LOGIN
dinamalar telegram
Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

24 Oct 2020

தி.மு.க. கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்டபொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.ஜெயராமகிருஷ்ணன் உடுமலை பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்க ஊர்வலமாக சென்றதால் போக்குவரத்து பாதித்து நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்கள் . 0

24 Oct 2020

பண்டிகை காலம் நெருங்குவதை யொட்டி சென்னை, தி.நகர் ரங்கநாதன் தெருவில் பொருட்கள் மற்றும் புத்தாடைகள் வாங்கி வரும் பொதுமக்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். 0

24 Oct 2020

பண்டிகை காலம் நெருங்குவதையொட்டி சென்னை, தி.நகர், ரங்கநாதன் தெருவில் பொருட்கள் மற்றும் புத்தாடைகள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் வரதுவங்கியுள்ள நிலையில் ரங்கநாதன் தெரு ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. 0

24 Oct 2020

கடலூரில் ஆயுத பூஜையொட்டி பூ மார்க்கெட்டில் விற்பனைக்காக வந்துள்ள பூக்கள். 0

24 Oct 2020

இந்து பெண்களை இழிவாக பேசிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்த இந்து அன்னையர் முன்னணியினர். 0

24 Oct 2020

ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை வானகரத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பூ மார்க்கெட்டில், பூக்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்... 0

24 Oct 2020

கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 0

24 Oct 2020

ஆயுத பூஜையை முன்னிட்டு, கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டதால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வரிசை கட்டி நிற்கும் பேருந்துகள்... 0

24 Oct 2020

ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கள் ஊர்களுக்கு செல்ல குவிந்த மக்கள் கூட்டம்... 0

24 Oct 2020

வி.சி.க., தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திண்டுக்கல் எஸ்.பி.அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பா.ஜ., மகளிரணியினர். 0

24 Oct 2020

ஆயுத பூஜையையொட்டி கோலியனூர் மார்க்கெட் பகுதியில் அலுவலகம் மற்றும் வாகனங்களில் கட்டுவதற்காக,வாழைக்கன்றுகளை வாங்கி செல்லும் பொதுமக்கள். 0

24 Oct 2020

விழுப்புரம் மாவட்டம் மேல்காரணை வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணிக்காக கோலியனூர் கூட்ரோட்டில் நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் வேடம் அணிந்து பஜனைக் குழுவினர் நடைப்பயணம் சென்றனர். 0

24 Oct 2020

ஆயுத பூஜையை முன்னிட்டு திண்டுக்கல் மார்கெட்டில் பூக்களை வாங்க ஏராளமானோர் திரண்டனர். 0

24 Oct 2020

திண்டுக்கல் பூ மார்கெட் அருகே இருசக்கர வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. 0

24 Oct 2020

சரஸ்வதி பூஜை ஆயுத பூஜைகளுக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக கரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து அதிகமான பஸ் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்க, வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்கள் 0

24 Oct 2020

கரூர் அமராவதி ஆற்றுப் பாசன பகுதியான சுக்காலியூர் பகுதியில் பழங்கால முறைப்படி மாடுகளை வைத்து ஏறு பூட்டி விளைநிலங்களை நாற்று நடுவதற்கு சமப்படுத்தும் பணிகளில் ஈடுபட்ட விவசாயி 0

24 Oct 2020

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத மசோதாவிற்கு ஒப்புதல் வழங்ககோரி, தமிழக கவர்னரை கண்டித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இடம் : சின்னமலை, சைதாப்பேட்டை. 0

24 Oct 2020

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அருகில் அமைச்சர்கள். 0

24 Oct 2020

ஊட்டி - கூடலூர் தேசிய நெடுஞ்சாலை , பிங்கர்போஸ்ட் பகுதியில் நகராட்சி தற்காலிக துப்புரவு பணியாளர் , பல மாதங்கள் சம்பளம் தராததால், நகராட்சியை கண்டித்து சாலை மறியல் செய்தனர். 0

24 Oct 2020

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காததால், தமிழக கவர்னரை கண்டித்தும், அ.தி.மு.க அரசை கண்டித்தும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட வாகன நெரிசல்.இடம் : சின்னமலை, சைதாப்பேட்டை. 0
Share
 

Advertisement