Advertisement

வங்கியில் சிறப்பு அதிகாரி காலியிடங்கள்

பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் : ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பிரிவில் ஐ.டி., 32, ரிஸ்க் மேனேஜர் 18, டெக்னிக்கல் ஆபிசர் 15, டேட்டா இன்ஜினியர் 9, பைனான்சியல் அனாலிஸ்ட் 8, கிரடிட் ஆபிசர் 6, சட்ட அதிகாரி 5, செக்யூரிட்டி 3, ரிஸ்க் மேனேஜர் 3 உட்பட மொத்தம் 110 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங், பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தொடர்புடைய பணியில் அனுபவம் தேவைப்படும்.

வயது : 1.7.2022 அடிப்படையில் 35, 40, 45, 50 என மாறுபடுகிறது. இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : சான்றிழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175

கடைசிநாள் : 17.10.2022

விபரங்களுக்கு : centralbankofindia.co.in

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement