செரிமானத்தை ஊக்குவிக்கும் திறன் பழைய சோறுக்கு உண்டு என்ற எங்களின் ஆய்வை, தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக சோதனை கூடத்திற்கு அனுப்பியதில் உறுதியாகி உள்ளது. 'புரோ பயாடிக்' எனப்படும் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் பழைய சோறில் பெருமளவு இருக்கின்றன. இந்த பாக்டீரியாக்கள், விட்டமின்கள், குறிப்பாக, பி1, பி12, பி6 உற்பத்தியை அதிகரிக்கின்றன. குடலின் உட்புறம் உள்ள கொழகொழப்பான மியுக்கஸ் எனப்படும் சவ்வின் திறனை மேம்படுத்துகின்றன.
வயிற்றுப் புண், அழற்சி, 'ஐபிஎஸ்' எனப்படும் உணவு சாப்பிட்டதும் மலம் கழிக்க வேண்டிய நிலையில் உள்ள நோயாளிகள், தொடர்ந்து பழைய சாதம் சாப்பிட்டதில், பிரச்னையின் தன்மை வெகுவாக குறைந்ததை தொடர்ந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டோம்.
பழைய சோ்றில் உள்ள 'லாக்டோ பேசிலஸ்' எனும் பாக்டீரியாக்கள் குடலில் தீங்கு செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, நல்ல செரிமான சக்தியை தருகிறது.
100 கிராம் வடித்த சாதத்தில், 3.5 மி.கிராம் இரும்பு சத்து இருக்கும். அதே சாதத்தை பழையதாக 12 மணி நேரம் ஊற வைத்து சாப்பிடும் போது, 73.9 மி.கிராமாக அதிகரிக்கிறது. கால்சியம் சத்து, இதய ஆரோக்கியத்திற்கு அவசியமான மெக்னீசியம், செலீனியம், பொட்டாசியம் அதிகம் உள்ளது.
எங்கள் ஆராய்ச்சியில் பல்வேறு இயற்கை சூழலில் பலவித அரிசி வகைகளை பயன்படுத்தினோம். கடலுக்கு அருகில், உயரமான இடங்களில் சாதத்தை புளிக்கவைக்கும் போது, நுண்ணுயிரிகளின் உற்பத்தி அபரிமிதமாக இருப்பதை காண முடிந்தது.
டாக்டர் ஜெஸ்வந்த், தலைவர்,
குடல், இரைப்பை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை துறை,
ஸ்டான்லி அரசு மருத்துவமனை,
சென்னை.
stanleygastro@yahoo.com
குடல் கோளாறுக்கு பழைய சோறு
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!