வெண் பூசணி சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், செம்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எஸ்.பொண்ணுரங்கம் கூறியதாவது:
தர்பூசணி மற்றும் வெண் பூசணி சாகுபடி செய்து வருகிறேன். ஆடி மாத துவக்கத்தில், வெண் பூசணி விதைகளை பாத்தி முறையில் விதைத்தேன். அதற்கு சொட்டு நீர் பாசன அமைப்பு ஏற்படுத்தி உள்ளேன். இது, 90 நாட்களில் மகசூல் பெறக்கூடிய குறுகிய கால பயிராகும்.
நீர் பாசனம் மற்றும் உர நிர்வாகம் முறையாக கட்டுப்படுத்தினால், ஒரு ஏக்கருக்கு அதிக மகசூல் பெறலாம். வெண் பூசணி மகசூல் நன்றாக இருப்பதால், 12,000 கிலோ வரையில் மகசூல் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: எஸ்.பொண்ணுரங்கம்,
98431 21608.
சொட்டு நீர் பாசனத்தில் வெண்பூசணி சாகுபடி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!