Advertisement

யானை காது அத்தியில் ஊறுகாய் தயாரிப்பிலும் வருவாய்

யானை காது அத்தி பழச்செடி சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், காளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பட்டதாரி, இளைஞர் எம்.ராஜிவ்காந்தி கூறியதாவது:

என் தோட்டத்தில், வரப்பு பயிராக யானை காது அத்தி பழச்செடி நட்டுள்ளேன். கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் விளையும் இந்த ரகத்தை, நம் ஊரின் மலை மண்ணில் பயிரிட்டேன். எப்படி வருமோ என நினைத்தேன். ஆனால், மற்ற ரகங்களைவிட மகசூல் அதிகமாக கொடுக்கிறது. ஆண்டு முழுதும் காய்கள் காய்க்கின்றன.

யானை காது அத்தி, மரத்தின் அடியில் கொத்து கொத்தாக காய்க்கும். அதன் பழம் ஊதா நிறத்தில் இருக்கும். அதிக சுவையுடன் இருப்பதால், ஜூஸ் போடுவதற்கும் பயன்படுத்தலாம். இதன் காய்களில், ஊறுகாய் தயாரித்து வருவாய் ஈட்டலாம்.

நான் வீட்டு தேவை மட்டுமின்றி விற்றும் வருகிறேன். விவசாயிகளின் விற்பனை திறனை பொறுத்து, வருவாய் ஈட்ட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: எம்.ராஜிவ்காந்தி -- 89402 22567

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement