என் வயது, 57; சிறுவர்மலர் இதழை, நீண்ட காலமாக படித்து வருகிறேன். பரிசு போட்டியில் பங்கேற்ற அனுபவமும் உண்டு. அந்த காலத்தில், பலமுக மன்னன் ஜோ, எக்ஸ்ரே சிறுவன் போன்ற பகுதிகள் என்னை மிகவும் கவர்ந்தவை.
தற்போது, 'இளஸ்... மனஸ்...' தொடர் சிறுவருக்கு மட்டுமின்றி, பெரியோருக்கும் பயனுள்ளவற்றை நயமாக விளக்குகிறது. பணம் சேமிப்பது, பயனுள்ள வழியில் செலவழிப்பது, சிக்கனமாக இருப்பது, வீடு கட்டுவது, உடல்நலன் பேணுவது போன்ற, ஆக்கபூர்வ விஷயங்களை, சிறுவர்மலர் இதழில் படிப்பேன் என எதிர்பார்க்கவில்லை.
அவற்றை எல்லாம் தரும் வகையில், சிறுவர்மலர் இதழின் இதயமாக விளங்குகிறது, 'அதிமேதாவி அங்குராசு!' பகுதி. பழைய நினைவுகளை வருடும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி இதம் தருகிறது. இப்படி சிறப்பு அம்சங்களை தாங்கியுள்ள சிறுவர்மலர் இதழுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்!
- எஸ்.பேபி சசிகலா, சென்னை.
தொடர்புக்கு: 89393 42126
வீ டூ லவ் சிறுவர்மலர்!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!