Advertisement

ஆந்திர எம்.டி.யு., ரக நெல்லில் அதிக மகசூல்

ஆந்திர 'எம்.டி.யு., - 1290' ரக நெல் மகசூல் குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆர்.தேவராஜ் கூறியதாவது:

என் நிலத்தில், பல வித ரக நெல் சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், ஆந்திர 'எம்.டி.யு., - 1290' ரக நெல், முதல் முறையாக நேரடி விதைப்பு வாயிலாக, நெல் சாகுபடி செய்தேன். இதில், களைப்பு திறன் அதிகமாகவே வந்தது.

இது, 115 நாளில் அறுவடைக்கு வரும், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் குறைவு, ஒரு ஏக்கருக்கு 35 மூட்டை மட்டுமே மகசூல் கிடைக்கும் என, ஆந்திர மாநில முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர்.

நம்மூர் ஏரி நீர்பாசன களிமண்ணில் அதிகமாக பயிர் களைப்பு திறன் கொடுக்கிறது. யூரியாக போன்ற தழைச்சத்து உரங்களை குறைத்துவிட்டு, பொட்டாஷ், காம்பளக்ஸ் போன்ற மணிச்சத்து உரங்களை அதிகமாக போட்டதால், கூடுதல் மகசூல் பெற முடிந்தது.

ஒரு ஏக்கருக்கு, ஆந்திர 'எம்.டி.யு., - 1290' ரக நெல், 80 கிலோ எடை கொண்ட 35 நெல் மூட்டைகள் மட்டுமே மகசூல் பெற முடியும் என, ஆந்திர விவசாயிகள் தெரிவித்தனர்.

நம்மூர் ஏரி பாசன களிமண்ணுக்கு, நீர் மேலாண்மை மற்றும் உரம் மேலாண்மை முறையாக கையாண்டு, 40 மூட்டைகள் நெல் அறுவடை செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: ஆர்.தேவராஜ்,
87547 97918.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement