இன்றைய போட்டோ
19 Mar 2024
லோக்சபா தேர்தலையொட்டி திண்டிவனம் மேம்பாலத்தில் எழுதப்பட்டிருந்த திமுக மற்றும் அதிமுக விளம்பரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் பெண்களை வைத்து சுவர் விளம்பரத்தை அழித்தனர்.
19 Mar 2024
கடலூர் கெதிலம் நதிக்கரையில் உள்ள கெங்கை பார்த்த அங்காளம்மன் கோயிலில் மாயனகொள்ளை உற்சவத்தை யொட்டி தீ மிதி திருவிழா வில் பக்தர்கள் தீ மித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
19 Mar 2024
புதுச்சேரி தனியார் பார்சல் நிறுவனங்களில் நேற்று இரவு போலீஸ் போலீஸ் மோப்பநாய் துணையுடன் ஈடுபட்ட போலீசார்.
19 Mar 2024
லோக்சபா தேர்தலையொட்டி திண்டிவனம் மேம்பாலத்தில் எழுதப்பட்டிருந்த திமுக மற்றும் அதிமுக விளம்பரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் பெண் ஊழியர்களை வைத்து அழுத்தினர்.
19 Mar 2024
லோக்சபா தேர்தல் தொடர்பாக புதுச்சேரி- விழுப்புரம் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி போலீஸ் அதிகாரிகள்.
19 Mar 2024
லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து, திருவண்ணாமலையில் கிரிவலப்பாதை மற்றும் வேலூர் சாலை சந்திப்பு அருகே கருணாநிதி சிலை மறைக்கப்பட்ட நிலையில் திமுக கட்சிக்கொடி இறக்கப்படாமல் உள்ளது.
18 Mar 2024
கோவை குண்டுவெடிப்பில் நடந்த சம்பவத்தை பா.ஜ., மாநில பொருளாளர் சேகர் பிரதமர் மோடியிடம் விளக்கினார். அருகில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர். இடம்: ஆர்.எஸ்.புரம்
18 Mar 2024
1998-ம் ஆண்டு குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி. இடம்: கோவை ஆர்.எஸ்.புரம்.
18 Mar 2024
பிரதமர் மோடியின் ரோடு ஷோ வில் மோடியின் உருவம் கொண்ட முகமூடிகளுடன் வந்த தொண்டர்கள். இடம்: கோவை ஆர்.எஸ்.புரம்.
18 Mar 2024
பங்குனி மாதம் முதல் திங்கள் நாளில் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
18 Mar 2024
கோவையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட ரோடு ஷோ நிகழ்ச்சியில் திறந்த ஜீப்பில் வந்த மோடிக்கு மலர்கள் தூவப்பட்டன. அருகில் மத்திய அமைச்சர் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் உள்ளனர்.
18 Mar 2024
அருள்மிகு மருந்தீஸ்வரர் கோயில் பங்குனித் திருவிழாவின் 3 வது நாளான இன்று அதிகார நந்தி வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த சந்திரசேகரர். இடம் : திருவான்மியூர்.
18 Mar 2024
தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து, அரசின் சாதனை விளக்க விளம்பரங்கள் மறைக்கப்படாமல் உள்ளது . இடம் : 3 வது நிழற்சாலை, அண்ணாநகர்
18 Mar 2024
கோவையில் பிரதமர் மோடியின் வருகை யொட்டி ரோடு ஷோ நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்ந்த பொய்கால் குதிரை மற்றும் மரக்கால் ஆட்டம்.
18 Mar 2024
லோக்சபா தேர்தலையொட்டி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் பேசினார்.
18 Mar 2024
லோக்சபா தேர்தலையொட்டி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்க கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது பொது மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் கூட்டம் கூட்டமாக வந்தனர். அவர்களுக்கு புகார் பெட்டி வைத்து அதில் மனுக்களை போடப்பட்டது
18 Mar 2024
புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையிலும் அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் இருக்கின்றன. இடம்.கொக்கு பார்க்.
18 Mar 2024
பங்குனி திருவிழாவை முன்னிட்டு சென்னை மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவிலில் மூன்றாம் நாளான இன்று உற்சவர் மல்லிகேஸ்வரர்-மரகதாம்பாள் அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
18 Mar 2024
லோக்சபா தேர்தலையையொட்டி, புதுச்சேரி முள்ளோடை செக்போஸ்ட் அருகில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.
