உடல் எடையை அதிகரிக்கும் திறன் பால் மற்றும் பால் பொருட்களுக்கு உண்டு. இதற்கு விதிவிலக்கு மோர். ஒரு டம்ளர் மோரில் 220 மி.கி., கால்சியம் உள்ளது. தினசரி தேவை 1,200 மி.கி., உடலை குளிர்விக்கும் தன்மை மோருக்கு உண்டு. நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. வயிற்றுப்புண்ணை குணமாக்கும் இயற்கையான 'ஆன்டாசிட்' மோர்.
திராட்சை, ஆரஞ்சு பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பவர்கள், தாராளமாக தினமும் கறுப்பு திராட்சை சாறில் உப்பு சிறிது சேர்த்து குடித்தால் கபம் சேராது. தயிரில் நீர் சேர்த்து கலக்குவது மோர் ஆகாது. பாரம்பரிய முறையில் தயிரை கடைந்து, திரண்ட வெண்ணெயை எடுத்த பின் கிடைப்பது நீர் மோர். உடல் எடை குறைய விரும்பினால், தினமும் ஒரு வேளை மோரை மட்டும் குடிக்கலாம்.
- ஸ்வஸ்தியா ஆயுஷ்
தயிரில் நீர் சேர்த்ததால் மோர் ஆகாது!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!