Advertisement

ராஜஸ்தான் ஆடுகளை நம்மூரிலும் வளர்க்கலாம்

ராஜஸ்தான் ரக ஆடு வளர்ப்பு குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ராஜீவ் காந்தி கூறியதாவது:

மா, பலா, கொய்யா உள்ளிட்ட, பலவித பழ செடிகளை, என் தோட்டத்தில் நட்டுள்ளேன். வரப்பு பயிராக வேங்கை, தேக்கு, மகோகனி, ஈட்டி உள்ளிட்ட மரங்களை சாகுபடி செய்துள்ளேன். நம்ம ஊரு மலை மண்ணுக்கு அனைத்தும் பழுது இன்றி விளைகின்றன.

அந்த வரிசையில், ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகமாக வளர்க்கப்படும், 'சிரோகி' ரக ஆடுகளை இங்கு நான் வளர்த்து வருகிறேன். இந்த ஆடுகளில், செம்மண் நிறம் மற்றும் கறும்புள்ளி விழுந்த ஆடு, கறுப்பு நிற ஆடு என, மூன்று விதமான ஆடுகள் உள்ளன.

நம்மூர் சீதோஷ்ண நிலையிலும் நன்றாக வளரக்கூடியது. இதை, பால் உற்பத்தி மற்றும் இறைச்சி விற்பனைக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு ஆடு, நம்மூர் நாட்டு மாடுகளை போல, பால் கறக்க முடியும். அதேபோல, நம்மூர் ரக ஆடுகள், 20 கிலோவிற்கு தாண்டாது. இந்த ராஜஸ்தான் 'சிரோகி' ஆடு ஒன்று, 50 கிலோவிற்கு மேல் எடை இருக்கும்.

பால் உற்பத்தி மற்றும் இறைச்சி விற்பனை என, இரு விதங்களிலும் கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: எம்.ராஜீவ்காந்தி,
89402 22567.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement