நம் நாட்டில், கோவா மாநிலம், 3 ஆயிரத்து,702 சதுர கி.மீ., பரப்பளவு உள்ளது. பறவைகள் வசிக்கும் சூழல் நிறைந்தது. இங்குள்ள, மலை, காடு, நதிகள் பறவைகள் வாழ உகந்ததாக உள்ளன. மண்டோவி நதி மற்றும் அதன் கிளை நதிகளுக்கு நீர் வாழ் பறவையினங்கள் அதிகம் வருகின்றன.
இங்கு, 350க்கும் மேற்பட்ட பறவை இனங்களை பார்க்க முடியும். இவற்றில், பொன்நிற முதுகு மரங்கொத்தி, பர்ப்பிள் ஹெரான், கிரே ஹெரான், நைட் ஹெரான், இண்டியன் ரிவர் டெர்ன், ஜங்கில் பாப்ளர் போன்றவை அடங்கும். இங்கு வரும் சுற்றுலா பயணியர், அரிய வகை பறவைகளையும் பார்த்து மகிழ்கின்றனர்.
கோவா பறவைகள்!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!