Advertisement

பச்சரிசி மா பயிரில் ஆண்டு முழுதும் மகசூல்

பச்சரிசி மா சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த, விவசாய பட்டயம் படித்த முன்னோடி விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:

நம் மண்ணில், கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும் பழங்களை சாகுபடி செய்யலாம். அந்த வரிசையில், பச்சரிசி மா எனும் வெள்ளரி மா பயிர் சாகுபடி செய்துள்ளேன். இந்த மாஞ்செடிகளை மாடி தோட்டம் மற்றும் நிலங்களில் பயிரிடலாம். கோடை மற்றும் மழை என, இரு காலங்களிலும் மகசூல் கொடுக்கும்.

நிலத்தில் சாகுபடி செய்தால், மாம்பழம் இல்லாத சீசனில் கொத்து கொத்தாக காய்பிடித்து நல்ல விளைச்சல் தரும். இதனால், கூடுதல் வருவாய் கிடைக்கும். மாடி தோட்டத்தில் பயிரிட்டால், விரும்பும் நேரத்தில் காய் பறித்து சாப்பிடலாம். புளிப்பு சுவை அறவே இருக்காது.

மாம்பழம் சீசன் இல்லாத நேரத்தில் ஊறுகாய் போட்டால், இரட்டிப்பு வருவாய்க்கு வழிவகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு:பி.கிருஷ்ணன் - 98419 86400

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement