என்ன தான் விதவிதமான பற்பசைகளை உபயோகித்தாலும், அவ்வப்போது, 'மவுத் வாஷ்' போட்டு வாய் கொப்பளித்தாலும், சிலருக்கு வாய் துர்நாற்றம் போகாது. இதற்கு காரணம், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் வெளியிடும் ஆவியாகும் தன்மையுள்ள 'சல்பர்' மூலக்கூறுகள். இவை பற்களுக்கிடையில் தங்கும் உணவுத் துகள்களுடன் சேர்ந்து, வாயில் துர்நாற்றத்தை தருகின்றன.
'சூயிங்கம்' மெல்வது, டாக்டரிடம் சென்று அவ்வப்போது சுத்தம் செய்வது என்று வழக்கமாக செய்வதைவிட 'புரோ பயாடிக்' எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ள இணை உணவுகளை, எடுத்துக் கொள்வது சிறந்தது.
இவற்றை விட அதிக பலன் தரக் கூடியது தயிர். தினசரி தயிர் சாப்பிடும் போது, இவற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், துர்நாற்றம் தரும் வேதிப் பொருளை அழித்து விடுவதை, 7 - 70 வயது உள்ளவர்களிடம் செய்த ஆய்வில் உறுதியானது.
- பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் ஓபன்.
வாய் முழுதும் வாசனையை தரும் தயிர்!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!