Advertisement

வறட்சியிலும் அசத்தும் குழியடிச்சான் ரக நெல்

பாரம்பரிய ரக குழியடிச்சான் நெல் சாகுபடி குறித்து, இயற்கை பெண் விவசாயி முனைவர் என்.மகாலட்சுமி கூறியதாவது:

பாரம்பரிய ரகத்தில், குழியடிச்சான் நெல் தனி ரகமாகும். 125 நாளில் விளைச்சல் தரக்கூடியது.நெல், மஞ்சள் நிறத்திலும், அரிசி, சிவப்பு நிறத்திலும் இருக்கும். குறிப்பாக, கோடை வெயிலில் தாங்கி வளரக்கூடியது.

மேலும், உவர் நிலம் எனும் உப்பு நீரில்கூட சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில், 20 மூட்டைகள் மகசூல் கிடைக்கும். அரிசியாக மாற்றி விற்பனை செய்யலாம். இந்த அரிசியில், அதிக நார்ச்சத்து நிறைந்திருப்பதால், பாலுாட்டும் பெண்களுக்கு பால் சுரக்கும் தன்மை அதிகரிக்கும். தவிர, குடல் புண், அது சார்ந்த நோயை கட்டுப்படுத்தும் தன்மை உடையது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: என்.மகாலட்சுமி - 98414 42193

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement