கைவரி சம்பா பாரம்பரிய ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம்மலையாங்குளம் கிராமத்தைச்சேர்ந்த இயற்கை பெண் விவசாயி முனைவர் என்.மகாலட்சுமி கூறியதாவது:
பாரம்பரிய ரகத்தில், கைவர சம்பா என, அழைக்கப்படும் கைவரி சம்பா நெல் தனி ரகமாகும்.இது, 135 நாளில் விளைச்சல் தரக்கூடியது.
இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் நெல் இருக்கும். இதன் அரிசி, சிவப்பு நிறத்தில் இருக்கும்.
இந்த ரக நெல், எப்போதும் தண்ணீர் தேங்கும் நிலத்திலும் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில், 18 நெல் மூட்டைகள் வரையில், மகசூல் பெறலாம். குறிப்பாக, கைவரி சம்பா நெல்லில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு தன்மை இருப்பதால், நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அறவே இல்லை.
இந்த அரிசியில் 'செலியம்' என்னும் வேதிப்பொருள் இருப்பதால், குடலில் ஏற்படும் பல வித தொற்றுகளை அறவே அழிக்க கூடிய தன்மையுள்ளது.
மேலும், நீரிழிவு நோயுற்றவர்கள் உணவாக எடுத்துக்கொண்டால், சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: என்.மகாலட்சுமி,
98414 42193
குடல் நோய் கட்டுப்படுத்தும் கைவரி சம்பா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!