Advertisement

அதிக மகசூலுக்கு ஆந்திரா ரக நெல்

ஆந்திரா- 1156 ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி வே.பரசுராமன் கூறியதாவது:

எங்களுக்கு சொந்தமான நிலத்தில், ஆந்திரா- 1156 ரக நெல் சாகுபடி செய்துள்ளேன். இது, பத்துக்கு பத்து ரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒட்டு ரக நெல்லாகும். நடவு செய்த நாளில் இருந்து, 135 நாளில் அறுவடைக்கு வரக்கூடிய 'மோட்டா' ரக நெல்லாகும்.

இதில், பிற ரகங்களை காட்டிலும், கூடுதல் களைப்பு திறன். நோய் மற்றும் பூச்சி தாக்கம் குறைவாவே உள்ளது. நீர் பாசனம் மற்றும் உரம் நிர்வாகம் முறையாக கையாண்டால், ஒரு ஏக்கருக்கு 50 மூட்டைகள் வரையில் மகசூல் பெறலாம் என, முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர்.

எங்கள் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், ஆந்திரா -1156 ரக நெல் சாகுபடி செய்து, அதிக மகசூலை ஈட்டியுள்ளார். அதை பார்த்து நானும் சாகுபடி செய்துள்ளேன். அவர் எடுத்த மகசூலை காட்டிலும் கூடுதல் மகசூல் பெறமுடியும் என, நம்பிக்கைஉள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: வே.பரசுராமன்
99521 23682

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement