மூலிகை மருத்துவத்தில், கால்நடைகளுக்கு நஞ்சுக்கொடி அகற்றுவது குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் கால்நடை மருத்துவ பல்கலை உதவி பேராசிரியர் முனைவர் ரா.துரைராஜன் கூறியதாவது:
கறவை மாடுகள் கன்று ஈன்ற பின், ஆறு மணி நேரத்தில் நஞ்சுக்கொடி தானாக வெளியேறும். சில சமயம், எட்டு முதல் 10 மணி நேரம் வரை, நஞ்சுக்கொடி விழாமல் இருக்கும். இந்நேரத்தில் கால்நடை மருத்துவரிடம் சென்று, கவனமாக நஞ்சுக்கொடி அகற்ற வேண்டும்.
கால்நடை வளர்ப்போரே அகற்ற முயற்சிக்க கூடாது. அவ்வாறு செய்தால், கர்ப்பப்பை கிழிந்து, மாடுகள் இறக்க நேரிடலாம். இதை தவிர்க்க, மூலிகை வைத்தியத்தில் வழி இருக்கிறது. ஒரு முள்ளங்கி, ஒன்றரை கிலோ வெண்டைக்காய், தேவையான அளவு வெல்லம், உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.
கன்று ஈன்ற இரண்டு மணி நேரத்தில், ஒரு முள்ளங்கியை, மாட்டிற்கு உண்ண கொடுக்க வேண்டும். அப்போதும், நஞ்சுக்கொடி வெளியேறவில்லை எனில், எட்டு மணி நேரத்திற்கு பின், ஒன்றரை கிலோ வெண்டைக்காயை இரண்டாக வெட்டி வெல்லம், உப்புடன் சேர்த்து தர வேண்டும். வாரம் ஒரு முறை, ஒரு முழு முள்ளங்கியை, நான்கு வாரம் கொடுத்து வந்தால், நஞ்சுக்கொடி தானாக விழுந்துவிடும். மாடுகள் இறப்பு தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: ரா.துரைராஜன் - 80981 22345
கால்நடை நஞ்சுக்கொடிமூலிகை மருத்துவத்தில் அகற்றலாம்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!