Advertisement

தேனீ கூடுகளால் காய்கறி மகசூலுக்கு வழி

விளை நிலத்தில், இயற்கை சூழலை உருவாக்குவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், படுநெல்லி கிராமத்தைச் சேர்ந்த இளங்கலை பொறியியல் பட்டதாரி விவசாயி சே.கோகுல் கூறியதாவது:

துாயமல்லி, சீரக சம்பா ஆகிய பாரம்பரிய ரக நெல்லை, என் நிலத்தில் நடவு செய்து, நல்ல மகசூலை எடுத்து வருகிறேன்.

இது தவிர, மேட்டுப்பாத்தியில், காய்கறி, கீரை, தக்காளி ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன்.

பொதுவாக, விளை நிலத்தில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்தால், கரையான், தேனீ, பட்டாம்பூச்சி, நன்மை செய்யும் பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். இது, கூடுதல் மகசூலுக்கு வழி வகுக்கும்.

குறிப்பாக, மரம் மற்றும் பிற செடிகளில் தேன் கூடு கட்டுகிறது என்றால், அந்த விளை நிலத்தில் இருக்கும் காய்கறி பூக்களின் மகரந்தச் சேர்க்கை அதிகமாகும்.

இது, காய்கறி மகசூலுக்கு, கூடுதல் வழி வகுக்கும். அதேபோல, கரையான், பட்டாம்பூச்சி, நன்மை செய்யும் பூச்சிகளின் பெருக்கம்கூட இதேபோல தான் கூடுதல் மகசூலுக்கு வழி வகுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: சே.கோகுல்,
90878 02435.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement