Advertisement

துணை ராணுவத்தில் 540 பணியிடங்கள்

துணை ராணுவ படைகளில் ஒன்றான மத்திய தொழில் பாதுகாப்பு படையில் ( சி.ஐ.எஸ்.எப்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் : அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோகிராபர்) 122, ஹெட் கான்ஸ்டபிள் (மினிஸ்டெரியல்) 418 என மொத்தம் 540 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ஸ்டெனோகிராபர் பதவிக்கு நிமிடத்துக்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்து திறன் வேண்டும். மினிஸ்டெரியல் பதவிக்கு கம்ப்யூட்டரில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் தேவைப்படும்.

வயது : 25.10.2022 அடிப்படையில் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 25.10.2022

விபரங்களுக்கு : cisfrectt.in

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement