நம்முடைய உடலின் மொத்த அதிர்வுகளும் தலையில் இருந்தே ஆரம்பிக்கிறது. மூளை, முதுகுதண்டு இணைந்த, உடலின் இயக்கத்திற்கு பிரதானமான மத்திய நரம்பு மண்டலம், மூளை, முதுகுதண்டை மற்ற உடல் பாகங்களுடன் இணைக்கும் புற நரம்பு மண்டலம ஆகிய இரண்டும், மூளையில் உள்ள நரம்பு திசுக்களில் இருந்து தான் உருவாகிறது. ஆரோக்கியமாக வளர்வதற்கு செடியின் வேரை கவனமாகப் பாதுகாப்போமோ அது போல, தலையை பாதுகாத்து, நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைப்பது அவசியம்.
இதற்கு, சிரோதாரா, சிரோ பிட்சு, அப்யங்கம், சிரோ வஸ்தி என்ற நான்கு மருத்துவ முறைகள் ஆயுர்வேதத்தில் உள்ளன. இவற்றில், சிரோதாரா பற்றிதான் பேசப் போகிறோம்.
சிரோதாரா - சிரஸ் என்றால் தலை, தாரை என்பது ஒரு மெல்லிய நீர்வீழ்ச்சி மாதிரி, தாரையாக கொட்டுவது, இப்படி தலை மேல் தாரையாக திரவம் கொட்டும் போது, உடலின் அதிர்வுகள் எல்லாம் ஒருநிலைப்படும்.
பானையில் கட்டி தொங்க விட்ட மூலிகை எண்ணெய் நெற்றிப் பொட்டில் சொட்டு சொட்டாக வேகமாக விழும். உடம்பில் சக்கரங்கள் இருக்கும் இடங்களில் ஒன்றான நெற்றிப் பொட்டில் விழும் எண்ணெய் அங்கிருக்கும் சக்கரத்தையும் மர்மத்தையும் பாதுகாத்து, நரம்பு மண்டலம் முழுவதையும் கட்டுக்குள் கொண்டு வந்து விடும்.
மன அழுத்தம், சைனசைடிஸ், மைக்ரேன் தலைவலி, துாக்கமின்மை, முடி உதிர்வது, கிட்டப் பார்வை, துாரப் பார்வை, காது கேளாமை, நாள்பட்ட சைனஸ், தோல் நோயான சோரியாசிஸ், பக்கவாதம், அல்சைமர், பார்கிசன்ஸ் என்று எங்கெல்லாம் நரம்பு மண்டல பலவீனத்தால் பிரச்னைகள் உள்ளதோ, சிரோதாரா சிகிச்சையில் நரம்புகள் பலப்பட்டு, நல்ல பலனைத் தருவது ஆராய்ச்சிகளில் உறுதியான ஒன்று.
மூலிகை எண்ணெய்கள் பயன்படுத்தும் தைல தாரா, வெண்ணெய் நீக்கிய நீர் மோரில் சிறிது நெல்லிக்காய், மருந்து கஷாயங்கள் சேர்த்து, வெட்டி வேர் போட்டு தரப்படும் தக்ர தாரா என்று இரு வகைகள் உள்ளன. தக்ர தாரா சிகிச்சை செய்தால் வேறு எந்த மருந்தும் தேவைப்படாமல், ஆழ்ந்த துாக்கம் வரும். நாள்பட்ட ரத்த அழுத்தம் மெதுவாக குறையும். மருந்து, மாத்திரைகளை மெதுவாக குறைக்க முடியும்.
மனநல கோளாறுகளுக்கு பாரம்பரிய மருந்துவம் செய்வதால், அதிக சிரமமில்லாமல் மன வலிமையை அதிகரிக்க முடியும். மற்ற மருந்து, மாத்திரைகளை நீண்ட நாட்கள் சாப்பிடும் போது, அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம். அலோபதி மருந்துகள் சாப்பிடுபவர்கள், அத்துடன் சேர்த்து ஆயுர்வேத சிகிச்சையையும் செய்தால், பக்க விளைவுகள் குறையும் வாய்ப்புகள் உள்ளன.
நாள் முழுக்க மின்னணு சாதனங்களைப் பார்த்து, இந்திரியங்களின் பலம் குறைந்து போகும் சூழலில் இருப்பவர்கள், குறிப்பாக ஐ.டி., ஊழியர்கள், இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் ஆட்டிசம், நினைவாற்றல், கவனக் குறைபாடுகளை இந்த சிகிச்சையால் சரி செய்யலாம்.
பிரச்னை இருப்பவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை, தேவைக்கு ஏற்ப ஏழு, 14, 21 நாட்கள் சிகிச்சை செய்யலாம். ஆரோக்கியத்தை மேம்படுத்த, ஏழு நாட்கள், ஆண்டிற்கு ஒரு முறை, பிரச்னை இல்லாதவர்களும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
சிரோதாரா சிகிச்சையை முறையாக பயிற்சி பெற்ற ஆயுர்வேத மருத்துவரின் மேற்பார்வையில் மட்டுமே செய்ய வேண்டும்.
டாக்டர் சுதீர் ஐயப்பன்,டாக்டர் மீரா சுதீர்,
ஸ்ரீஹரீயம் ஆயுர்வேதம்,சென்னை.
99623 50351, 86101 77899
ஆரோக்கியமான சிரசிற்கு 'சிரோதாரா'
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!