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினர் 0

05 Dec 2020

தொடர் மழையால் உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டம் 88 அடியாக உயர்ந்துள்ளது. 0

05 Dec 2020

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். 0

05 Dec 2020

தி.மு.க., சார்பாக மத்தியரசின் வேளாண் சட்ட மசோதவை கண்டித்து எம்.பி., ராஜா தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. இடம்: ஊட்டி காந்தி திடல். 0

05 Dec 2020

தொடர் மழையால் உடுமலை அமராவதி அணை முழு கொள்ளவை எட்டியதால் உபரி நீர் மதகு வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது. 0

05 Dec 2020

வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும் டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 0

04 Dec 2020

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் ஐராவதிஸ்வரர் கோவில் முழுவதும் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ள காட்சி. 0

04 Dec 2020

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், பல்வேறு ஏரிகள் முழு கொள்ளைவை எட்டிய நிலையில், தண்ணீர் நிரம்பி வழிகிறது. இடம். தஞ்சாவூர் சமுத்திரம் ஏரி. 0

04 Dec 2020

கடலூர் சிதம்பரம் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் 0

04 Dec 2020

புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால், ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. 0

04 Dec 2020

கடலூர், காட்டுமன்னார்கோயில் அடுத்த பெரிய கோட்டகம் பகுதியில் 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. 0

04 Dec 2020

கட்சி நிகழ்ச்சிக்காக ஊட்டி வந்துள்ள, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, பழங்குடியின பெண்களை சந்தித்தார். 0

04 Dec 2020

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் ரெட்டப்பாளையம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. 0

04 Dec 2020

சிதம்பரம் நடராஜர் கோவில் உட்புறம், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கியது. 0

04 Dec 2020

கொடைக்கானலில் கனமழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளி நீர்வீழ்ச்சி. 0

03 Dec 2020

அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்ததை அடுத்து சென்னை போயஸ் கார்டனில் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். 0

03 Dec 2020

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குள்ளஞ்சாவடி அடுத்து உள்ள அகரம் கிராமத்தில் நெல்வயல்கள் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 0

03 Dec 2020

புயல் பாதிப்பை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் இருக்கும் தேசிய பேரிடர் மீட்பு படையினர். 0

03 Dec 2020

நீரோடும் வைகையிலே... : ஏற்கனவே மழைநீர் செல்லும் நிலையில், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் மதுரை வைகை ஆற்றில் செல்கிறது. இடம்: ஆழ்வார்புரம் 0
Share
 

Advertisement