நாட்டு பாசுமதி ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், மலையாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி முனைவர் என்.மகாலட்சுமி கூறியதாவது:
பாரம்பரிய ரகத்தில், நாட்டு பாசுமதி ரக நெல்லும் ஒன்றாகும். இது, குட்டை சன்ன ரகமாகும். நடவு செய்து, 115 நாட்களில், நெல் அறுவடைக்கு வரும். நம்மூர் களிமண்ணிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது.
சம்பா மற்றும் பின் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யலாம். நெல் மஞ்சள் நிறத்திலும், அரிசி வெளிர் நிறத்திலும் இருக்கும்.
குறிப்பாக, சீரக சம்பா வாசனைப்போல, நாட்டு பாசுமதி பாரம்பரிய ரக நெல்லிலும் வாசம் கமகமவென வரும். இந்த அரிசியில் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
-தொடர்புக்கு: என்.மகாலட்சுமி,
98414 42193.
களிமண் நிலத்திலும் நாட்டு பாசுமதி நெல் சாகுபடி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!