Advertisement

தமிழகத்தின் கண்ணாடி:

புதுச்சேரி ஆரோவில் அருகில் சர்வதேச குதிரை ஏற்ற போட்டி துவங்கியது
திருப்பூர் ஷண்முகானந்த சங்கீத சபா சார்பில் நடந்த இசை அமுது நிகழ்ச்சி திவ்யசேன நடன குழுவினரின் நாட்டிய நாடகம் நடந்தது.
மெகா சைஸ் சைக்கிள் : வில்லிவாக்கம் மெக்கானிக் ராஜேந்திரன் மெகா சைஸ் சைக்கிளை தயாரித்து சாலையில் உலா வருகிறார். இந்த சைக்கிளை ஏராளமானோர் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.இடம்: சென்னை கதிட்ரல் சாலை.
சபாஷ் சரியான போட்டி : நாங்களும் வேட்டி சட்டை அணிந்து பைக் ஓட்டுவோம்ல, என மிடுக்காக செல்லும் பெண்.இடம் விழுப்புரம் அடுத்த சாலாமேடு.
காவடி ஆட்டம் : தைப்பூசவிழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு கோவையை சேர்ந்த பக்தர்கள் காவடி எடுத்து ஆடி வந்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் மக்கள் நீதி மையம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் பொதுமக்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
கோத்தகிரியில், குன்றின் குரல் அமைப்பு சார்பாக நடந்த பொங்கல் விழாவில், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கடலூர் திருவந்திபுரம் கெடிலம் ஆற்றில் நடந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் தேவநாத சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோத்தகிரி அருகே கோடநாடு காட்சிமுனையில், தடைசெய்யப்பட்ட அபத்தான பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள்.
புதுச்சேரி கலை பண்பாட்டு துறை, தஞ்சை தென்னக மண்பாட்டு மையம் சார்பில் தாவரவியல் பூங்காவில் நடந்த பொங்கல் விழாவில் மயூரி கிராமிய கலைமன்றதின் நடன நிகழ்ச்சி நடந்தது.
கோவை, கரவளி மாதாப்பூரில் நடந்த பொங்கல் விளையாட்டு விழாவில் கயிறு இழுக்கும் போட்டியில் கொண்ட பெண்கள்.
தை மாத கிருத்திகையை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் கூட்டம்
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோவை லாலி ரோட்டிலுள்ள மாதேஸ்வரன் கோவிலுக்கு மாடுகள் அலங்கரித்து அழைத்து சென்றனர்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கோவை கணபதி 3வது வீதியில் திருவள்ளுவர் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வலை வீசி மீன்கள் பிடிக்கும் இடம்: உக்கடம் பெரியகுளம், கோவை.
கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தை கார்த்திகையை முன்னிட்டு பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். இடம் : சென்னை.
சிவகங்கை அருகே வலையராதினிப்பட்டியில் பெண்கள் வெள்ளை சேலையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
பொள்ளாச்சியில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 12 பேருக்கு சான்றோர் விருது வழங்கப்பட்டது
பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் சூரியூரில் நடந்த ஜல்லிகட்டில் சிறிபாய்ந்து வந்த காளையை அடக்கிய வீரர்கள்.
 

Download for free from the Store »

Advertisement