Advertisement

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 42; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். மும்பை சக்தி மில்லில் பணியாற்றிய என் தந்தை, சிறுவர்மலர் இதழ் ஆரம்பித்த காலத்தில் இருந்தே பிரியமுள்ள வாசகர். அதில் வெளிவரும் கதைகளை, எனக்கு புகட்டுவார். இதுவே, சிறுவர்மலர் மீது விருப்பம் ஏற்பட வைத்தது. சிறிது சிறிதாக வாசிக்க துவங்கினேன்.

ஸ்கூல் கேம்பஸ், மொக்க ஜோக்ஸ், சிறுகதைகள், தன்னம்பிக்கை தரும் கட்டுரைகள், மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன் என, அனைத்தும் எல்லா வயதினருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

அலுவலக பணியின் போது சிறுவர்மலர் வாசிப்பதை கண்டு, 'நீ இன்னும் சின்ன பிள்ளையா...' என நக்கலடிப்பர், சக ஊழியர்கள். படித்ததை பகிர்ந்து அவர்களை வாயடைக்க வைப்பேன்; வாசகராகவும் மாற்றுவேன். என் வாரிசுகளுக்கும் வாசிக்கக் கற்றுக் கொடுக்கிறேன். எண்ணற்ற வகையில் நன்மைகள் தரும் சிறுவர்மலர் இதழ், பல்வேறு தரப்பு மக்களுக்கும், பலன் தர நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை உதிர்க்கிறேன்!

- முஹம்மது, திருநெல்வேலி.
தொடர்புக்கு: 90953 23075


Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement