Advertisement

நெற்பயிரில் கூடுதல் மகசூலுக்கு வாய்மடை கரைசல் கைகொடுக்கும்

வாய்மடை கரைசல் தயாரிப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், படுநெல்லி கிராமத்தைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரி விவசாயி எஸ்.கோகுல் கூறியதாவது:

எங்களுக்கு சொந்தமான நிலத்தில், பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்கிறேன். ஒற்றை நாற்று நடவு முறையில், துாயமல்லி பாரம்பரிய ரக நெல் பயிரிட்டுள்ளேன்.நடவு செய்த இளம் பயிர் வளர்வதற்கு, வேம்பு, புங்கன், எருக்கன் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட செடிகளை வெட்டி, ஒரு கூடை பசுஞ்சாணத்துடன் சணல் சாக்கு பையில் கொட்டி வைக்க வேண்டும்.

இந்த பையை, வயலுக்கு தண்ணீரை பாய்ச்சும் வாய்மடை பகுதியில் வைத்து, தண்ணீரை பாய்ச்ச வேண்டும். மேற்கண்ட கரைசல் தண்ணீரில் கலந்து நிலத்தில் பாய்ந்து, புதிய மண் புழுக்கள் உற்பத்தியாக காரணமாகிறது. இதனால், மண் வளம் மேம்பட்டு நெல் பயிர் செழுமையாக வளரும்.எப்போது வேண்டுமானாலும் இம்முறையை செய்யலாம்.

ஒரு முறை தயார் செய்து வாய்மடை அருகே வைத்தால், ஒரு வாரம் இந்த கரைசல் பயன்படும். இவ்வாறு செய்வதால், இயற்கை விவசாயத்தில் வழக்கமான மகசூலைவிட கூடுதலாக கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு:எஸ்.கோகுல் - 90878 02435

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement