வான்கோழி குஞ்சுகள் பராமரிப்பது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:
வான்கோழி குஞ்சுகள் பராமரிக்கும் போது, தீவனம் சாப்பிடாமல் இருப்பது, செயற்கை வெப்பம் கிடைக்காமல் இருப்பது, தாது உப்பு மற்றும் புரதச்சத்து குறைபாடுகளால், வான்கோழி குஞ்சுகளின் வளர்ச்சி அடையாமல் இறக்க நேரிடும்.
இதைத் தவிர்க்க, நான்கு வாரத்தில் இருந்து, வான்கோழி குஞ்சுகளை முறையாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக, நான்காவது வாரத்தில் குடற்புழு நீக்க மருந்தினை, வான்கோழி குஞ்சுகளுக்கு கொடுக்க வேண்டும். மேலும், ரத்த கழிச்சல் மருந்தினை நீரில் கலந்து கொடுக்கலாம்.ஆறாவது வாரத்தில், அம்மை தடுப்பூசியும், காலரா தடுப்பூசி போட வேண்டும். இதுபோல செய்து வந்தால், வான்கோழி குஞ்சுகள் இறப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
வான்கோழி வளர்ப்பில், கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.பிரேமவல்லி,
97907 53594.
வான்கோழி வளர்ப்பில் கணிசமான வருவாய்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!