18 Mar 2024
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 3 மணி நேரம் வழிபாட்டில் ஈடுபட்டார்.
18 Mar 2024
பங்குனித் திருவிழாவை முன்னிட்டு அதிகார நந்தி வாகனத்தில் வீதி உலா வந்து அருள் பாலித்த கபாலீஸ்வரர். இடம்: மயிலாப்பூர் ,சென்னை.
18 Mar 2024
புதுச்சேரி வேதபாரதி பாரதப் பண்பாட்டு அமைப்பின் சார்பில் காந்தி வீதி பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் திருச்சி கலைமாமணி கல்யாணராமன் அவர்களின் குசேலனும் கண்ணனும் பற்றிய உபன்யாசம் நிகழ்ச்சி நடந்தது.
18 Mar 2024
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் இளைய சகோதரர், ராமகிருஷ்ணின் ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டு சங்கராலயத்தில் நடந்தது. இதில் கடலூர் கோபி பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடந்தது.
18 Mar 2024
உடுமலை லயன்ஸ் திருமண மண்டபத்தில் நடந்த மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு போலீஸ் டி.எஸ்.பி.,சுகுமாரன் பரிசு வழங்கினார் -
18 Mar 2024
லோக்சபா தேர்தலை முன்னிட்டு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அபிநயா தலைமையில் குழுவினர் வாகன தணிகையின் போது பிடிப்பட்ட மதுபானங்களை ஊற்றி அழித்தனர்
18 Mar 2024
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுவர்கள் பூங்கா இந்திய தேர்தல் ஆணையம் முன்பு வாகனங்கள் நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது
18 Mar 2024
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, டிடிவி தினகரன் குடும்பத்துடன் சாமி தரிசன செய்தனர். கோவில் சார்பில் குருக்கள் பிரசாதம் வழங்கினார்.
17 Mar 2024
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ஞான வேள்வி ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா சொற்பொழிவாற்றினார்.
17 Mar 2024
பிரதமர் மோடி கோவை ஆர் எஸ் புரத்தில் நினைவஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி போல் திறந்த ஜீப்பில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு ஐஜி நின்று போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.
17 Mar 2024
லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேனியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
17 Mar 2024
புதுச்சேரியில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படையினர் வழுதாவூர் சாலையில் அணிவகுப்பு நடத்தினர்.
17 Mar 2024
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்கள்.
17 Mar 2024
லோக்சபா தேர்தலை ஒட்டி கோவை வீரகேரளம் ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
17 Mar 2024
தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து, தீவிர சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர்.இடம் : ஷெனாய் நகர்
17 Mar 2024
லோக்சபா தேர்தலை யொட்டி ராஜீவ் காந்தி சிக்னல் காமராஜர் சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனை ஈடுபட்டனர்.
17 Mar 2024
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி, திருப்பூர் பல்லடம் ரோட்டில், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பேரணி நடந்தது.
17 Mar 2024
மருந்தீஸ்வரர் கோயில் பங்குனித் திருவிழா இரண்டாம் நாளான இன்று( மார்ச் 17) காலை சூரியபிரபையில் ஊர்வலமாக வந்து காட்சியருளிய சந்திரசேகரர்.இடம் : திருவான்மியூர்
17 Mar 2024
சென்னை, சேத்துப்பட்டு, தனியார் ஹோட்டலில் , ஆர்யா வைஸ்யாஸ் சார்பில், அயோத்தியா ராமர் கோவிலில் தொடர்ந்து அன்னதானம் பணியில் ஈடுபட்ட, ஆர்யா வைஸ்யாஸ் அறக்கட்டளை நிறுவன தலைவர் ரவிகுமார் மற்றும் அதற்கு உதவியாக இருந்த கார்த்திக் டிபன் சென்டர் ரவிசந்திரன் ஆகியோரை, ஜி.ஆர்.டி தலைவர் ராஜேந்திரன், எஸ்.கே.ஷெட்டி கட்டுமான நிறுவன மேலாண்மை இயக்குனர் கே.வி. ரமணா ஷெட்டி ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர். அருகில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ் உள்ளார்.
