தேவையான பொருட்கள்:
ஆவாரம் பூ - 1 கப்
தக்காளி - 2
வெங்காயம் - 100 கிராம்
பாசி பருப்பு, மஞ்சள் துாள், புதினா, எலுமிச்சை சாறு - சிறிதளவு
நல்லெண்ணெய், உப்பு, மிளகு துாள், சீரக துாள், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
நல்லெண்ணெய் காய்ந்தவுடன், நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கவும். பின், சுத்தம் செய்த ஆவாரம் பூவை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
அதில், வேக வைத்த பாசி பருப்பு, உப்பு, மிளகு துாள், மஞ்சள் துாள், சீரக துாள் சேர்த்து கொதித்ததும், நறுக்கிய புதினா, எலுமிச்சை சாறு கலந்து இறக்கவும்.
சுவை மிக்க, 'ஆவாரம் பூ சூப்' தயார். அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர்!
- வெ.பத்மாவதி, சென்னை.
தொடர்புக்கு: 99657 93050
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!