வட்டப்பாத்தி முறையில், கீரை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புள்ளலுார் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஜெ.சுகுமார் கூறியதாவது:
வட்டப்பாத்தி முறையில், கீரை சாகுபடி செய்துள்ளேன். சாதாரண முறையில், கீரை சாகுபடி செய்வதைக் காட்டிலும், வட்டப்பாத்தி முறையில் கீரை சாகுபடி செய்வது, பலவித நன்மைகளை தரும்.
வட்டப்பாத்தியை தயார் செய்யும் போது, பண்படுத்திய நிலத்தில், தாவரக் கழிவுகளை மண்ணுக்குள் அடுக்கி விட்டு, சாணத்தை தெளித்து விட வேண்டும்.
அதன்மீது, வட்டமாக மண்ணை கொட்டி கீரை சாகுபடி செய்ய வேண்டும்.இதுபோல, கீரை சாகுபடி செய்யும் போது, வட்டப்பாத்தியில் தண்ணீர் தேங்காது. மழைக் காலத்திலும், இழப்பு இன்றி கீரை சாகுபடி செய்யலாம். இதுதவிர, நிலத்தடி நீரை சேமிக்க உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: ஜெ.சுகுமார், 76399 54645.
வட்டப்பாத்தியில் கீரை சாகுபடி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!