17 Mar 2024
தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் பேனர்கள் மறைக்கப்படாமல் உள்ளது. இடம் : புல்லா அவென்யூ, ஷெனாய் நகர்
17 Mar 2024
ஹாக்கி போட்டியில் மோதிய வருமானவரி துறை அணி மற்றும் ஏ.ஜி.எஸ் அணியினர். இடம் : எழும்பூர், சென்னை
17 Mar 2024
லோக்சபா தேர்தல் தேதி அறிவித்ததால் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துவக்கப்பட்ட கட்டுப்பாடு அறையை கலெக்டர் பிரபு சங்கர் பார்வையிட்டார்.
17 Mar 2024
மருந்தீஸ்வரர் கோயில் பங்குனித் திருவிழா இரண்டாம் நாளான இன்று சூரியபிரபையில் ஊர்வலமாக வந்து காட்சியருளிய சந்திரசேகரர்.இடம் : திருவான்மியூர்
17 Mar 2024
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் சாலையோரம் இருந்த கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்.இடம் : சோழிங்கநல்லூர்.
17 Mar 2024
பங்குனித் திருவிழா துவங்கியதையொட்டி மருந்தீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் நடந்தது.இடம் : திருவான்மியூர்
17 Mar 2024
மீன்பிடி திருவிழாவில் உற்சாகம்! :திண்டுக்கல், நத்தம் செங்குளம் கிராமத்தில் உள்ள சின்ன குளத்தில் நடந்த மீன்பிடித் திருவிழாவில், போட்டி போட்டுக்கொண்டு ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மீன்களைப் பிடித்து சென்றனர்.
17 Mar 2024
தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்ததால் உடுமலை தளி மேம்பாலத்தில் எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை நகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் அழித்தனர்.
17 Mar 2024
லோக்சபா தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து புதுச்சேரி நகர் பகுதியில் துணை ராணுவ படையினர் அணிவகுப்பு நடத்தினர்.
17 Mar 2024
பங்குனித் திருவிழா துவங்கியதையொட்டி மருந்தீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் நடந்தது.இடம் : திருவான்மியூர்
16 Mar 2024
லோக்சபா தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்ததால் விழுப்புரம் தந்தை பெரியார் நகர் அருகே பறக்கும் படை வாகன சோதனையில் ஈடுபட்டதை கலெக்டர் பழனி எஸ்.பி., தீபக் சிவாச் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
16 Mar 2024
சாணக்யா யுடியூப் சேனலின் 5வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சாணக்யா யுடியூப் சேனலின் நிறுவனர் ரங்கராஜ் பாண்டே நினைவு பரிசு வழங்கினார் உடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்.
16 Mar 2024
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திருப்பூர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலின் படம் அகற்றப்பட்டது.
16 Mar 2024
சென்னை, மவுண்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ பணிகள் நடந்து வருவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.இடம்: நந்தம்பாக்கம்.
16 Mar 2024
லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19 நடைபெறும் என அறிவித்த நிலையில் பா.ஜ., தென் சென்னை பார்லி, தேர்தல் அலுவலகத்தில் கட்சி கொடிகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள கட்சியினர். இடம் : வேளச்சேரி.
16 Mar 2024
கடலூரில் வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு எஸ்.பி.ராஜராம் தர்மாகோல் தோப்பியை வழங்கினார்.
16 Mar 2024
புதுச்சேரி பஸ் நிலையம் விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருவதால் தற்காலிக பஸ் நிலையமாக செயல்பட உள்ள ஏ எப் டி மைதானம் தயாராகி வருகிறது.
16 Mar 2024
விழுப்புரம் நீதிமன்றம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
16 Mar 2024
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று உற்சவர் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த கபாலீஸ்வரர் மற்றும் கற்பக அம்பாள்
16 Mar 2024
விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் நடைப்பயிற்சி பூங்காவை கலெக்டர் பழனி திறந்து வைத்து பார்வையிட்டார்.அருகில் எம்.எல்.ஏ.கள்., புகழேந்தி, லட்சுமணன்.
16 Mar 2024
கோவை வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லூரி மைதானத்தில் நடந்த வாலிபால் போட்டியில் சீறிப்பாய்ந்து விளையாடிய வீரர்கள். .
16 Mar 2024
திருப்பூர், தென்னம்பாளையம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் நடனமாடிய குழந்தைகள்.
16 Mar 2024
கோவை சரணம்பட்டி குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த வாலிபால் போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்திய வீராங்கனைகள்
16 Mar 2024
புதுச்சேரி கிருமாம்பாக்கம் ஏரியில் பறவைகளை காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ள வாட்ச் டவர் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்துள்ளது.
15 Mar 2024
புதுச்சேரியில் போதை பொருள் அதிகமாக புழக்கத்தில் உள்ளதை தடுக்க பெரிய கடை போலீசார் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் வாகன சோதனை நடத்தினர்.
15 Mar 2024
பாரத பிரதமர் நரேந்திர மோடி கோவையில் கலந்து கொள்ளும் ரோடு ஷோ நிகழ்ச்சியின் துவக்க இடமான எரு கம்பெனி பகுதியை பா.ஜ., கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி., முருகானந்தம், மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மற்றும் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
15 Mar 2024
தேர்தல் வரும் முன்னே பா.ஜ.க.வினர் தாமரை சின்னமும் அ.தி.மு.க.வினர் இரட்டை இலை சின்னங்களுக்கு வாக்களிக்க கோரி சுவர் விளம்பரங்களை வரைந்து உள்ளனர். இடம்: சிவகங்கை - காளையார்கோவில் ரோடு பையூர் அருகே.
15 Mar 2024
கோடை காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கிய சித்தா மருத்துவ மாணவர்கள். இடம் : அரசு சித்தா மருத்துவமனை, அரும்பாக்கம்.
15 Mar 2024
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
15 Mar 2024
தி.மு.க., குடும்ப அரசியல் விமர்சனத்திற்கு பதிலடி தரும் வகையில் கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.
15 Mar 2024
கோவை செட்டிபாளையம் கலைஞர் நகரில் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட பட்டா இடத்தில் தற்போது வேறு நபர்கள் வீடு கட்டி விட்டனர் எனக் கூறி மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்த பெண்கள்.
15 Mar 2024
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளி குறைக்கேற்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் அருண் தம்புராஜ் மனுக்களை பெற்று விசாரணை செய்தார்.
15 Mar 2024
திருப்பூர் பழைய மார்கெட் வீதியில், கடை உரிமையாளர்கள் ரோட்டை ஆக்கிரமித்து பொருட்கள் வைத்துள்ளதாக, தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியாக, மைக் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அறிவிப்பு வழங்கினர்.
15 Mar 2024
திருப்பூர், நொய்யல் வீதியில் ஓட்டுக் கேட்க அணிவகுத்து வந்த எம்.எல்.ஏ., மற்றும் மேயர் கார்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.
15 Mar 2024
ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஈவினிங் பஜார் மசூதியின் வெளியே தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள். இடம்: பார்க் டவுன், சென்னை.
15 Mar 2024
திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடந்தது. அதில், பதிவு செய்ய வரிசையில் நின்றனர்.
15 Mar 2024
குரோம்பேட்டை - ராதாநகரை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை பணி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது
15 Mar 2024
லோக்சபா தேர்தல் வருவதை முன்னிட்டு அ.தி.மு.க.,வினர் சுவர் விளம்பர பணியை மும்முரமாக செய்து வருகின்றனர். இடம்: விழுப்புரம் பெரும்பாக்கம் அருகே,
15 Mar 2024
விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மகளிர் ஆரோக்கியம் மற்றும் மனநலம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
15 Mar 2024
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் நிறுவனத்துக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
15 Mar 2024
மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடப்பது தொடர்பான பிரச்சனையில் பெண்கள் ஊட்டி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
15 Mar 2024
ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் குறித்துமுன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆகியோர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். உடன் தொகுப்பாளர்பாவனா.
15 Mar 2024
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய செயலாளர் நிர்வாகத்தில் இடையூறு செய்வதாக கூறி நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய குழு தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.
15 Mar 2024
சிவகங்கை காசி விஸ்வநாதர் கோயில் சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திரம் தேரோட்ட விழா கொடியேற்றத்தில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
15 Mar 2024
சென்னை, போரூர் ஜங்ஷன் ஆற்காட்டு சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
15 Mar 2024
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறுவர்கள் விளையாடும் பூங்காவில் நடப்பாதையில் செடிகள் வளர்ந்து அதிகமாக உள்ளது.
15 Mar 2024
ரமலான் நோன்பு முன்னிட்டு ஈவினிங் பஜார் மசூதியின் வெளியே தொழுகை ஈடுபட்ட இஸ்லாமியர்கள். இடம்: பார்க் டவுன், சென்னை.