நாட்டு ரக சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அடுத்த, நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:
பல வித பாரம்பரிய ரக நெல், காய்கறி, எள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன்.
விளை பொருளுக்கு ஏற்ப இயற்கை உரச்செலவு தான். வேறு எந்த ஒரு ரசாயன உரமும் கிடையாது. செம்மண், மணல் கலந்த களி மண் என, வெவ்வேறு வகையான என் நிலங்களில் சோதனை ஓட்டமாக நெல், காய்கறி ஆகிய பயிர்களை செய்வேன்.
எந்த ஒரு இயற்கை உரத்தில், அதிக மகசூல் கிடைக்கிறது என தெரிந்துக் கொள்வேன். அதற்கு ஏற்ப, சாகுபடியை செய்து, இயற்கை விவசாயத்தில் கணிசமான வருவாய் ஈட்டி வருகிறேன். அந்த வரிசையில், மேட்டுப்பாத்தி வாயிலாக நாட்டு சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளேன். இது, கொடி வகை பயிராகும்.
ஒவ்வொரு கணுவிற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கை நாட்டு சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை எதிர்பார்க்கலாம்.
மரபணு மாற்றம் செய்த சர்க்கரை வள்ளிக்கிழங்கிற்கும், நம்ம நாட்டு ரக சர்க்கரை வள்ளிக்கிழங்கிற்கும், தனித்தனி சுவை மாறுபடும். இதை அதிக விலை கொடுத்தும் வாங்க மக்கள் தயக்கம் காட்டுவதில்லை.
குறிப்பாக, இயற்கை விளைப்பொருட்களை, விற்பனை செய்யும் திறன் இருக்கும் விவசாயிகள், நாட்டு மருந்து கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: நீலபூ.கங்காதரன்,
96551 56968.
இயற்கை விவசாயத்தில் நாட்டு சர்க்கரை வள்ளிக்கிழங்கு
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!