Advertisement

நீண்ட கால மகசூலுக்கு மண்புழு உரம்

மண்புழு உரம் விற்பனை மற்றும் அதன் பயன்பாடு குறித்து, திருவள்ளூர் மாவட்டம், தலக்கஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஜி.சந்தானம் கூறியதாவது:

விவசாயம் செய்யும் நிலத்திற்கு, மண்புழு உரம் அவசியமானது. இதில், களர் உவர் நிலத்தின் மண்ணின் தன்மை மற்றும் சவுடு மண்ணின் மாற்றத்திற்கு, மண்புழு உரம் பெரிதும் உதவும்.

குறிப்பாக, ரசாயன உரங்களை தவிர்த்து, காய்கறி சாகுபடி செய்யும் நிலங்களில், மண்புழு உரங்களை பயன்படுத்தினால், கூடுதல் மகசூல் கிடைப்பதோடு, மண்ணின் கடினத் தன்மையும் மாறுபடும்.

இதனால், ஆறு மாதங்களில் மகசூல் கொடுக்கக்கூடிய காய்கறி பயிர்கள்கூட, கூடுதலாக மூன்று மாதங்கள் என, ஒன்பது மாதங்கள் மகசூல் கொடுக்கும். செடிகளில் காய்ப்பு திறன் குறையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: ஜி.சந்தானம், 77087 22486.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement